குழந்தைகள் பொதுவாகவே சொல் பேச்சு கேட்காது. அவை அதன் உலகத்தில் ராஜாவாகவோ ராணியாகவோ உலா வரும். ஆனால் ‘நீ சாதாரண குழந்தை தான், எனக்கு கீழ்தான் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். நான் கொடுப்பதை தான் சாப்பிட வேண்டும்.’ என ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டளைகளை விதித்து அவர்களை நமது உலகத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து வருகிறோம்.

‘ஏன் தான் வளர்ந்தோமோ, குழந்தையாகவே இருந்திருக்கலாமோ” என நாம் நினைத்தாலும் சில விஷயங்களில் நாம் குழந்தைகளுடன் முரண்படும் போது நமக்கு கோபமும் ஆத்திரமும் அதிகரித்து அவர்களை அடிக்கவும் பாய்கிறோம். சில சமயம் அடித்து விட்டு நாம் அமர்ந்து அழுகிறோம். அப்படி ஒரு குழந்தையை அடிக்கலாமா? அடிச்சு தான் ஒரு குழந்தையை திருத்த வேண்டுமா? அடிக்காமல் திருத்த என்ன வழி? அடிப்பதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை தற்போது பார்க்கலாம்.

பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அடிப்பதால் தான் குழந்தைகள் எதையும் புரிந்து கொள்ளும். அடித்தால் இதை சொல்லிக் கொடுத்து விடலாம் என நீங்கள் நினைத்தால் அது ஒரு சில நேரம் தவறாகலாம். ஒரு குழந்தையை அடித்தால் அது மிகவும் உன்னிப்பாக கவனமுடன் கற்றுக் கொள்வதாக நாம் நினைப்போம். ஆனால் உண்மையில் அது இல்லை என்கிறார் எலிசபெத். டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தில் ஹியூமன் டெவலப்மென்ட் அண்ட் ஃபேமிலி சயின்ஸ் துறையின் பேராசிரியராக பணிபுரியும் எலிசபெத் இது சம்பந்தமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

அடிப்பது நல்லதா?

ஒரு குழந்தையை அடிப்பதால் அது செய்யும் தவறில் இருந்து விடுபட்டு உடனடியாக அதனை தமது கவனத்திற்குள் கொண்டுவர முடியும். கட்டுக்குள் கொண்டு வந்து அமைதி படுத்த முடியும் என பெற்றோர் இதனை சிறந்த வழியாக சில சமயங்களில் சூழல் காரணமாக தேர்ந்தெடுக்கின்றனர்.

குழந்தைகளை அடித்தால். நீங்கள் விரும்புவது போல் உங்களது விருப்பப்படியான உங்களது கட்டளைக்கு உட்பட்ட செயலை செய்வார்கள். ஆனால் நீங்கள் இல்லாத சமயங்களில் அவர்களுக்கு என்ன வேண்டுமோ ?எதை செய்ய வேண்டுமோ? எப்படி செய்ய வேண்டுமோ ? அப்படித்தான் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்வார்கள். நீங்கள் இல்லாவிட்டாலும் குழந்தை சரியாக நடக்க வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் அடிக்காமல் சொல்லிக் கொடுக்க பழகுங்கள்.

கற்றலில் வலி அவசியமில்லை

ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள குழந்தைகள் வலியை அனுபவிக்க வேண்டிய அவசியம் தேவையே இல்லை என அந்த பேராசிரியர் குறிப்பிடுகிறார். நாம் வளர்ந்த ஒரு மனிதரிடம் இருக்கும் முரட்டுத்தனத்தை வெறுக்கிறோம் அல்லவா? அதே போல் நம்மிடம் இருக்கும் முரட்டுத்தனத்தை குழந்தைகள் வெறுக்க ஆரம்பிக்கலாம்.

நாளடைவில் அந்த வெறுப்பு நம் மீது வந்துவிடலாம். இது தற்போது நடக்காவிட்டாலும் அவர்களாக படித்து முடித்து வேலைக்கு சென்று சம்பாதித்து அவர்களுக்கு குடும்பம் வந்துவிட்டபின் “நீ இந்த வயதில் இந்த தவறுக்கு என்னை எத்தனை முறை அடித்தாய் அல்லவா?” என திருப்பி கேள்வி கேட்கும் போது அங்கு கைதியாக தலை குனிந்து நிற்க வேண்டியது நீங்கள்தான் மறந்து விடாதீர்கள்.

சிறுவயதில் நீங்கள்தான் உணவு, உடை இருப்பிடம் கொடுக்கும் இடத்தில் இருந்தீர்கள். எனவே கட்டுக்குள் வைத்திருக்க அடித்தீர்கள். ஆனால் உங்கள் பிள்ளையின் பராமரிப்பில் வாழும் நிலை வரும் போது, அடிவாங்கிய கசப்பான நினைவுகள் மனதில் இருந்து வெளிப்பட்டு, அதன் விளைவு உங்களைத் துன்புறுத்தலாம்.

ஒரு குழந்தையிடம் நாம் கண்ணியமாக நடந்து கொண்டால் அது எப்போதும் நம்மை கண்ணியமாக நடத்தும் எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் எதையும் மறந்து விடாதீர்கள்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE