எதிர் எதிராக களமாடும் ரஜினி- அஜித்?
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 170 ஆவது படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் அல்டிமேட் ஸ்டார் ஆன அஜித் குமாரும் விடாமுயற்சி என்று படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். ஏற்கனவே அவர் நடித்த ஒரு படத்தில் நெவர் எவர் கிவ் அப் என tagline இருந்தது போல் விடாமுயற்சி பற்றி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
பில்லா படத்தில் முதலில் நடித்தவர் ரஜினிகாந்த் தான். அந்த படத்தின் ரீமேக் என பேச்சு அடிபடும்போது அஜித்தும் ரஜினியும் ஒரே திரையில் தோன்றுவார்கள் என இருதரப்பு ரசிகர்களுமே எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி ஒரு சம்பவம் அப்போது நடக்கவில்லை.
இந்த நிலையில் ரஜினியும் அஜித்தும் நேருக்கு நேர் அமர்ந்து செஸ் விளையாடுவது போன்ற கெத்தான போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.
சோசியல் மீடியாக்கள் அனைத்திலுமே இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
இது எப்படி சாத்தியம் என அவர்களது தீவிர ரசிகர்கள் தற்போது தங்கள் தலைவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று அறியும் விதமாக இணையத்தில் தேடினர். அப்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டான நடிகர் அஜித்குமார் அஜர்பைஜான் நாட்டில் ஷூட்டிங்கில் இருக்கிறதாக சொல்லப்படுகிறது. அதை போல் ஜெயிலர் படத்தை அடுத்து 170 ஆவது பட பூஜைகள் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருவனந்தபுரத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு தற்போது நெல்லை பணங்குடி பகுதியில் படப்பிடிப்பில் பங்கேற்று உள்ளாராம். இருவரும் வெவ்வேறு திசைகளில் இருக்கும் போது இது எப்படி சாத்தியம்? என்று அனைவருக்கும் கேள்வி எழுந்தது.
விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் அஜித்தும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி ஒரு தரமான சம்பவம் நடக்கவில்லை என்பது உண்மையாகிவிட்டது. ரசிகர்களுக்கு செம ஹைப் கொடுத்த இந்த போஸ்டர் ஃபேன்மேடு என கூறப்படுகிறது.
இருதரப்பு ரசிகரும் சேர்ந்து ஒரு கலைஞராக இருந்த ஒரு நபர் தான் இந்த போஸ்டரை கெத்தாக டிசைன் செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இருவரும் எதிர் எதிரே அமர்ந்து கூலர் அணிந்து கொண்டு செஸ் விளையாடுவது போல அந்த போஸ்டர் உள்ளது.
அதிலும் குறிப்பாக இருவருமே அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் அஜித்குமார் ஆகிய இருவருமே சால்ட் அன்ட் பெப்பரில் வெறித்தனமாக இந்த போஸ்டரில் உள்ளனர். போஸ்டர் என்றாலும் இந்த காம்போ நிஜத்தில் நடந்தால் இருதரப்பு ரசிகர்களுக்குமே கொண்டாட்டம் தான்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.