BB Day 10 நிக்சனின் தன்மானத்தைத் சீண்டிய பிரதீப்

பிக் பாஸ் வீட்டுக்குள் இந்த முறை சண்டைக்கு பஞ்சமில்லை என்பது போல் ஆளாளுக்கு ஒருபுறம் ரவுண்டு கட்டி விவாதம் செய்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 6-ல் அசிம் இதே போன்ற ஒரு ஸ்ட்ரேட்டஜியை பின்பற்றி தான் வெற்றி பெற்றதாக நினைத்து பிரதீப்பும் அதே பாணியை பின்பற்றுகிறார். இப்படி செய்தால் தான் வெற்றி அடைய முடியுமோ என்று ஜோவிகாவும் நினைத்துக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை அவரும் அவ்வப்போது கத்தி சண்டையிட்டு தனது இருப்பை கண்டஸ்டன்ட்டாக பிக் பாஸில் நிலை நிறுத்திக் கொள்கிறார்.

பூர்ணிமாவும் மாயாவும் அவ்வப்போது புரளி பேசுவது போல் சுவரோரம் நின்று கொள்கின்றனர். யாரை முதலில் ஆட்டத்தில் இருந்து தூக்கலாம் என்று அவர்கள் தீவிரமாக டிஸ்கஷன் செய்து கொண்டிருக்கின்றனர். இதனிடையே கோல்டன் ஸ்டார் போட்டி பத்தாம் நாளும் தொடர்ந்தது.

தன்னை பலர் கலாய்த்தாலும் தன் கிட்ட இருக்கும் ராப் பாட்டை அழகான வரிகளை ரசித்து தனக்கும் கற்றுக் கொடு என பலரும் கேட்பதாக நிக்சன் கூறினார். உன் பெயரே மனசுல நிக்கல சுரேஷ் இன்னமும் உன்ன நெல்சன் தான் கூப்பிடுறாரு அப்படின்னு பிரதீப் கூற, பிக்பாஸ் கமல் கூட உங்க பேர பிரதீப் பதிலா பிரவீனு தான் கூப்பிட்டார் என நிக்சன் கவுன்டர் கொடுத்தார்.

இதை அடுத்து பேசின பிரதீப் தனது என்டர்டெயின்மென்ட் பற்றி பேசினார். அதிக அழுத்தம் தந்தால் வைரமாக மாறுவது மாதிரி எல்லாருடைய அழுத்தத்தையும் தாங்கி வைரமா மாறி இருக்க என பிரதீப் பேசும்போது, நீங்க ரூல்ஸ் படியே கேம் ஆடல என்று நிக்சன் கூறினார்.

கேள்வி கேட்க உனக்கு தகுதியே இல்ல உக்காரு என பிரதீப் சொன்னதும் அவருக்கு அது தன்மான பிரச்சினையாகி போய்விட்டது. கோல்டன் ஸ்டார் போட்டிகள் முடிந்த பிறகு கோல்டன் ஸ்டார் ஆனது போல் சுரேஷ்க்கு வழங்கப்பட்டது.

இது அனைத்தும் முடிந்த பிறகு, “உனக்கு தகுதி இல்ல உட்காரு” என பிரதீப் பேசியது நிக்சனுக்கு கோபத்தை வரவழைத்தது என சண்டையிட்டார். “உனக்கு தகுதி இல்லைன்னு உட்கார சொல்றதுக்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு” என கேள்வி கேட்டார்.

பிரதீப்பை எதிர்த்து பேசிய நிக்சன், “நீ யார் தெரியுமா?. . . ஷோவ நல்லா பாத்து ஃபுல் ஸ்ட்ரேட்டஜிய கத்துக்கிட்டு வந்துருப்ப, திடீர்னு லூசாவ, அழுது, அப்படியே சேஞ்ச் ஆவ. இந்த மாதிரி கேவலமா ஜெயிக்கணும்னு எனக்கு அவசியமில்லை. அடிப்படையில் இருந்து முன்னுக்கு வந்தவன் அடிபட்டு வந்தவன் நாள். என் திறமையக் காட்டத்தான் இங்க வந்து இருக்கேன்” என சவால் விட்டார்.

பதிலுக்கு பிரதிப்பும் மிச்சம் வைக்காது நிக்சனை வெளுத்து வாங்க, ஒருவகையாக அவர்கள் சண்டை முடிவுக்கு வந்தது. அடுத்து “குடியா ராணி” என்ற பெயரில் பிறந்தநாள் கேக் வர, ரவீனா சந்தோஷமாக அதனை வெட்டி கொண்டாடினார்.

சேமியா உப்புமா என்ற பெயரில் சேமியாவை கூல் போல் காட்சியதால் பெரிய வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கடுப்பாகினார். சின்ன வீட்டில் இருப்பவர்களை 6.30 மணிக்கு எழுப்பிய சின்ன பிக் பாஸ் சமைக்க சொன்னதும், பெரிய வீட்டில் இருப்பவர்களை 10 மணி வரை உறங்க அனுமதித்ததும் தான் சேமியா உப்புமா கூழ் போல வரக் காரணமோ என்னமோ எனத் தெரியவில்லை.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE