குழந்தைகளுக்கு தனியறை கொடுப்பது என்பது மேல்நாட்டு கலாச்சாரத்தில் தான் அதிகம் இருந்தது. ஆனால் தற்போது இந்திய கலாச்சாரத்திலும் குழந்தைகளுக்கு தனி அறை கொடுப்பதும், அதனை பார்த்து பார்த்து வர்ணிப்பதும், அழகு படுத்துவதிலும் குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்களும் அதிகம் விருப்பம் காட்டுகின்றனர்.

தங்கள் அறை இப்படி இருக்க வேண்டும், இந்த நிறத்தில் இருக்க வேண்டும். இது மாதிரியான வடிவில் கட்டில் இருக்க வேண்டும். இது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும். என்றெல்லாம் தங்களது அறைக்கான கனவுகளை சுமந்து பறக்கும் பட்டாம்பூச்சிகளாக வாழ்ந்து வருவார்கள் குழந்தைகள்.

ஒரு குழந்தைக்கு தனியாக ஒரு அறை கொடுப்பதற்கு முன் அதற்கான சரியான வயது என்ன? எந்த முறையில் தனி அறைக்குப் பழக்க வேண்டும் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

குழந்தைகளை உணர்ச்சிரீதியாக வலுப்படுத்தவே அவர்கள் தனியாக தூங்க வைக்க வேண்டும் என்பதை சில தரப்பினர் வலியுறுத்துகின்றனர். அவர்கள் தனித்தனியாக தூங்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்றும் இது குழந்தைகளின் மனதில் இருந்து பயம் நீங்கும் வகையில் அமையும் என்றும் கூறியுள்ளனர்.

குழந்தைகள் ஆரம்பத்திலிருந்து பெற்றோருடன் தூங்குவது பழகியதால் தனி அறையில் ஒரு வயதுக்கு மேல் தூங்க சிரமப்படுகின்றனர். எனவே அவர்களுக்குள் இருக்கும் இருட்டு, பேய் உள்ளிட்ட பயத்தை நீக்கவும் கெட்ட கனவு உள்ளிட்ட விஷயங்களை தனியாக கையாள பழகவும் தனியாக வாழ கற்றுக் கொள்ளவும் தனியறை அவர்களுக்கு உதவுமாம்.

எந்த வயதில் தனியாக தூங்க வைக்க வேண்டும்?

முதல் ஒரு வருடத்திற்கு குழந்தைகளை தொட்டிலில் உறங்க வைக்கலாம். அதன்பின் தங்களது கட்டிலிலேயே படுத்து தூங்க வைக்க கற்றுக் கொள்ளலாம். 5 முதல் 6 வயதில் அவர்கள் தனி அறையில் தூங்குவதை பழக்கப்படுத்தலாம்.

பழக்குவது எப்படி?

திடீரென ஒரு நாள் தனி அறையில் தூங்க வைக்கும் பழக்கத்தை உருவாக்க முயற்சித்தால் அது குழந்தைக்கு மன அழுத்தத்தையும் பயத்தையும் அதிகரிக்கலாம். எனவே, அன்பாகவும் பாதுகாப்பாகவும் அவர்களுக்கான தனி அறைக்கான தேவையை பற்றி எடுத்துச் சொல்லி உதவலாம். குழந்தையுடன் தூங்கும் போது அவர்களுக்கென தனி அறையில் பக்கத்து அறையில் புதிய படுக்கை புதிய தலையணை அவர்களுக்கு விருப்பமான கார்ட்டூன் பொம்மைகள் போட்ட பெட்ஷீட் உள்ளிட்டவை இருப்பதாக கூறி ஆர்வத்தைத் தூண்டலாம்.

அவர்கள் தூங்கும் வரை அங்கு இருக்கலாம். பல குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள் தனித்தனியாக தூங்க வேண்டும் என்பதை அவர்களே புரிந்து கொள்வார்கள். சில குழந்தைகள் வேறு அறைக்கு மாற்றும் போதெல்லாம் அவர்களுக்கு பிடித்த மாதிரியாக அறையில் ஏதேனும் ஒன்றை புதிதாக வைத்திருக்க வேண்டும்.

அவர்கள் அங்கு அதிக நேரம் செலவிடுவதாக இருக்க வேண்டும். அதன்பின்பு பகலில் அங்கு அதிக நேரம் செலவிடும் குழந்தைக்கு அந்த அறை அது புதிதாக தோன்றாது. அங்கேயே படுத்து உறங்கவும் அவர்கள் பழகிவிடுவார்கள். முதலில் பகல் நேர உறக்கத்தை அந்த அறையில் பழக்கலாம். பின்பு, இரவு நேரத்திலும் அங்கு உறங்குமாறும் பழக்கலாம்.

குழந்தையின் விருப்பத்துக்கு எதிரான அவர்களை தனியறைக்கு மாற்றவேண்டாம். அதேபோல், மன அழுத்தத்தால் பாதிக்கப்ட்டவராக இருந்தால் அந்த குழந்தையை தனி அறையில் விடுவது பாதுகாப்பானதுதானா? என மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

குறிப்பாக ஒரு தாய்க்கு தன் குழந்தையின் விருப்பமும், தேவையும் நன்கு தெரியும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE