புரட்டாசி மாசம் பிரியாணி ஏக்கமா? இதை செய்யுங்க
புரட்டாசி மாதம் என்பதால், பிரியாணிக்கு ஏங்கி தவிப்பவர்கள் ஏராளம் பேர் இருக்கலாம். அவர்களின் மனதுக்கு குளிரூட்டும் விதமாக, இல்லை இல்லை பிரியாணியின் ஏக்கத்தை போக்கும் விதமாக அதே போன்ற கம கம என தக்காளி சோறு செய்து சாப்பிட்டால் ருசியாக அருமையாக இருக்கும்.
அப்படி சிக்கனையும் மட்டனையும் நினைத்து அள்ளி வாயில் போட்டு புரட்டாசி ஏக்கத்தை புறந்தள்ளி கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த தக்காளி பிரியாணி எனப்படும் தக்காளி சோறு அமையும்.
அதை எப்படி செய்வது அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
3 தக்காளி
மிளகாய் தூள் 1.5 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
3/4 கப் பச்சை அரிசி/பாஸ்மதி/சீரகசம்பா
எண்ணெய் 4 ஸ்பூன்
பெருங்காயம்
கிராம்பு 3,
பெருஞ்சீரகம் 1/2 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை 1
நறுக்கிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
பூண்டு 3
உப்பு
செய்முறை
ஒரு கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய், பெருங்காயம் , இலவங்கப்பட்டை 1, கிராம்பு 3, பெருஞ்சீரகம் 1/2 டீஸ்பூன் சேர்க்கவும்.
நறுக்கிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, பூண்டு 3 சேர்க்கவும்.
இவற்றை நன்றாக வதக்கவும்.
பொடியாக நறுக்கிய 3 தக்காளியை சேர்க்கவும்.
முழுமையாக சமைத்து மென்மையாகவும் இருக்கும் வரை வதக்கவும். தக்காளி போட்டதும் மஞ்சள் தூள் உப்பு போட்டால் எளிதில் வெந்துவிடும்.
மிளகாய் தூள் 1.5 டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய் 1 டீஸ்பூன் மற்றும் கரம் மசாலா 1/2 தேக்கரண்டி சேர்க்கவும்.
உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கலாம். எண்ணெயை வெளியேற்றி, நறுமணத்துடன் ஒன்றாக வர வேண்டும்..
3/4 கப் பச்சை அரிசி அல்லது பாஸ்மதியோ சீரக சம்பா அரிசியையோ தனியாக சமைத்து, சமைத்த சாதத்தை சேர்த்து, அனைத்தையும் நன்கு கலக்கவும்.
அதன் மேல் கொத்தமல்லி தழை தூவி நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் புரட்டாசி என்பதால் சிக்கன் மட்டனை மனதில் நினைத்து கொண்டு தக்காளி சோறு அள்ளி சாப்பிட்டு இயக்கத்தை தீர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் நமக்கு வேறு வழி இல்ல ஆத்தா
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.