யூடியூபர் ஆன டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்து விடுமாறும், YouTube சேனலை மூடி விடுமாறும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் ஆர் டி ஓ வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 2033 வரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலு செட்டி சத்திரம் என்ற பகுதியில் டிடிஎஃப் வாசன் வீலிங் செய்ய முயன்றதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பாலு செட்டி சத்திரம் போலீசார் செப்டம்பர் 19ஆம் தேதி அவரை கைது செய்தனர்.

அக்டோபர் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு பின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது

ஏற்கனவே ஒரு வீடியோவில் ரசிகர்களுக்கு அளித்த விளக்கத்தில் பசி மயக்கத்தில் தான் தெரியாமல் ஆக்ஸிலரேட்டரை முறுக்கி விட்டதாகவும் அதனால் வீலிங் போல ஆகிவிட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால் ஜாமீன் கோரிய மனுவில் கால்நடைகள் திடீரென குறுக்கிட்டதால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறியிருந்தார். இது முன்னுக்குப் பின் முரணாக இருந்தது.

காவல்துறை தரப்பில் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விபத்தின் போது அவர் ரூ.3 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு ஆடை அணிந்து இருந்ததால் உயிதப்பினார். அவரது யூடியூப் சேனலை 45 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் அதில் பலர் தவறான வழிக்கு செல்கின்றனர்.

அதிக விலைக்கு உள்ள பைக்குகளை வாங்கி தருமாறு பெற்றோரிடம் தொந்தரவு செய்கின்றனர். அத்துடன் பைக்கை குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்துக்கு கேட்கும் நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பு உடை வாங்க பல பெற்றோரிடம் பணம் இருக்காது. ஆனால் வாநனைப் பின்தொடரும் ரூ.45 லட்சம் பைக் பிரியர்களில், பலரும் இவரை தவறான முன்னுதாரணமாக கொண்டு அடிக்கடி வேகமாக செல்வதும், ரேஸ் செல்வதும், வீலிங் செய்வதும் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும் என பல பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.

எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் மருத்துவ காரணங்களுக்காகவும் காயம் மோசமடைந்து வருவதால் சிகிச்சை பெற வேண்டி இருப்பதாலும் ஜாமீன் மனு வழங்குமாறு டிடிஎஃப் வாசன் தரப்பு கோரிக்கை விடுத்தது.

ஜாமீன் வழக்கைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிடலாம் என்றும், அவரது பைக்கை எரித்து விடலாம் என்றும் கருத்து தெரிவித்தது. சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். அது வேகமாக பைக்கை ஒட்டி அதனை யூடியூபில் நேரலை செய்து வந்தார். ஏற்கனவே ஜி பி முத்துவை பைக்கில் அமர வைத்து வேகமாக ஓட்டியது, காரை அதிவேகமாக ஓட்டி சுவற்றில் மோதி பின் அருகே வந்த இரு சக்கர வாகனத்தின் மீதும் மோதி நிறுத்தியது, பெட்ரோல் பங்க் முன்புறம் வைத்து மற்றொரு வாகனம் மீது மோதியது, மற்றொரு யூட்யூபருக்கு கொலை மிரட்டல் விடுத்தது என பல வழக்குகளின் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஹீரோவாக நடித்து வரும் மஞ்சள் வீரன் படமும் இதனால் பல பின்விளைவுகளை சந்தித்து வருகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE