TTF, YouTube சேனலை மூடி, பைக்க எரிங்க – நீதிபதி காட்டம்!

டி.டி.எஃப் வாசனின் ஜாமின் மனு வழக்கில் மிகவும் காட்டமாக நீதிபதி கருத்து கூறி உத்தரவிட்டுள்ளார்.

நெடுஞ்சாலையில் விதிகளை மீறி அதிவேகமாக வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதானவர் யூட்யூபர் டிடிஎஃப் வாசன்.

சென்னை வேலூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே. வேகமாகவும் கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் பைக்கை ஓட்டி வந்ததாக பாலு செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார் டிடிஎஃப் வாசன். யூ டியூபரான இவர் செப்டம்பர் 19ஆம் தேதி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் ஏற்கனவே ஜாமீன் கேட்டு 2 முறை தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே அவர் ஃப்ரண்ட் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகளே வெளியானது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் “சாலையில் மிதமான வேகத்தில் தான் சென்று கொண்டிருந்தார், கால்நடைகள் சாலையை கடந்ததால் திடீரென பிரேக் போட்டார்” எனக் கூறியிருந்தார். இதை அடுத்து “வாகனத்தின் முன்சக்கரம் தூக்கியதாகும் பிரேக் போடாமல் இருந்திருந்தால் கால்நடைகள் மற்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும்” என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே ஒரு முறை விபத்து பற்றிய வீடியோவை வெளியிட்டு இருந்த டிடிஎஃப் வாசன் “பசி மயக்கத்தில் தெரியாமல் ஆக்ஸிலரேட்டரை முறுக்கி விட்டதாகவும் முன்பக்க வீல் தூக்கி விட்டதாகவும்” கூறியிருந்தார்

தற்போது அளித்த ஜாமின் மனுவில் முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் அளித்திருக்கிறார்.

”சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை” ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். காயங்கள் மோசமாகி வருவதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்

அத்துடன் “நான் ஒரு அப்பாவி, எந்த ஒரு குற்றத்திலும் தான் ஈடுபடவில்லை” என்றும் தெரிவித்திருந்தார். ஏற்கெனவே காரை ஓட்டிச் சென்று சுவரிலும், அருகே வந்தவர் மீதும் மோதியதாக டிடிஎஃப் வாசன் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “youtube இல் டிடிஎஃப் வாசனை 45 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். ரூ.20 லட்சம் மதிப்பில் பைக்கை ஓட்டி விபத்து ஏற்படுத்தி, ரூ.2-ரூ.4 லட்சம் வரை உள்ள பாதுகாப்பு உடைகளை வாசன் அணிந்து இருந்ததால் அவர் உயிர் தப்பினார்.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதைப் பார்த்து இவரை பின்தொடரும் 45 லட்சம் இளைஞர்களில் சிலர் தங்கள் பெற்றோர்களிடம் குறைந்தபட்சம் ரூ. 2 லட்சத்துக்காகவாவது பைக் வாங்கி தரச் சொல்லி கேட்டு அடம்பிடிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளனர். அதுமட்டுமின்றி இது போன்ற அபாயகரமாக சாலைகளில் சாகசங்களில் ஈடுபடுவதாகவும், சிலர் அந்த சாகசத்தை பயன்படுத்தி எளிதில்தப்பி விடலாம் என்ற மனப்பாங்கு வந்துவிட்டு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதை அடுத்து உத்தரவிட்ட நீதிபதி, “முழுக்க முழுக்க விளம்பரத்திற்காகவும் பிற இளைஞர்களையும் சாலையில் சாகசம் செய்து பிறருக்கு விபத்து ஏற்படுத்தும் அளவில் அஜாக்கிரதையாகவும், தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளார்“ என்று கூறியுள்ளார். டிடிஎஃப் வாசனின் செயல் ஒரு பாடமாக பிறருக்கு அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

“மனுதாரர் டிடிஎஃப் வாசன் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும், ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கையில் ஏற்பட்ட காயத்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார். டிடிஎஃப் வாசனை youtube தளத்தை மூடி விட்டு பைக்கை எரித்து விடும்படி காட்டமாக கருத்து தெரிவித்தார் நீதிபதி.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE