பிக்பாஸில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்?

பிக் பாஸ் சீசன் 7-ல் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களிர் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்ற உத்தேசப் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 தமிழ் அக்டோபர் 1-ம் தேதி ஞாயிறு முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே பிக்பாஸ் தொகுப்பாளரும் நடிகருமான கமல்ஹாசனைப் போல் இந்த முறை ஒரு வீட்டுக்குப் பதில் 2 வீடுகள் உள்ளன. அதில் 2-வதாக உள்ள வீட்டுக்கு ஏற்கெனவே கேப்டன் விஜயைக் குறைவாக இம்ப்ரஸ் செய்தவர்கள் என்ற காரணத்துக்காக அனுப்பப்பட்டார்கள்.

இதனால், வீடே இரண்டாகிவிட்டது. ஒவ்வொருவருக்கும் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து மக்களை பொழுதுபோக்கும் பணிக்காக உள்ளே அனுப்பப்பட்டவர்கள், “நான், நானாக இருக்கிறேன்” என்றெல்லாம் கூறி சும்மா அமர்ந்திருக்க வேண்டாம் எனக் கூறுவதுபோல், இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

அப்படி பிக்பாஸ் ஒவ்வொருவருக்கும் எத்தனை சம்பளம் கொடுக்கிறது? என்பதற்கான உத்தேசப் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. ஒவ்வொருவருவக்கும் அவரவரின் சீனியாரிட்டிக்கும் பாப்புலாரிட்டிக்கும் ஏற்றார்போல் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவை எவ்வளவு என்பதைத் தற்போது பார்க்கலாம்.

கூல் சுரேஷ்

கூல் சுரேஷ் என்டர்டெய்ன்மென்ட்டுக்கு ஏற்றவர்தான். சில நேரங்களில் கோமாளியைப் போல், அவர் செயல்படுவார். அவரை யார் கலாய்க்காவிட்டாலும், தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டும் கன்டென்ட் கொடுப்பார். இவருக்கு சம்பளமாக தினமும் ரூ.18,000 வழங்கப்படுகிறதாம்.

பூர்ணிமா ரவி

அராத்தியாக யூடியூபில் அசத்திய பூர்ணிமா ரவியும் சீசன் 7 பிக்பாஸில் பங்கெடுத்துள்ளார். அவருக்கு பிக்பாஸில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும், ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படுகிறதாம்

ரவீனா தாஹா

பிக்பாஸ் சீசன் 7-ல் குட்டிப் பட்டாம்பூச்சியாக வலம் வரும் ரவீனா தாஹா, பிறரின் இடுப்பில் ஏறி குழந்தை போல் சுற்றுவதும், லவ் பைட் என்ற பெயரில் அன்பாகக் கடிப்பதுமாக நல்ல என்டர்டெயினிங் கன்டென்டைக் கொடுத்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படுகிறதாம்.

வினோஷா

பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மாவாக நடித்தவர் வினோஷா. இவர் தண்டனை பெற்று 2-வது வீட்டுக்குக் குடியேறியுள்ளார். அவருக்கும் சம்பளமாக நாளொன்றுக்கு ரூ.20,000 வழங்கப்படுகிறதாம்.

சரவண விக்ரம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் கண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்த சரவண விக்ரமுக்கு, ரூ.18,000 சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

யுகேந்திரன்

மலேசியா வாசு தேவனின் மகனும் நடிகருமான யுகேந்திரனுக்கு ரூ.27,000 சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

விசித்ரா

90ஸ்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகை விசித்ராவுக்கும் சம்பளமாக தினமும் ரூ.27,000 வழங்கப்படுகிறதாம்.

விஷ்ணு

ஆஃபீஸ் நாடகத்தில் நடித்த நடிகரான விஷ்ணுவுக்கு ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

பவா செல்லதுரை

எழுத்தாளரும் கதைசொல்லியுமான பவா செல்லதுரைக்கு சம்பளமாக தினமும் ரூ.28,000 வழங்கப்படுகிறதாம்.

ஐஷூவுக்கு ரூ.21,000, வழங்கப்படுகிறதாம். பிரதீப் ஆன்டனிக்கு ரூ.20,000, மணி சந்திராவுக்கு ரூ.18,000, விக்ரம் படத்தில் நடித்த மாயா கிருஷ்ணனுக்கு ரூ.18,000, அக்ஷயா உதயகுமாருக்கு ரூ.15,000, விஜய் வர்மாவுக்கு ரூ.15,000, ஜோவிகாவுக்கு ரூ.13,000, நிக்சனுக்கு சம்பளமாக ரூ.13,000, வழங்கப்படுகிறதாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE