பனியாரத்தில் இனிப்பு, காரம், பிளெய்ன் என பல வகைகள் உண்டு. ஆனால் பனியாரம் என்று செய்தாலே வழக்கமான இட்லி தோசைக்கு மாற்றாக இருப்பதாக கூறி அதிகமாகவே சாப்பிடுவார்கள் வீட்டில் உள்ள பிள்ளைகள். அதிலும் பழம் சாப்பிட மறக்கும் குழந்தைகளுக்கு இது போன்று பழத்தில் பனியாரம் செய்து கொடுத்து அசத்தலாம்.

வீட்டில் வாழைப்பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகள், மலச்சிக்கலால் தவிக்கும்போது என்ன செய்வதென்றே சில தாய்மார்கள் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் வாழைப்பழத்தை கொடுத்து விட வேண்டும் என்றும் பார்ப்பார்கள். ஆனால் எவ்வளவு போராடினாலும் அது நடக்காது. எனவே அந்த குறையை போக்க அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் எப்படி வாழைப்பழத்தை சேர்த்து கொடுக்கலாம் என்பது இந்த பழ பணியாரம் மூலம் சாத்தியமாகிறது. தற்போது இதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

250 கிராம் பச்சரிசி

அரை மூடி தேங்காய் துருவல்

வாழைப்பழம் 2

மண்டை வெல்லம் 200 கிராம்

சோடா உப்பு கால் தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

நெய் தேவையான அளவு

மாலை நேரம் பள்ளி முடித்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு சட்னியே செய்ய நேரம் இல்லாவிட்டாலும் இது போன்ற ஒரு இனிப்பான பலகாரம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சுவைப்பார்கள். அதிலும் பண்டிகை காலங்களில் ஏதேனும் இனிப்பு வகையான பொருட்களை செய்து கொடுக்க அவர்கள் கேட்கும் போது மிக மிக எளிமையாக இதை செய்து கொடுக்கலாம்.

சரி, எப்படி செய்வது?

முதலில் பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்

தண்ணீருடன் மண்டை வெல்லத்தை தட்டி போட்டு பாகு காய்ச்ச வேண்டும்

ஊற வைத்த அரிசியை நன்கு கழுவி விட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் தேங்காய், 2 வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து நல்ல மாவு போல அரைத்துக் கொள்ளவும்

அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

இனிப்பான பலகாரம் என்பதால் உப்பு சற்று குறைவாகவே சேர்த்துக் கொள்ளலாம். பின் கால் கரண்டி சோடா உப்பு சேர்த்துக் கொள்ளவும். நெய்யில் வறுத்த முந்திரி பருப்புகளை பொடியாக நறுக்கி இதனுள் சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளப் பாகுவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவை நன்கு கலக்க வேண்டும். வெள்ளத்தை முன்கூட்டியே வடித்துக் கொள்வது நல்லது. மாவை கலக்கியபின் 10 நிமிடம் வரை மூடி வைத்துக் கொள்ளவும்.

பனியார கல்லை அடுப்பில் வைத்து, அதில் நெய்யோ தேங்காய் எண்ணெயோ அல்லது வழக்கமான சமையல் எண்ணெயோ ஊற்றி கல்லை சூடு படுத்தவும்.

பிறகு அரைத்து மூடி வைத்தபின் நன்கு கலக்கி அதில் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

சுவையான பழ பணியாரம் ரெடி இதற்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை என்பதால் அப்படியே சாப்பிடலாம்.

கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்படும். இனிப்பு பனியாரங்கள் செய்து பல நாட்கள் இருக்கலாம். அல்லது ஒரே எண்ணையை திரும்ப திரும்ப பயன்படுத்தி செய்திருக்கலாம். அது ஆரோக்கியம் குறைவானதாகவே இருக்கும். அப்படிப்பட்ட இனிப்பு பனியாரத்தைக் கூட உங்கள் குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடுவார்கள் என்றால் நீங்கள் வீட்டிலேயே செய்து கொடுக்கும் ஆரோக்கியமான இந்த பழப்பனியாரம் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE