அயலான் ஆஸ்கர் வெல்லும் – ஸ்வீட் கொடுத்து ஏஆர் ரஹ்மான் வாழ்த்து
சின்னத்திரையில் அறிமுகமாகி, எஸ்கே எனச் செல்லமாக அழைக்கப்படுபவர் சிவகார்த்திகேயன். தென்னிந்திய சினிமாவின் ஷாரூக் என்றும் புகழப்பட்டார்.
தமிழில், எம்.ஜி.ஆர்-ன் உலகம் சுற்றும் வாலிபன், சிவாஜியின் திரிசூலம், ரஜினியின் முரட்டுக்காளை, கமலின் சகலகலாவல்லவன், பாக்யராஜின் முந்தானை முடிச்சு, விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன், பிரபுவின் சின்னத்தம்பி வரிசையில் வசூல் புரட்சியை நடத்தியதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இதற்குக் காரணம் தனது கலாய்க்கும் திறமையாலும், ஹியூமர் சென்சாலும் ஃபேமிலி ஆடியன்ஸ்-ஐ கவர்ந்தவர் சிவ கார்த்திகேயன். டாக்டர் படத்திலும் கூட சீரியசான காமெடியை செய்து அசத்தியிருப்பார். அந்த வரிசையில் பிரம்மமாண்ட பொருட்செலவில் உருவானதுதான் அயலான் திரைப்படம்.
படத்தின் பட்ஜெட் ரூ.120 கோடி. அதில் கிராஃபிக்ஸ் காட்சிகளை உருவாக்க மட்டுமே ரூ.70 கோடி ஆனதாகக் கூறப்பட்டது.
அயலான் படத்தில் வேற்றுகிரகவாசி பூமிக்கு வந்ததுபோல் கதை அமைந்துள்ளதாக போஸ்டரைப் பார்க்கும் போதே தெரிகிறது. டெட்டி படத்தில் ஒரு பொம்மையுடன் ஆர்யா அலைந்தது போல் அயலான் என்ற வேற்றுகிரக வாசியோடு சிவகார்த்திகேயன் நட்பாகப் பழகுவது போன்ற காட்சியமைப்புக்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
ஏஆர் ரஹ்மான் வாழ்த்து
படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணிக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் படத்தின் காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்து அசந்து போன அவர், இந்தப் படத்துக்குக் கண்டிப்பாக ஆஸ்கர் கிடைக்கும் எனக் கூறி முழு நம்பிக்கையைக் கொடுத்துள்ளார். அத்துடன் படக்குழுவுக்கு இனிப்பு வாங்கியும் சர்ப்ரைஸ் கொடுத்ததாகத் தெரிகிறது.
நேரம் எடுத்து அட்டகாசமான இசையை அமைத்துத் தருவதாகவும் ஏஆர் ரஹ்மான் கூறியதாக சொல்லப்படுகிறது. இசைப்புயலின் மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படும் இந்தப்படம் பற்றி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்துள்ளதா படம்?
தமிழில் எந்திரன் 2 தான் அதிக பொருட்செலவில் உருவான படமாக தொழில்நுட்ப ரீதியான படங்களில் முன்னிலையில் இருக்கிறது. அந்தப் படத்தை ஹாலிவுட் ரசிகர்களும் ரசித்தனர். அதுபோல் ஒரு படமாக அயலான் அமைந்தால் ஹாலிவுட் ரசிகர்களுக்கும் இப்படம் பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் டீசர் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது.
5 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட படம்
2018-ல் ரவிகுமார் இயக்கத்தில் ரகுல் பிரீத் சிங்கும் சிவகார்த்திகேயனும் நடித்த படத்துக்கு கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்தன. அக்டோபர் 6-ல் டீசர் வந்தாலும் 2024 பொங்கலுக்குத்தான் படம் வெளியாகம் என்றும் சொல்லப்படுகிறது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.