தங்கம் என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் பண நெருக்கடி காலத்தில் கைகொடுத்து வந்திருக்கிறது. வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் இதே நிலைதான். எந்தவொரு நாடு தனது அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் அதிக பணத்தைக்கையிருப்பு வைத்துள்ளதோ, அந்த நாடே சர்வதேச அரங்கில் அதிகம் மதிக்கப்படுகிறது.

அதேபோல்தான் வீடுகளிலும். அதிக நகை உள்ள பெரும்பாலான குடும்பத்தினருக்கு சபைதனில் மதிப்பு தேடி வருவதும் நாம் பல இடங்களில் கண்கூடாகக் கண்ட ஒன்றுதான்.

ஆபத்தான மருத்துவ செலவுகளுக்கு மட்டும் இல்லை. புதிய தொழில் தொடங்கவோ, நிலம் வாங்கவோ, வீடு கட்டவோ, மேற்படிப்புக்காகவோ நகைகள் அடகுக்கும், விற்பனைக்கும் சென்று வீட்டை எப்படியாவது காப்பாற்றிவிடும்.

அப்படிப்பட்ட தங்கத்தின் விலை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு குறைந்திருக்கிறது. 2023 அக்டோபர் 3 பிற்பகல் நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.5,290-க்கு விற்பனையாகிறது.

எனவே தங்கத்தை வாங்க நினைப்பவர்கள் தற்போது தங்களது கொள்ளலாம். ஒருவேளை இன்னும் குறையட்டும் வாங்கலாம் என நினைப்பவர்கள் முதலீட்டைப் பிரித்து வாங்கிக் கொள்ளலாம். அதாவது 10 பவுன் வாங்க வேண்டியிருந்தால், 6 பவுனை வாங்கிக் கொண்டு, மீதம் உள்ள 4 பவுனை வாங்குவது பற்றி பொறுமையாக காத்திருந்து ஆலோசிக்கலாம்.
புரட்டாசி முடிந்தபின் விசேஷ நாட்கள் அதிகம் வரக்கூடும் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். எனவே, விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது

பணத்தை வைத்திருந்தால் மட்டுமே தங்கம் வாங்க இது சரியானத தருணம். முதலீட்டுக்காக வாங்க நினைப்பவர்கள், கடன் வாங்கி வாங்க வேண்டியது பற்றி சிந்தித்து முடிவெடுக்கலாம்.

தங்கம் விலை குறைந்துள்ளதால் இது நீண்ட கால முதலீட்டுக்கான ஒரு வாய்ப்பாகவும் பாதுகாப்பாக பலன் ஈட்ட ஒரு சிறந்த தேர்வாகவும் தங்கம் அமைகிறது. மிகக் குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை ஆனது மாறக்கூடியதாக இருக்கலாம். ஆனால் மிக நீண்ட காலத்தில் அதன் மதிப்பு எப்போதுமே அதிகரித்திருக்கும்.

தங்கத்தை அலங்காரத்துக்காகவும் சமூகத்தில் ஒரு மதிப்பாக தங்களை காட்டிக் கொள்ளும் ஒரு ஆடம்பர உலோகமாகவும் இந்தியர்கள் கருதுகின்றனர். எனவே தான் அவர்கள் பெரும்பாலும் ஆபரணங்களாக தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். ஆனால் அதைவிட தங்கப்பத்திரம் முதலீட்டைப் பொறுத்தவரை அதிக லாபம் ஈட்டித் தரும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE