ஒரு மனிதன் கொடூர தாகத்தால் அவதியுறும்போது, அவருக்கு தண்ணீர் குடித்தால் புறையேறிவிடும் சூழல் மிகக் கொடுமையானது. எனவேதான் நாய்க்கடியானது கம்யூனிகபிள் என்ற பரவக்கூடிய நோய்களிலேயே மிகக் கொடூரமானது என அறிவுறுத்தப்படுகிறது. விலங்குகள் கடித்து வரும் ரேபீஸ் நோயின் முற்றிய அறிகுறிதான் நீர்வெறுப்பு நிலை. கவனம்.

நாய்க்கடியை பாம்புக்கடியைப் போல் கருதி சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிரிழப்பு அபாயம் தவிர்க்கப்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஒரு நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும், கடிக்க வரும்போது எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும்? கடிப்பதற்கு முன் ஒரு நாய் வெளிப்படுத்தும் அபாய அறிகுறிகள் என்னென்ன? என்பதை தற்போது பார்க்கலாம்.

நாய் கடிக்கப் போகும் அபாயத்திற்கான அறிகுறிகள்

நாயானது முறைத்தபடியே நின்று உற்றுப் பார்க்கும்.


அதன் கண்ணும் ஃபோகசும் உங்களை விட்டு மாறாது


பற்களை கோரமாகக் காட்டி உறுமும். இதை ஆங்கிலத்தில் கிரவுலிங் என அழைப்பார்கள்


சத்தமாகக் குரைக்கும். வழக்கத்தைவிட அதிக சத்தமாக இருக்கும்


பாய்ந்து வந்து கடிக்கும். ஓடித்தான் வரும் என நினைக்க வேண்டாம். பாயவும் செய்யும்.

நாய் கடித்துவிட்டால் என்ன செய்யனும்?

செய்ய வேண்டியவை:

நாய் பிரண்டினாலோ, கடித்தாலோ அந்த காயத்தை ஓடும் நீரில் 15 நிமிடங்கள் வரை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.


இது காயத்தில் இருந்து வைரஸை நீக்க வழிவகுக்கும்.


கடிபட்ட இடத்தில் கிருமி நாசினி பூச வேண்டும்.


இது ரசாயனம் மூலம் ரேபீஸ் வைரசை செயல் இழக்கச் செய்யும்.


காயத்தைச் சுற்றிலும், அதன் ஆழம் வரையிலும் இம்யூனோகுளோபின் ஊசி போட வேண்டும்.


இது அந்த வைரசை நியூட்ரலைஸ் செய்து அழிக்க உதவும்.


நாய்க்கு என்ன ஆனது என 10 நாட்களாவது கண்காணிக்க வேண்டும்.


ரேபீஸ் பாதித்த நாயாக இருந்தால் 10 நாட்களில் அதுவே இயற்கையாக இறந்துவிடும்.


0, 3, 7 மற்றும் 21 அல்லது 28 ஆகிய நாட்களில் தடுப்பூசிகளைத் தொடர்ந்து போட வேண்டும்.


கர்ப்பிணிகளை நாய்கடித்தால் உடனடியாக ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தவறினால், கருவில் உள்ள குழந்தைக்கும் ரேபீஸ் பாதித்துவிடும்.

செய்யக் கூடாதவை:

எக்காரணம் கொண்டும் காயத்தை வெறும் கைகளால் தொடக்கூடாது.


காயத்தின் மீது மண்ணை வைக்கக் கூடாது.


மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போடக்கூடாது.


தேங்காய் எண்ணெய் வைக்கக் கூடாது.


மூலிகைகள், சாக்பீஸ், வெற்றிலை வைக்கக் கூடாது.


காயம் பட்ட இடத்தில் எரிச்சல் இருந்தால், அந்த வைரஸ் எளிதில் நரம்புக்குள் நுழைய வழிவகுத்துவிடும்.


காயத்துக்குக் கட்டு போடவோ, தையல் போடவோ கூடாது.

நாய் நம்மைக் கடிக்க வந்தால் . . .

செய்ய வேண்டியவை:

நாய் கடிக்க வந்தால் கையில் கிடைத்த பொருட்களை வைத்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.


நாய் உங்களது அந்தரங்கப் பகுதி அருகே வந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


நாயை கண்கொண்டு அமைதியாக நின்று பார்க்க வேண்டும்.

செய்யக் கூடாதவை:

கத்தக் கூடாது. ஓடக்கூடாது.


கத்தினால் மனிதர்களுக்கு எப்படி பிடிக்காதோ, அதேமாதிரிதான் நாய்களுக்கு அது வெறியைத் தூண்டும்.


பயப்படாதது போல் நடிக்க வேண்டும். பயந்தால் பாய்ந்துவிடும்.


ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக நிற்க வேண்டும்.


ஏனெனில் பயந்துவிட்டால், உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது.


நாய் கடிக்கும்போது அதை அடிப்பது, உதைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டால் அது மிகவும் கோபமடையும்.

அதனால் பல் ஆழமாகப் பதியும். ரேபீஸ் கிருமித் தொற்றும் உடலில் ஆழமாக இறங்கும்.

நாய்க்கு ரேபீஸ் இருப்பதைக் கண்டறிவது எப்படி?

ஒரு நாய்க்கு ரேபீஸ் இருந்தால் அதன் எச்சில் மூலம் பரிசோதித்து கண்டறியலாம். அல்லது இறந்த பின் போஸ்ட்மார்டம் மூலம் அதன் மூளையில் இருந்து மாதிரியை எடுத்து ஆய்வு செய்ய வேண்டும்.

வீட்டில் வளர்க்கும் நாயாக இருந்தால் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் தடுப்பூசி போட்டே ஆக வேண்டும்

தடுப்பூசி போட்ட நாய் கடித்தாலும் பிரண்டினாலும்கூட மனிதர்களுக்கு தடுப்பூசி போடுவது அவசியம்

என்ன செய்யக் கூடாது?

முன்பின் தெரியாத நாயைப் பார்த்ததும் அதனைக் கொஞ்சுவதற்காக தூக்கக் கூடாது. அதுவே உங்கள் அருகில் வந்து அமர்ந்தால் ஒழிய அதனை நீங்கள் அணுகக் கூடாது.

நாயின் மனநிலையை அறிந்தே உரிமையாளராக இருந்தாலும் அதைக் கொஞ்ச வேண்டும்.

நாய் கடித்தால் உடனடியாக பெற்றோரிடம் சொல்லும் அச்சமற்ற சூழலை பெற்றோர் உருவாக்கித்தர வேண்டும். தாமதமாகி ரேபீஸ் பரவி ஹைட்ரோஃபோபியா எனும் நீர் வெறுப்பு நிலை வந்துவிட்டால் உயிரைக் காப்பாற்றுவதே கடினமாகிவிடும்.

எந்த காரணம் கொண்டும் தாமதப்படுத்தாமல் கடிபட்ட சில மணி நேரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE