என்ன தானம் செய்தால் என்ன பலன்?
தானத்தில் சிறந்தது அன்னதானம் எனக் கேள்விப்பட்டிருப்போம். அப்படி ஆன்மீக ரீதியாக என்னென்ன பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.
தானத்தின் பலன்கள்
அன்ன தானம் அன்னதானத்தால் கடன் தொல்லைகள் நீங்கலாம்
அரிசி தானம் முன்ஜென்ம பாவங்கள் விலகக் கூடும்
ஆடைகள் தானம் சுகபோக வாழ்வு அமைய வாய்ப்புள்ளது
பால் தானம் துன்பங்கள் விலகிச் செல்லலாம்
நெய் தானம் பிணிகள் நீங்கும் என நம்பிக்கை
தேங்காய் தானம் எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்ட வாய்ப்புண்டு
தீப தானம் முன்னோர்களின் ஆசிகள் கிட்டும் என நம்பிக்கை
தேன் தானம் புத்திர பாக்கியம் கிட்டலாம்
பூமி தானம் பிறவா நிலை உண்டாக வாய்ப்புண்டு
பழங்கள் தானம் மன அமைதி உண்டாகக் கூடும்
வஸ்திர தானம் ஆயுள் விருத்தி உண்டாகலாம்
கம்பளி தானம் வெண்குஸ்ட நோய்களின் அறிகுறிகளிலிருந்து மீளலாம்
கோ தானம் பித்ருக் கடன் நீங்க வாய்ப்புண்டு
தயிர் தானம் இந்திரிய விருத்தி உண்டாகக் கூடும்
நெல்லிக்கனி தானம் அறிவு மேம்படலாம்
தங்கம் தானம் தோஷம் நிவர்த்தியாகலாம்
வெள்ளி தானம் கவலைகள் நீங்கலாம்
கோதுமை தானம் ரிஷிக்கடன் அகலலாம்
எண்ணெய் தானம் ஆரோக்கியம் உண்டாகலாம்
காலணி தானம் பெரியோர்களை அவமதித்த பாவம் போக வாய்ப்புண்டு
மாங்கல்ய சரடு தானம் தீர்க்க மாங்கல்ய பலன் உண்டாகலாம்
குடை தானம் எண்ணிய எதிர்காலம் கிடைக்கலாம்
பாய் தானம் அமைதியான மரணம் உண்டாகலாம்
காய்கறிகள் தானம் குழந்தை ஆரோக்கியம் மேம்படலாம்
பூ தானம் விரும்பிய இல்வாழ்க்கை அமையலாம்
பொன் மாங்கல்ய தானம் திருமண தடைகள் நீங்கலாம்
மஞ்சள் தானம் சுபிட்சம் உண்டாகலாம்
எள் தானம் சாந்தி உண்டாகலாம்
வெல்ல தானம் வம்ச விருத்தி உண்டாகக் கூடும்
தண்ணீர் தானம் மன மகிழ்ச்சி உண்டாகலாம்
சந்தன தானம் கீர்த்தி உண்டாக வாய்ப்புண்டு
புத்தகம் தானம் கல்வி ஞானம் அதிகரிக்கலாம்
குறிப்பாக இந்த தானங்களை செய்யும் போது என்ன சாதி, என்ன மதம் என்று பார்க்காமல் தேவைப்படுவோருக்கு அந்த தானத்தை வழங்கினால் அவர்கள் மனமார உங்களைப் பாராட்டுவார்கள். அந்தப் பாராட்டானது உங்களுக்கு அவர்கள் வழங்கும் ஆசிர்வாதம் மூலம் பாசிடிவ் வைப்ரேசனாக மாறும்.
அந்த பாசிடிவ் வைப்ரேசனானது உங்களைச் சுற்றி ஆரா போல் சூழ்ந்து வரும். கெட்ட சக்திகளிடம் இருந்து விலகலாம் எனக் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி கண்கள் தானம், உடல் உறுப்புக்கள் தானமும் மிகவும் சிறந்த தானமாகக் கருதப்படுகிறது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.