“ஷ்ஷு, போ” – கொடூர பலாத்காரம். ரத்தம் சொட்ட சொட்ட உதவி கேட்டும் துரத்திய அவலம்
12 வயது சிறுமி ஒருவர் பாதி நிர்வாணமாக வீடு தோறும் சென்று கதவை தட்டி உதவி கோரினார். ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. கொடூர பலாத்காரத்தால் அவர் நிலை குலைந்து போகின்றார். இருந்தபோதும் யாராவது காப்பாற்றுங்கள் என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு உதவிக்காக தேடித்திரிந்தார். அங்கு இதை பார்த்த ஒருவர் “ஷ்ஷு, அந்த பக்கம் போ” என்று துரத்தியும் விட்டார். இந்த சம்பவங்கள் சிசிடிவி காட்சிகளாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தின் உஜ்ஜயின் பகுதியில் உள்ள பத்நகரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒவ்வொரு வீடாக சென்று கதவைத் தட்டி உதவி கேட்டும் யாரும் உதவ முன் வராத நிலையில் ஒரு பிரீஸ்ட் ஒருவர் அப்பெண்ணை துண்டால் போற்றிக் கொண்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். அந்த மடத்தின் ஒரு பெரியவர் மட்டும் தான் அந்த இடத்தில் மனசாட்சியுடன் நடந்து கொண்டார் என்பது வேதனையிலும் ஆறுதலான விஷயமானது.
அதிக ரத்தப்போக்கு இருந்ததால் அவர் வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவரது உடலில் ரத்தம் ஏற்றப்பட்டது. பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள்.
அப்பெண், கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையின் மூலம் உறுதியாகி உள்ளது. ஆனால் அந்த பெண் யார்? எந்த ஊரில் இருந்து வருகிறார்? என்ற தகவல் கிடைக்கப்பெறவில்லை. அவர் பேசும்போது சரிவர கேட்கவில்லை. எனவே, தற்போதைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
இருப்பினும் அவர் பேசும் பாசையை கொண்டு பிரயாக்நகரச் சேர்ந்த சிறுமியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 12 வயது ஆன சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, உதவிக்கோரியும் சமூகம் அவரை புறக்கணித்த சம்பவம் மிகவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் இந்த சம்பவம் புதிதல்ல எந்த சொல்லப்படுகிறது. சராசரியாக 50 பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் இதை அதிர்ச்சி ஊட்டும் தகவலாக வெளியிட்டு இருந்தாலும் அந்த மாநிலங்களில் பெண்களுக்கும் மைனர் பெண்களுக்கும் பாதுகாப்பு என்பது இல்லை என்று குற்றச்சாட்டே எழுந்துள்ளது. அடையாளம் தெரியாத ஒரு நபரால் கொடூரமாக பலாத்காரத்துக்கு ஆளானதாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.