இன்னைக்கும் நம்மள்ல பலரோட வலதுகை கூகுள் தான், Agree?

”தம்பி பொடி பையா போய் அதை தேடி எடுத்துட்டு வா” அப்படின்னு நம்ம யார்கிட்டயாவது ஒரு வேலை சொல்லி அனுப்புறோம்னா அது கூகுள் ஆதான் இருக்கும். நமக்கு தெரியாத பல தகவல்கள். நம்ம நம்ம போய் நம்ம சந்தேகங்களை கேக்குற எடத்துல இருக்குற முதல் தோழனாகவும் ஆசானாகவும் அதுதான் இருக்கு. இதுதான் நெட்டிசன்ககூட ஒன்னும் இரண்டுமா பிரிக்க முடியாத அளவுக்கு இரண்டற கலந்து போன தேடு பொறியா இருக்கு. இன்னிக்கு கூகுளுக்கு 25வது ஹேப்பி பர்த்டே. ஹாப்பி பர்த்டே ஹாப்பி பர்த்டே கூகுள்!

Google தான் உலகத்தோட மிகப் பெரிய சர்ச் எஞ்சினா இருக்கு. அதுவும் தன்னோட கூகுள் டூடுல 25வது ஆண்டு பிறந்த நாளை ஒட்டி 25 அப்படிங்கற நம்பர் கூட போட்டு பப்ளிஷ் பண்ணிருக்காங்க.

யார் தொடங்கினது?

நீங்க 90ஸ் கிட்டா இருந்தா இவரை பற்றி உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ். இவங்க தான் முனைவர் பட்ட மாணவர்கள். ஸ்டான்போர்ட் பல்கலைகழக கணினி அறிவியல் பயிலும்போது ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஆகி உலக அளவில் வலைதள சேவை தொடர்ந்து மேம்படுத்தனும் அப்படின்னு சொல்லி சிந்தனையில இருந்தவங்க.

ஒருவரோட கனவு இன்னொருவரோட கனவோடு சேரும்போது அது எளிதா பலிக்கும். அப்படின்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி தான், இவங்களுடன் நட்பும் இவங்களோட திறமையும், கனவும், மாதிரி இருந்ததுனால 2 பேரும் ஹாஸ்டல்ல இருந்து நைட்டும் பகலமாக வேலை செஞ்சு ஒரு முன்மாதிரியான சர்ச் இன்ஜினை கொண்டு வந்தாங்க.

நாட்கள் போகப்போக அது கொஞ்சம் கொஞ்சமா மேம்படுத்திட்டே வந்தாங்க.

முதல்ல வாடகைக்கு ஒரு அலுவலகத்தை தேடும் போது தான் தன்னோட ஃபிரண்டு ஓட கார் ஷெட்டுல இடம் கிடைத்தது. அங்க தற்காலிகமாக அலுவலகத்தை தொடங்கி செப்டம்பர் 27 1998 ல இந்த பணியை ஆரம்பிச்சாங்க.

நோக்கம் என்ன?

அனைத்து தகவலும் ஒரே இடத்தில முழுமையாக கிடைக்கணும் அப்படிங்கிற தான் கூகுள் உருவாகறதுக்கான நோக்கம். அந்த நோக்கம் தற்போது வெற்றிகரமாக நிறைவேறி இருக்குதுனே சொல்லலாம். உலக அளவில் பில்லியன் கணக்கான மக்கள் தினமும் தங்களுக்கு தேவையான சந்தேகங்களை இந்த இணையதளத்தில் தான் தேடி பயனடைந்து கொள்கிறார்கள். குறிப்பா மாணவர்களும் வேலை செய்றவங்களும் இதை நம்பி தான் இருக்காங்க.

கூகுளும் தமிழரும்

சுந்தர் பிச்சை போன்றவர்கள் தான் இந்த நிறுவனம் விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்ததுக்கு காரணம் அப்படின்னு சொல்வது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு தமிழர். குறிப்பா தற்போதைய லோகோவை வடிவமைத்தவர் என்று சொல்லலாம்.

எந்தெந்த நாள்ல என்னென்ன சிறப்போ, அந்தந்த நாளுக்கு ஏத்த மாதிரி கூகுள் டூடுள மாத்தி மாத்தி வடிவமைச்சாங்க. இது மக்களோட எளிமையா போய் ஒருங்கிணையை உதவுச்சு.

அதுக்கெல்லாம் ஒரு 11 பேர் கொண்ட குழு இருக்காங்கப்பா அப்படின்னு சொல்லுவாங்க அந்த மாதிரி டூடுலோட உருவாக்கத்துக்கு பின்னாடி நிறைய இல்லஸ்டேடர்கள், நிறைய கிரியேட்டிவ் ஆனா ஆளுங்க, நிறைய மனிதர்களையும், ஆளுமைகளையும் தெரிஞ்சவங்க, புதுமைகளை புகுத்தறவங்க இருக்காங்க

இந்த அரிய தகவல்களுடன் த காரிகையும் கூகுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுது நீங்களும் உங்க வாழ்த்துக்களை கமெண்ட் செக்சன்ல சொல்லுங்க.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE