மிக இளம் வயதிலேயே “மிஸ் டீன் வேர்ல்ட்” பட்டத்தை வென்றவர் எமி ஜாக்சன். 2009ல் அமெரிக்காவில் நடந்த உலக அளவிலான இந்த போட்டியில் 15 வயது ஆன சிறுமி முதல் இடத்தை பெற்றதும் அவருக்கு அடுத்தடுத்து விளம்பர படங்கள் மாடலிங் பணி என வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் திரைப்பட வாய்ப்புகள் வரவில்லை. இந்த நிலையில் எமி ஜாக்சனை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியதே தமிழ் சினிமா தான்.

மிஸ் வேர்ல்ட் டீன் வெற்றி பெற்ற புகைப்படத்தை பார்த்த இயக்குனர் ஏ எல் விஜய் எமி ஜாக்சனை தமிழ் திரைப்படமான மதராசபட்டினம் படத்துக்கு ஆடிஷனுக்காக அழைத்திருந்தார்.

1947 ஆம் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்கள் பட்ட கஷ்டங்களை வெளிப்படுத்தும் படமாக மதராசபட்டினம் அமைந்தது. இதில் ஆங்கிலேய கவர்னரின் மகளான ஏமி ஜாக்சன் தமிழகத்தில் கிராமத்து வீரனான ஆர்யாவை காதலிப்பது போன்றும் சுதந்திரம் பெற்று வெள்ளையர்கள் வெளியேறும் தருவாயில் அவர்கள் தப்பிக்க முயல்வது போன்றும் கதை அம்சம் எடுக்கப்பட்டு இருக்கும்.

தமிழ் உச்சரிப்பதற்கு மிக கடினமான மொழியாக இருந்ததாக எமி ஜாக்சன் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

இதை அடுத்து பல்வேறு தமிழ் மற்றும் ஹிந்தி தெலுங்கு உள்ள படங்களிலும் ஏமி ஜாக்சன் நடித்திருந்தார்

2012ல் தாண்டவம் 2014-ல் ஐ, 2015ல் தங்க மகன் அடுத்ததாக கெத்து, தெறி, தேவி, 2.0 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். தற்போது “அச்சம் என்பது இல்லையே” என்ற தமிழ் படத்தில் சான்ட்ரா ஜேம்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அழகுக்கு பெயர் போன எமி ஜாக்சன் தனது முகத்தை மிக அசிங்கமாக மாற்றிக் கொண்டு நடித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானதும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான தோற்றம் ட்ரால் செய்யப்பட்டது அறிந்து வருத்தமும் பட்டிருக்கிறார்.

ஓபன் ஹெய்மர் படத்தில் நடிகர் சிலியன் மர்ஃபி லுக்குடன் ஒத்துப்போவதாக அவர் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளானார்.

இந்த ட்ரோல்களுக்கு எமி ஜாக்சன் தற்போது பதிலடியும் கொடுத்துள்ளார்.

“ஒரு படத்திற்காக தங்கள் தோற்றத்தை மாற்றும் ஆண் நடிகர்களை பாராட்டுகிறார்கள். இதுவே ஒரு பெண் நடிகை தன் படத்திற்காக மிகக் கடுமையாக உழைத்து, கஷ்டப்பட்டு கெட்டப்பை மாற்றும்போது அவர்கள் அழகாக இல்லை என்றால் டரோல் செய்து அவர்களை விமர்சிக்க அவர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு என்று நினைத்துக் கொள்கிறார்கள்” என்று கூறியுள்ளார் எமி ஜாக்சன்.

அதுவும் சரிதான். ஒரு ஹீரோ தனது படத்துக்கு வேண்டி உருவத்தை மாற்றினால் அதை கடின உழைப்பாக கருதி கொண்டாடும் சினிமா ரசிகர்கள், அதையே ஒரு பெண் செய்தால் விரும்புவதில்லை என்று பல கருத்துக்கள் உலவி வருகின்றன. உதாரணத்துக்கு நடிகை அனுஷ்காவும் ஒரு படத்தில் குண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக எடையை கூட்டிவிட்டு பின்பு குறைக்க சிரமப்படுவது பற்றி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE