சிசேரியனை நேரில் பார்த்ததால் மனநலம் பாதித்த கணவர்
ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் போது அவரது கணவன் உடன் இருப்பதை பல வெளிநாட்டு மருத்துவமனைகள் அனுமதிக்கின்றனர். ஏனெனில் அப்போதுதான் அவர்கள் படும் கஷ்டம் என்ன என்பதையும் புரிந்து கொண்டு பெண்ணுக்கும், பெண்மைக்கும், தாய்மைக்கும் மதிப்பு கொடுப்பார்கள் என்ற சூழல் உள்ளது. ஆனால் இந்த சூழல் அனைவருக்கும் ஒத்துப் போவதில்லை. ஆஸ்திரேலியாவில் கணவன் ஒருவருக்கு இதுபோன்று அறிவுறுத்தல்களால் சைக்காட்டிக் இல்னஸ் என்ற மனம் சார்ந்த பிரச்சினை வந்துள்ளது.
தற்போது இந்தியா போன்ற நாடுகளிலும் பிரசவத்தின் போது கணவன் உடன் இருக்கலாம் என்ற அனுமதிகள் உள்ளன. ஆனால் சுகப்பிரசவத்துக்கு மட்டுமே கணவன்மார்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான இடங்களில் சிசேரியன் செய்யும்போது அது அறுவை சிகிச்சை என்பதால் அங்கு அந்நியரை அனுமதிக்க கூடாது என்பது இந்திய அல்லது தமிழ்நாட்டு மருத்துவமனைகளின் கொள்கையாக உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு இந்தியருக்கு மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
அனில் கொப்புல்லா என்ற ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் இந்தியர் தனது மனைவியை 5 ஆண்டுகளுக்கு முன் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்தார். பிரசவ சமயத்தில் சிக்கல் என்பதால் அறுவை சிகிச்சை வழியாகத்தான் குழந்தை வெளியில் எடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த நிலை ஏற்பட்டபோது மெல்பர்னில் இவரது மனைவியை சிகிச்சைக்காக அனுமதித்திருந்த மருத்துவமனை அனிலையும் உடன் இருக்குமாறு ஊக்குவித்தது என்று கூறப்படுகிறது.
சுகப்பிரசவமாக இல்லாமல் சி-செக்ஷன் என்ற சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு கணவனை உடன் இருக்கச் செய்ததால் பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. மனைவியின் உடல் உள்ளுறுப்புகள் மற்றும் அதிலிருந்து வெளி வரக்கூடிய ரத்தம் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு சைகாட்டிக் இல்னஸ் என்ற மனரீதியான பாதிப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஜனவரியில் நடைபெற்ற சம்பவம் குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு ஈடாக ரூ.5,000 கோடியை மருத்துவமனை தனக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் அளில் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் விக்டோரியா உச்சநீதிமன்றம் அனில் குப்பல்லாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது வழக்கமாக நடக்கும் பிராசஸை இவர் கெடுக்க நினைப்பதாகவும் அதை துஷ்பிரயோகம் செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளது.
அனிலின் மனைவிக்கு பிரசவம் பார்த்த மல்பர்னில் உள்ள ராயல் வுமன்ஸ் மருத்துவமனையும் அனில் மனரீதியாக பாதிக்கப்படவில்லை என்பதை ஆணித்தரமான வாதமாக முன் எடுத்து வைத்ததும் இதற்கு ஒரு காரணம்.
இதுபோன்ற பிரச்சினையால் அவர் தன் மனைவியை விட்டு பிரிந்து விட்டதாகவும் தனக்கு வருமானம் ஈட்ட வழி இல்லை என்றும் கூறியுள்ளார்.
வெகுசில தம்பதிகளே இந்தியாவில் பிரசவ நேரத்தில் தன் கணவன் உடன் இருக்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றனர். மனைவி விரும்பினாலும் கணவன்மார்களே இதற்கு ஒப்புக் கொள்வதில்லை என்று சொல்லப்படுகிறது.
பிரசவத்தின் போது குழந்தை எவ்வாறு வெளிவருகிறது என்பதை பார்க்கும் திறன் சக்தி உள்ளிட்டவை ஆண்களுக்கு இல்லை என்றும், இதனை எதிர்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களை நேரில் பார்க்கும் போது ஆண்கள் தன் மனைவியிடம் பாலியல் ரீதியாக நெருங்க முடியாமல் போகிறது என்றும் சொல்கிறார்கள். இது பற்றிய உங்கள் கருத்து என்ன என்பதையும் பதிவிடவும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.