திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் உள்ள உதாரணமாக குடும்பம் அப்டின்னு சொன்னா, அது சிவகுமார் சார் குடும்பம்-னு தான் பலரும் சொல்லுவாங்க. இந்த மாடர்ன் உலகத்துலயும் 2 பசங்களும், மருமகளும், பேரக்குழந்தைகளோட ஒரே வீட்ல ஒன்னா சந்தோஷமா இருக்காங்க அப்டின்னு பலரும் சொல்லி கேள்விப் பட்டிருப்பீங்க.

குடும்பம்னா என்ன? அம்மா, அப்பாவ எப்டி மதிக்கனும்? மருமகள்னா எப்டி இருக்கனும்? அண்ணன்-தம்பின்னா எப்டி ஒத்துமையா இருக்கனும் அப்டின்னு சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி பத்தி உதாரணமா சொல்லுவாங்க ஆனா, இப்போ சூர்யா குடும்பத்தோட மாமியார் ஊரான மும்பைக்கு தனிக்குடித்தனம் போயிட்டதா ஒரு தகவல் வந்தது.

குடும்பம் உடையுறதுக்கும்-பிரியறதுக்கும் ஜோதிகா தான் காரணம் அப்டின்னு வதந்திகளும் வந்துச்சு. இத்தன வருஷம் பெத்து வளத்து ஆளாக்கின அம்மா-அப்பாவ விட்டு சூர்யா மனைவி பின்னாடி மாமியார் ஊருக்கே போய்ட்டாரு என்று கூட விமர்சிக்கப்பட்டது. இந்த குடும்பம் பிரிஞ்சுருச்சா அப்டிங்கறத தமிழ் சினிமா ரசிகர்களே ஏத்துக்காம இருந்தாங்க. சூர்யா மும்பையில வீடு வாங்கினதா கூட தகவல் வந்துச்சு.

இதையடுத்து கொஞ்ச நாளுக்கு அப்புறம் சூர்யாவோட மகள் படிப்புக்காகத் தான் தற்காலிகமா மும்பை போயிருக்கறதாகவும், படிப்பு முடிஞ்சதும் திரும்ப சென்னைக்கு சிவகுமார் வீட்டுக்கே வந்துருவாங்கன்னும் சொல்லப்பட்டுது.

இதுபத்தி சிவகுமார் ஐயா குடும்பத்துல யாருமே பதில் சொல்லாம இருந்தாங்க. இந்த நிலையில் தெலுங்கு மொழி வெப்சைட் ஒன்னுல கார்த்தி மனம் திறந்து பேசுனதா ஒரு பேட்டி வந்துருக்கு. அதுல குடும்பம் பிரிய ஜோதிகாதான் காரணம் அப்டின்னு தகவல் வர்றத பத்தின கேள்விக்கு கார்த்தி என்ன சொல்லிருக்காரு அப்டின்னா,

“நான் ஜோதிகா அவர்கள் வெறும் நடிகையா மட்டும் பாக்கல. அவங்கள எப்பயுமே ஒரு தாய் மாதிரிதான் இருந்துருக்காங்க. அதேமாதிரி அவங்களும் எங்கள அவங்க குழந்தையாதான் பாத்தாங்க. இப்போகூட மும்பைல எங்கம்மா கூடதான் இருக்காங்க. இப்போ எங்க வீடு வெறுமையா இருக்கும். அவங்க வீட்ட விட்டு போன மாதிரி தெரியல. இப்பயும் அவங்களோட இருந்த நாட்களப் பத்தி பேசி வீட்ல அந்த நினைவுகள அசைப் போட்டுட்டுத்தான் இருக்கோம்.”

இந்த மாதிரி தன்னோட அண்ணி தனக்கு தாய் மாதிரி-ன்னு கார்த்தி பேசுனதா வந்த தகவல், அவங்க குடும்பத்துக்கு மேல இருக்குற ரசிகர்களோட மரியாதைய மேலும்தான் கூட்டியிருக்கு. கார்த்தியோட இந்த கமென்ட் பத்தி நீங்க என்ன நிகைக்குறீங்க அப்டின்னு கமென்ட் செக்சன்-ல சொல்லுங்க. .

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE