மணக்க மணக்க மசாலா சுண்டல் – ரொம்ப சிம்பிள் ரெசிபி

மாலை நேரம் அலுவலகம் முடித்தோ பள்ளி முடித்தோ வீடு திரும்ப ஊருக்கு ஏதேனும் ஆரோக்கியமாக சமைத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பல பெண்களுக்கும் இருக்கத்தான் செய்யும் ஆனால் அன்றைய நாள் முழுக்க செய்த வேலைகளும் அலைச்சலாலும் அவர்களால் திட்டமிடுவது என்பதை சாத்தியம் என்று போகும்போது எப்படி சமைத்துக் கொடுக்க முடியும் என்று கேள்வி பலருக்கும் வரும் இந்த நிலையில் மிகவும் எளிமையான அதே சமயம் அதிக பாராட்டுகளை வீட்டில் பெற்று தரும் ஒரு மேக்ஸ் வகையை தற்போது பார்க்கலாம்.

மசாலா சுண்டல் அல்லது பிளேட் சுண்டல்

பள்ளி கல்லூரிகளில் மாலை நேர ஸ்நேக்ஸாக கேண்டின் வாங்கி சாப்பிட்டது பலருக்கும் நினைவிருக்கும் அதன் மீது கான்சப்ஸ் அல்லது முறுக்கு உள்ளிட்டவற்றை உடைத்து போட்டு சாப்பிட்டதும் மறக்க முடியாத நினைவுகளாக தான் இருக்கும்.

ஒரு பிளேட் சிங்கிள் தாங்கி இரண்டு தோழிகள் பகிர்ந்து சாப்பிட்ட நாட்களும் உங்கள் வாழ்வில் நீங்கள் சுமந்து இருக்கலாம் அவர்களுக்கு சேர்த்து இந்த ரெசிபியை அனுப்பி வையுங்கள் அத்துடன் நீங்களும் சமைத்து வீட்டில் பாராட்டுகளை பெறுங்கள் தற்போது மசாலா சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

2 கப் பச்சை பட்டாணி

1 டேபிள் ஸ்பூன் உப்பு

½ ஸ்பூன் மஞ்சள் தூள்

2 வெங்காயம் நறுக்கியது

1 தக்காளி நறுக்கியது

சிறிய துண்டு இஞ்சி

7 பல் பூண்டு

4 பச்சை மிளகாய்

4 ஸ்பூன் எண்ணெய்

பட்டை

பிரியாணி இலை

3 ஏலக்காய்

கிராம்பு

1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்

1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்

உப்பு தேவையான அளவு

கேரட் அல்லது மாங்காய் நறுக்கியது

செய்வது எப்படி?

பச்சை பட்டாணியில் நல்ல பச்சை நிறம் வர வேண்டும் என்பதற்காக இரசாயன கலவை சேர்த்து இருக்கலாம்.

நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 முதல் 7 விசில் விட்டு வேகவைக்கவும்.

நறுக்கிய 2 வெங்காயத்தில் பாதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும்

பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதக்கிய பிறகு அதில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து கிளறவும்.

பச்சை வாசனை போனதும் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

பட்டாணி வேகவைத்த தண்ணீரை வீணாக்காது அதில் கொஞ்சம் ஊற்றிக் கொள்ளவும்.

கொதி வந்ததும் அதில் அவித்த பட்டாணியை சேர்க்கவும். இதை நன்றாக மசாலாவுடன் சேர்த்து வதக்க வீடே கமகம வென மணக்கும்.

நன்றாக கெட்டியாகும் வரை கிளர வேண்டும்.

இதை சுட சுட எவர் சில்வர் தட்டில் போட்டு, நறுக்கிய வெங்காயத்தை தூவி விடவும்.

நறுக்கிய கேரட், மாங்காய், கொத்தமல்லி, தூவி விடவும்.

ஒரு கை நிரையங் கார்ன் சிப்சை அள்ளி அதனை கையிலேயே நொறுக்கி, அதன் மீது தூவவும்.

தேவைப்பட்டால் தேங்காய் எண்ணெய் ஊற்றி அள்ளி சாப்பிட்டால். . . அட அட அட. . . அவ்ளோ அருமையா இருக்கும்.

அதையே நைட் சப்பாத்தி, தோசைக்கு சைட் டிஷ் ஆவும் தொட்டுக்களாம். ஆனா நைட் வரைக்கும் மிச்சம் இல்லன்னா, கம்பெனி பொறுப்பல்ல.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE