நடிகை பிரியா பவானிசங்கர், தனது தாய்க்கு கேன்சர் இருப்பதாக கூறி நா தழுதழுக்க பேசிய சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி அதன் பின் வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் முக்கியமானவர் பிரியா பவானி சங்கர். முதலில் தமிழ் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார். இதையடுத்து காதல் முதல் கல்யாணம் வரை என்ற நாடகம் மூலம் செய்தி மட்டுமின்றி பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் அறிமுகமானார்.

அவருக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருந்ததால், திரைப்பட வாய்ப்புகளும். குவிந்தன. மேயாத மான் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ப்ரியா பவானி ஷங்கர். ஏதோ ஒரு பட வாய்ப்பு அதிர்ஷ்டம் மூலமாக கிடைத்து விட்டது என பலரும் பேசி வந்த நிலையில் அடுத்தடுத்த படங்களை புக் செய்து பிசியாக நடிக்கத் தொடங்கினார்.

மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்தார் பிரியா பவானிசங்கர். இன்னும் பல முக்கிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.

நடிகர் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்தார். பின், வெற்றிகரமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த திகில் படமான டிமான்ட்டி காலனியின் 2-ம் பாகம் என 2 படங்களிலும் ஒப்பந்தமாகி படு பிஸியாக நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.

இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் பேசும் வாய்ப்பை பெற்றிருந்தார். தனியார் மருத்துவமனை மூலம் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அழைக்கப்பட்டிருந்தார் பிரியா பவானிசங்கர். அப்போது பேசிய அவர், தனது தாய்க்கு கடந்த ஆண்டு புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததும் தான் அதிர்ச்சி அடைந்ததாக கூறினார். இதையடுத்து, தனக்கும் மருத்துவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதை பிரியா பவானிசங்கர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், மிக ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோயை கண்டறிந்துவிட்டதால், அதற்கான சிகிச்சைகள் நடைபெற்று வருவதாகவும், குணமடைந்து விடுவார் என்று தாங்கள் நம்புவதாகவும் கூறினார். “என்ன ஆனாலும் உங்களது மருத்துவரை நம்புங்கள். அவர் உங்களை காப்பாற்றி விடுவார்.” என்று நம்பிக்கை ஊட்டினார்.

நடிகை பிரியா பவானி சங்கர் தனது தாய்க்கு கேன்சர் இருப்பதாக கூறியபோதே அவரது நா தழுதழுத்தது. கண்கலங்கும் நிலைக்கு ஆளானார். இதைக் கண்ட பிறகு புற்று நோயாளிகளும் கண்கலங்கினர்.

என்னதான்? நடிகையாக வலம் வந்தாலும் அவரது தாய்க்கு கேன்சர் வந்தது கண்டு பொது இடம் என்றும் பார்க்காமல் பேசும் போதே அவர் நா தழுதழுத்தது கண்டு அங்கிருந்தவர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அவரும் சாதாரண ஒரு பெண் தானே என்று அங்கிருந்தவர்களும் பேசிக்கொண்டனர்.

மேலும். உடல்சார்ந்த எச்சரிக்கைகளை எப்போதும் தட்டிக் கழிக்காமல் செவிமடுத்து, போதிய பரி சோதனைகளை அவ்வப்போது செய்து கொள்ள வேண்டும். எந்த ஒரு நோயாக இருந்தாலும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், பெரும் பாதிப்புகளை தவிர்த்து விடலாம் என்பதற்கு புற்றுநோய் ஒரு முன்னுதாரணமாகவே உள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்கள் இது பற்றி அஞ்சத் தேவையில்லை என்றாலும் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் மருத்துவரை அணுகி முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகிறது. மேலும் இதற்கு வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் அரசாங்கம் மூலம் மிக குறைந்த விலையில் வழங்கும் முழு உடல் பரிசோதனை எடுத்துக் கொள்ளலாம். ஆரோக்யமே செல்வம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE