ஹவுஸ் ஓனர் பிரச்சனையா? அரசோட புது அறிவிப்பு
வாடகை வீட்டில் குடியிருப்போரின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே குடிநீர் வரி வீட்டு வரி சொத்து வரி உள்ளிட்டவை செலுத்தாமல் விட்ட ஹவுஸ் ஓனர்களிடமிருந்து வரி பாக்கியை வசூல் செய்யும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது தமிழக அரசு.
அவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் கொடுத்த பின் வரி வசூலுக்கு புதியதோர் நடைமுறையை பின்பற்றுவதாக தெரிவித்தது. அந்த கட்டிடத்தில் வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் சென்று வரியை வசூல் செய்து விட்டு அதனை வாடகையில் பின்னர் கழித்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துவதாக சொல்லப்பட்டது. குறிப்பாக குடிநீர் வாரியம் தான் இந்த முடிவை எடுத்ததாகக் கூட தகவல் வெளியானது.
இதன் மூலம் வரி வசூல் பாக்கி குறையும்.
ஏற்கனவே வாடகை குத்தகை ஒப்பந்த பதிவுக்காகவும், அது தொடர்பான புகார்களை விசாரிக்கவும், மாவட்டம் தோறும் ஆணையங்கள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
வாடகை ஆணையத்துக்கு வரும் புகார்களை வருவாய் கோட்டாட்சியர் கூடுதல் பொறுப்பேற்று விசாரிப்பார் என்று சொல்லப்பட்டது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற 044 2567 3341 என அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் இது தொடர்பாக பல சந்தேகங்கள் இருந்தன. எந்த இடத்தில் ஆணையம் உள்ளது? அதன் நிர்வாக எல்லை எத்தனை தூரம்? அதற்கான பிற தொடர்பு விவரங்கள் என்னென்ன? என்பது பற்றிய சந்தேகங்களை தீர்க்க தமிழக அரசு ஒரு வெப்சைட்டை உருவாக்கியுள்ளது.
வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை www.tenancy.tn.gov.in என்ற இணையதளத்தில் இது தொடர்பான தகவல்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் வாடகை ஒப்பந்த பதிவு தொடர்பாகவும், புகார் அளிப்பது தொடர்பான விவரங்களையும் இதன் வாயிலாகவே வாடகைதாரர்கள் மேற்கொள்ளலாம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.