ஒரே மாவு தான் ஆனால் தினசு தினுசா தோசை சுட்டு கொடுத்தா வேண்டாம் என்று வீட்ல யாருமே சொல்ல மாட்டாங்க.

அப்படி ஒரு தோசை ரெசிப்பி தான் இப்ப பாக்க போறோம்.

பொதுவாக குழந்தைக காய்கறி அவ்வளவா விரும்பி சாப்பிட மாட்டாங்க. ஆனா அதே காய்கறி மேல கார்ன் இல்ல சீஸ் போட்டு பாருங்க. குழந்தைங்க அதெல்லாம் அள்ளி சாப்பிடுவாங்க. அது மாதிரி தான் இந்த தோசையும்.

சாதாரண தோசையே முருகல் ஆகும் ஊத்தப்பமாகவும் மாறி மாறி சுட்டுக்கொடுத்து போரடிச்சு போயிருந்தாலோ இத ட்ரை பண்ணுங்க. இன்னைக்கும் தோசையாம்மா? அப்படிங்குற ஒரு கேள்விய நீங்க நாள் முழுக்க எவ்வளவு நேரம் அடுப்பு கிட்ட நின்னு வெந்து சமச்சாலும் உங்களயே எமோஷனல் டவுன் பண்ணிடும். அப்படி தோசை பிடிக்கவே பிடிக்காது, எப்ப பாரு எங்க வீட்டுல இதேதான், அதனாலயே நான் தோசையை வெறுத்துட்டேன், அப்படிங்கற வார்த்தை எல்லாம் உங்க வீட்ல யாரும் உச்சரிக்காம இருக்க இந்த மாதிரி ஒரு தோசை செய்யலாம்.

சட்னி, சாம்பார், குருமா எதுவுமே இல்லாம சைடு டிஷ்சே வேண்டாம். அப்படியே குடுங்க சாப்பிடுறேன்னு தோசையை கிச்சன்குள்ளயே வந்து வாங்கிட்டு போய் சாப்பிடுற அளவுக்கு வெஜிடபிள் சீஸ் தோசை எல்லாருக்கும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்

தோசை மாவு

காலிஃப்ளவர் பாதி

கேரட் 2

தக்காளி 1

பெரிய வெங்காயம் 1

உருளைக்கிழங்கு 1

பச்சை பட்டாணி 2 டீஸ்பூன்

சீஸ் தேவைக்கேற்ப

எண்ணெய் முறுகலா வேணும்னா அதிகமா யூஸ் பண்ணிக்கலாம்

எப்படி செய்யறது?

வெஜிடபிள் சீஸ் தோசை செய்யறது என்பது அதிகமான நேரம் பிடிக்கக்கூடிய வேலை இல்ல. காய்கறி லிஸ்ட பாத்து பயக்காம அதோட கவுன்ட் பாத்து ஜாலியா சிம்பிளா செய்யுங்க.

காலிஃப்ளவர சிறிது சிறிதாக உதிர்த்துகிட்டு, கேரட்டை துருவி வச்சுக்கோங்க. உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் போட்டா எப்படி நீளவாக்கில் இருக்குமோ, அது மாதிரி மெலிசா நறுக்கிக்கோங்க.

அதே மாதிரி தான் தக்காளி வெங்காயம். நீளமாவே நறுக்கிக்கலாம். வெங்காயத்தை கொஞ்சம் வதக்கி எடுத்துக்கிட்டா நல்லா இருக்கும்.

காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, இது எல்லாத்தையுமே ஆவில வேகவைத்து எடுத்து வச்சுக்கலாம். கார்ன் இருந்தா அதையும் சேத்துக்கலாம்.

ஒரு பக்கம் எல்லா காய்கறியும் இட்லி தட்டில் போட்டு வேக வச்சுட்டு இருக்க, அதே நேரத்துல பக்கத்துல தோசை மாவு ஆல்ரெடி ஃப்ரிட்ஜ்ல இருந்து எடுத்து வெளியே வச்சுக்கோங்க. சீஸும் அதே மாதிரி தான் பிரிட்ஜில் இருந்து எடுத்து உடனே அத பயன்படுத்தாம கொஞ்ச நேரம் கழிச்சு பயன்படுத்தலாம்.

லேசான தோசையா இல்லாம, சற்று கனமான தோசையா ஊத்திக்கோங்க. அதுக்கப்புறம் வேக வெச்ச காய்கறிகள ஒரு பாத்திரத்துக்கு மாத்தி உப்பு, பெப்பர் போட்டு கலக்கிக்கோங்க. தோசைக்கு மேல காய்கறிகள் எல்லாம் தூவி விடலாம்.

அப்புறம் நறுக்கின, தக்காளி வெங்காயத்தையும் அது மேல தூவி அலங்கரிக்கலாம். அதுக்கப்புறம் சீஸ் தூண்டுகள தோசை மேலயே வெச்சு துருவி விடலாம்.

இட்லி குண்டாவோட மூடிய போட்டு வேகவைத்து அதுக்கப்புறம் அதை எடுத்து பார்த்தீங்கன்னா அடில முறுகலாவும், மேல தோசை நல்லா வெந்தும் இருக்கும். தோசையா திருப்பி போட வேண்டாம். ஏன்னா, காய்கறிகள் ஆல்ரெடி வெந்தது தான். இன்னொரு பக்கம் வேகணும் அப்படிங்கற அவசியம் இருக்காது.

பின்னாடி இருக்கிற காய்கறிகளை மறந்துட்டு குழந்தைகள் சீஸ பாத்ததும் சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க. அதனால வழக்கமான டின்னர் தான, ஒரு கப் மாவு போதும் அப்படின்னு நினைக்காம கொஞ்சம் எக்ஸ்ட்ராவே மாவு எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

சைட் டிஷ்ஷே இல்லாம அப்படியே சாப்பிடலாம். அப்படின்னாலும் குழந்தைங்களுக்கு இந்த தக்காளி சாஸ், தேங்காய் சட்னி இது மாதிரியான பொருட்களை செஞ்சு கொடுக்க இன்னும் ரெண்டு தோசை நல்லாவே சாப்பிடுவாங்க.

குறிப்பா இந்த புரட்டாசி மாசம் முட்டை கூட இல்லையா அப்டின்னு ஏங்குறவங்களோட கிரேவிங்க்ஸ்-அ சீஸ் கொஞ்சம் போக்கும். இது மாதிரி சூப்பரான ரெசிபிக்கள் வேணும்னா நம்ம த காரிகை பக்கம் அடிக்கடி வாங்க. டாட்டா. ..

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE