வருமனோட சம்பளம் ரூ.35 லட்சம் அல்ல. ரியல் சம்பளம் இதுதானாம்.

ஜெய்லர் படத்தில் ரஜினி என்ற கதாபாத்திரத்தை எவ்வளவு ரசிகர்கள் ரசித்து கொண்டாடினார்களோ, அதற்கு அடுத்து ஒரு வில்லனை கொண்டாடியது வருமனாகத்தான் இருக்கும்.

திமிரு படத்தில் மாற்றுத்திறனாளியாக டாட்டா சுமோவுக்கு முன்னால் வந்த விழுந்து தடுத்து ஆட்டம் காட்டியவர் விநாயகன் ஒரு பொம்பள ரவுடிக்கு அசிஸ்டன்ட் போல காலை தாங்கி தாங்கி நடந்து வந்த விநாயகனுக்கு ரஜினியையே எதிர்க்கும் ஒரு பவர்ஃபுல்லான வில்லன் கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்பது யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை.

மிகப்பெரிய வில்லன் ஒருவரிடம் பேசிவிட்டு அதனை அடுத்து அதே போன்ற ஒரு பவர்ஃபுல்லான வில்லன் கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் விநாயகன் என ரஜினியே சொல்லியிருந்தார்.

இவரின் நடிப்பு படத்தில் ஒரு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது.

இயக்குனர் நெல்சன் இவரை மிகச் சரியாக பயன்படுத்தி இருந்தார்.

“மனசுலாயோ சாரே?” “ஹன்ட்ரட் பர்சன்ட் புரொஃபசனல்” என்ற வசனங்களும் மீம்ஸ் கன்டெண்டுகளில் இடம் பிடித்தன. நடிகர் ரஜினியே விநாயகனின் நடிப்பை வெகுவாக பாராட்டி பேசி இருந்தார்.

பக்கா வில்லத்தனம் பொருந்திய அந்த கதாபாத்திரத்துக்கு அவரது தோற்றமும் மெருகேற்றியது.

இன்றளவும் வர்மா என்ற அந்த கதாபாத்திரத்தின் பெயர் சொன்னாலே அது ஜெய்லர் பட வில்லன் தான் என்று மனதில் பதியும் அளவு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து விட்டார் விநாயகன்.

இவருக்கு ரூ.35 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக ஜெயிலர் பட காஸ்டிங் சம்பளம் பற்றிய தகவல் கசிந்த போது வெளியானது. இது மிக மிக குறைவு என்றும் படத்தையே ஒரு பில்லர் போல தூக்கி நிறுத்திய விநாயகனுக்கு இவ்வளவுதான் சம்பளமா? என்றும் பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தன.

இதையடுத்து ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், படக் குழுவுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பல்வேறு பரிசுகளை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் வழங்கப்பட்ட எக்ஸ்ட்ரா போனஸ் பணம் ரூ.100 கோடி என சொல்லப்பட்ட நிலையில், அது ரூ.30 கோடி என தெரியவந்தது. அது போல் நெல்சனுக்கு ரூ.5 கோடி அனிருத்துக்கு ரூ.2 கோடி என பணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் விநாயகனுக்கு சம்பளமாக வழங்கப்பட்டது ரூ.35 லட்சம் அல்ல, அவர் வழக்கமாகப் பெறும் சம்பளத்தை விட மும்மடங்கு என விநாயகனே சொன்னதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, விநாயகனுக்கு இப்படத்தில் பல கோடி ரூபாய் சம்பளம் கிடைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஜெய்லர் படத்தின் மூலம் விநாயகனுக்கு மவுசு அதிகரிக்கவே, அவரது வீட்டு வாசலில் தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நிற்பதாகவும் அடுத்தடுத்த படங்களுக்கு புக் செய்வதாகவும் சொல்லப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE