இனி பப்ளிக் டாய்லட்ட தேடி நாம போக வேணாம், அதுவே வரும். SHE Toilet.
மெரினா கடற்கரையில் பீச் தண்ணீரில் ஜாலியா விளையாண்டுட்டு இருக்குறீங்க. திடீர்னு ஒரு இயற்கை அழைப்பு வரும்போது பப்ளிக் டாய்லட்ட தேடி வெகு தூரம் ஓட வேண்டி இருக்கும். அவ்வளவு தூரம் போகணுமா அப்படின்னு நினைச்சு பலரும் அந்த இயற்கை உபாதையை கழிக்காமல் அடக்கி வைக்கிறதுனால கிட்னியில் கல் உருவாகிறதுல இருந்து பல பிரச்சனைகள் உடம்புக்கு வருது.
இதே மாதிரி தான் பேருந்து, ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களிலும் சில பெண்கள் டாய்லெட்டை யூஸ் பண்ணாமல் பயணிப்பாங்க. கொண்டு போன பொருட்களை ஒரு இடத்துல வச்சிட்டு டாய்லெட் உள்ள இடத்துக்குப் போயிட்டு வர்றது அப்படிங்கறது யோசிக்கவே அவங்களுக்கு சிரமமாக இருக்கும். அதனால அருகாமையில் எங்காவது டாய்லெட் இருக்கா அப்படின்னு தேடி பாத்துட்டு விட்டுடுவாங்க. அந்த குறைய போக்குவதற்காக தமிழக அரசு அதுவும் குறிப்பா சென்னை மாநகராட்சியில் நிர்பயா நிதிய பயன்படுத்தி “ஷீ டாய்லெட்” அறிமுகப்படுத்தி இருக்காங்க
She toilet அப்படின்னா என்ன?
ஷீ டாய்லெட் அப்படிங்கறது சென்னை மாநகராட்சியில் ஒரு நடமாடும் பொதுக் கழிப்பறை வாகனம் ஆகும்.
அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கழிப்பறை தேவைப்படும் அப்படிங்கிற சூழலில் புதுசு புதுசா கட்டினா அது அந்த ஒரு இடத்தோடயே பயன்பாடு முடிஞ்சு போயிடும். ஆனா நடமாடும் கழிப்பறை அப்படிங்கறது மக்கள் அதிகமாக கூடக் கூடிய இடங்கள்ல வாகனத்தோடு கொண்டு போய் நிறுத்திக்கலாம். உதாரணத்துக்கு ஒரு பொருட்காட்சி போடுகிறார்கள் அப்படின்னா,அதுக்கு பக்கத்துல நிறைய மக்கள் கூடுற இடத்துல 2 அல்லது 3 டாய்லெட் வசதி மட்டும்தான் இருக்கும். அதுவும் கூட்டமா இருக்கும். அசுத்தமா இருக்கும். அந்த மாதிரி தேவைப்படுற இடங்களுக்கு சென்னை மாநகராட்சி உடைய இந்த வாகனங்கள் கழிப்பறை வசதியுடன் அங்க போய் நிறுத்தப்படும்.
குறிப்பா பீரியட்ஸ் டைம்ல டாய்லெட்டை தேடி அலைவது பெண்களுக்கு சொல்ல முடியாத மனவேதனைய உருவாக்கலாம்.
டிராபிக் போலீஸ், பந்தோபஸ்துக்கு நிக்கிற பெண் காவலர்கள் கூட இதனால் பலமுறை அவதிப்பட்டது பார்த்து அதுபோன்ற பணியில் இனிமே பெண் காவலர்கள ஈடுபடுத்துவதில்லை அப்படின்னு சொல்லி காவல்துறை ஏற்கனவே ஒரு முடிவு பண்ணி இருக்காங்க. அதே மாதிரி தானே சாதாரண பெண்களும் வேலைக்கு போறவங்களும் கல்லூரி போறவங்களும் துன்பங்கள் அனுபவிப்பாங்க? அப்படிங்கிற ஒரு நல்ல நோக்கத்தோடு இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கு. இந்த திட்டத்துடன் நிதி நிர்பயா நிதி திட்டத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கு.
என்னென்ன வசதிகள் இருக்கு?
இதுல வெறும் டாய்லெட் வசதி மட்டுமில்லாமல் முகம் பார்க்கிற கண்ணாடி, சானிட்டரி நாப்கின் டிஸ்பென்ஸ் பண்ற மெஷின், கை கழுவுவது திரவம், உடை மாற்றுவதற்கான சிறு அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை கூட இதுல இருக்கு. ஒரு வாகனத்தில் 4 கழிப்பறை இருக்கும்.
ஒரு நடமாடும் அறையோட மதிப்பு ரூ. 29.13 லட்சம் என்று சொல்லப்படுது. மொத்தம் ரூ.4.37 கோடி செலவில் முதற்கட்டமா 15 “ஷீ டாய்லெட்” உள்ள வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கு.
இது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், கடற்கரை உள்ள பகுதிகளில் வழக்கமா நிறுத்தப்படும். அதே போல புத்தகக் காட்சி, பொருட்காட்சி இந்த மாதிரியான மக்கள் கூடும் இடங்கள கண்டறிந்து அந்த இடத்துக்கு இந்த வாகனங்களை எடுத்துட்டு போய் நிறுத்துற வகையில திட்டமிட்டு அறிமுகப்படுத்தி இருக்காங்க.
இந்த ஷீ டாய்லெட்டுக்கு கிடைக்கிற வரவேற்பு பொறுத்து, இது சென்னை மாநகராட்சி ஓட பிற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் அப்படின்னு சொல்றாங்க. மேயர் பிரியா இதை தொடங்கி வைத்தார்.
இது தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிகளுக்கும் முன்னோடி திட்டமாக இருக்கிறதுனால இதோட பயன்பாடு மக்களிடையே வரவேற்கப்பட்டுச்சுன்னா பிற மாவட்டங்களில் உள்ள மற்ற மாநகராட்சிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் அப்படின்னு எதிர்பார்க்கலாம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.