எப்போ பாரு, இட்லி. தோசை. ஒருமுறை இப்டி அடை செஞ்சு கொடுங்க. . .
6 பேர் பிரண்ட்ஸ் கேங்-ல எல்லாரும் டிஃபன் பாக்ஸ் ஓபன் பண்ணா, அதுல 4 பேர் வீட்ல இட்லியா தான் இருக்கும். ஏன்னா, அதுதான் தமிழ்நாட்டோட ஈஸியான உணவு. பெரும்பாலான வீட்ல இதுதான் உணவு. நைட்டுக்கும் அப்படித்தான். என்ன? காலைல இட்லின்னா, நைட்டுக்கு தோசை. அது மட்டும்தான் மாறுமே தவிர அந்த ரெண்டும் மத்த டிஃபனோட மாறுமான்னு கேட்டா, அது என்னைக்காச்சும் அதிசயமா நடக்கும்.
வெறும் அரிசி, உளுந்துல என்ன சத்து இருக்கு? அதுக்குப் பதிலா இப்டி சுவையான அடை தோசை செஞ்சீங்கன்னா, ஆளுக்கு 2 எக்ஸ்ட்ராவே கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.
அந்த அடை தோசை எப்டி செய்யனும் அப்டின்னு பாக்கலாம்.
அடை தோசை மிகவும் மிருதுவா இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவாங்க. வழக்கமாக தோசை சாப்பிட்டால் மதமதவென தூக்கம் வரும். ஆனால், அடை தோசை அப்படி அல்ல. நாள் முழுக்க சுறுசுறுப்பைக் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – ஒரு கப்,
உளுந்து – ஒரு மேசைக்கரண்டி,
துவரம் பருப்பு – அரை கப்,
பச்சரிசி – கால் கப்,
தேங்காய் – கால் மூடி,
கறிவேப்பிலை – சிறிதளவு,
மிளகாய் வத்தல் – 5 அல்லது 6 ( உங்களுக்குப் பிடிக்கும் காரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்),
பெருங்காயம் – கால் தேக்கரண்டி, (பருப்பு மதமதப்பான உணர்வை தராதிருக்க இது அவசியம்)
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு,
செய்முறை
பச்சரிசி, உளுந்து, கடலை பருப்பு, துவரம் பருப்பை சுமார் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
அரைக்க ஆரம்பிக்கும் அரை மணி நேரத்துக்கு முன், மிளகாயை அதில் போட்டு ஊற வைக்கவும்
தண்ணீரை நன்கு வடித்து கழிந்துகொள்ளவும்.
பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கிரைண்டரிலோ, மிக்சியிலோ, ஆட்டுக் கல்லிலோ அரைக்கவும்
தேங்காயை சிறு சிறு பல்லாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம், பொடியாக நறுக்கின கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கி வைக்கவும்
மாவை தோசை கல்லில் ஊற்றி, எண்ணெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போடவும்.
சூப்பரான இந்த அடை தோசைக்கு, வெள்ளை தேங்காய் சட்னி அருமையாக இருக்கும். அல்லது நாட்டுச்சர்க்கரை தொட்டும் சாப்பிடலாம்.
அவியலோ, காரச் சட்னியோ, சாம்பாரோ எது இருந்தாலும் அடை தோசை தூள் கிளப்பும். அட இவ்வளவு ஏங்க? வெறும் அடை தோசையைக் கூட அடுக்கி சாப்பிடலாம். அவ்வளவு ருசியா இருக்கும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.