கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் மாதா மாதம் ரூ.1,000 பெற்று பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. அண்ணா பிறந்த நாளான கடந்த 15-ம் தேதியே பணம் வரும் என சொல்லப்பட்ட நிலையில், அதற்கு ஒரு நாள் முன்கூட்டியே ரூ.1,000 ஆனது தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்கில் கிரெடிட் செய்து இன்ப அதிர்ச்சி ஊட்டியது தமிழக அரசு.

இந்நிலையில் ஏற்கனவே வங்கியில் வெகுமாதங்களாக பணப்பரிமாற்றமே செய்யாமல் ஆக்டிவாக இருக்காதவர்களும், மினிமம் பேலன்ஸ் என ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கில் பராமரிக்காதவர்களுக்கும் ரூ.1,000 கிரெடிட் ஆனதா என குளறுபடி ஏற்பட்டது. அது மீண்டும் மைனஸ் பேலன்ஸில் சென்று விட்டது. இதனால் தங்களுக்கு அரசாங்கம் பணம் கொடுத்தும் அதை வங்கிகள் பறித்து விட்டனவே என பெண்கள் ஆதங்கப்பட்டனர்.

இதை அறிந்து அரசு வங்கிகளுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி அரசு கொடுக்கும் உரிமை தொகையான ரூ.1,000-த்தை மினிமம் பேலன்சுக்காக எடுக்கக் கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதையும் மீறி மினிமம் பேலன்ஸ் தொகை எடுத்தால் அந்த வங்கியில் பணம் போடப்படமாட்டாது, வேறு ஒரு வங்கிக்கு பணம் போடப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.

இதடைனியே வங்கிக் கணக்கே இல்லாதவர்களுக்கும் வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லாதவர்களுக்கும் மணியார்ட மூலம் ரூ.1,000 வீட்டுக்கே கொண்டு செல்லப்பட்டு தபால்காரர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் 2 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு மணியார்டர் மூலம் உரிமை தொகை சென்று சேர்ந்துள்ளதாக மகளிர் உரிமை தொகை திட்டத்தின் சிறப்பு அதிகாரி இளம்பகவத் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநில வங்கிகள் குழும கூட்டத்திலும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதையும் மீறி வங்கிகள் அரசு கொடுக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை பணத்தை மினிமம் பேலன்ஸ் ஆகவோ அல்லது வேறு கடனுக்கு நேர் செய்வதற்காகவோ எடுத்துக் கொள்வதாக இருந்தால், 1100 என்று இலவச தொலைபேசி எண்ணுக்கு அழைத்து முதல்வரின் முகவர் உதவி மைய அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து, தகுதிப் பட்டியலில் உள்ளவற்றுக்கு ஏற்ப முழு தகுதியும் இருந்தும், பணம் கிடைக்கப் பெறாதவர்கள் வரும் 18ஆம் தேதி அன்று அரசிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தியை எதிர்பார்க்கலாம். அந்த குறுஞ்செய்தியில் எதனால் நிராகரிக்கப்பட்டது? என்ற காரணம் மற்றும் எந்த எண்ணுக்கு அழைத்து விளக்கம் பெற வேண்டும்? என்ற அலைபேசி எண்ணும் இடம்பெற்றிருக்கும். இந்த குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு தேவைப்படுபவர்கள் மேல் முறையீடு செய்து ரூ.1000 ஐ பெற்றுக்கொள்ள முடியும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE