ஜி 20 நாடுகளின் தலைவர்களாகட்டும் அவர்களது மனைவிகளாகட்டும் இந்திய உணவுகளையும் இந்திய ஆடை முறைகளையும் நேசித்தது, குடியரசுத்தலைவர் கொடுத்த Gala Dinner-ல் தெரியவந்தது.

இந்திய ஆடைகள் அவர்களை கவர்ந்ததால் ஜி20 மாநாட்டின் போது அவர்கள் இந்தியர்களைப் போன்ற உடை அணிந்து கொண்டனர்.

அதில் எந்தெந்த நாட்டு தலைவர்களின் மனைவிமார்கள் அதாவது அந்த நாட்டின் முதல் குடிமகள்கள் இந்திய ஆடையை அணிந்திருந்தனர் என்றும் பிரதிநிதிகள் அணிந்த இந்திய ஆடை பற்றியும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது ஜி20 மாநாடு. சர்வதேச அளவிலான பிரச்சனைகள் இங்கு விவாதிக்கப்பட்டன. இந்திய கலாச்சாரமும் இந்தியாவின் பாரம்பரியமும் இதில் முக்கியத்துவம் பெற்றது.

ஜி 20 மாநாட்டுக்கு வந்திருந்த அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதில் மனதுக்கு இதமான ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது. அதாவது ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகள் அதிலும் குறிப்பாக பல நாடுகளின் தலைவர்களுடைய மனைவிமார்கள், இந்தியா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடுத்த காலா டின்னருக்கு வந்திருந்தனர்.

சனிக்கிழமை இரவு நடந்த இந்த டின்னர் சமயத்தில் இந்திய கலாச்சாரம் அவர்களை எவ்வளவு கவர்ந்துள்ளது? என்பதை எடுத்துக்காட்டும் ஒரு உதாரணமாக அமைந்தது

யுகோ கிஷிடா

ஜப்பான் பிரதமர் கிஷிடாவின் மனைவி யுகோ கிஷிடா. இவர் அழகிய பச்சை நிற புடவையும் பிங்க் நிற பிளவுஸும் அணிந்திருந்தார்.

இந்தியாவின் பாரம்பரிய உடையான புடவையில் அவர் மிகவும் அழகாக காட்சி அளித்தார். அதற்கு மணிமகுடமாக அவர் நெற்றியில் ஒரு அழகான பொட்டும் வைத்திருந்தார். இந்தியர்களைப் போல ஒரு நெக்லஸும் அணிந்திருந்தார்.

கிரிஸ்டலினா ஜார்ஜீவா

சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப்., தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா பர்பிள் நிற எத்னிக் ஆடையை அணிந்திருந்தார். அதற்கு மேட்சிங் ஆக கோல்டன் நிறத்தில் துப்பட்டா போட்டு இருந்தார். அவர் அதில் மிகவும் அழகாக இந்தியரைப் போல தன்னை காட்டிக்கொண்டது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. அதேபோல் செயின், கம்மல், பிரேஸ்லெட் என முழுக்க முழுக்க ஒரு இந்தியரைப் போன்றே அவர் அங்கு தன்னை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்திக் கொண்டார்.

ட்செபோ மோட்செபே

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவின் மனைவியான ட்செபோ மோட்செபே, இந்தோ-வெஸ்டர்ன் வடிவில் ஒரு அழகிய ஆடையை அணிந்து வந்தார். மஞ்சள் நிறத்தில் பூக்கள் போட்ட ஆடையையும் பர்பிள் நிற ஷாஷும் அணிந்திருந்தார். கொண்டை போட்டிருந்த அவர் அத்துடன் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தலையில் தொடுத்த மல்லிகைச் சரத்தினை சூடி இருந்தார்.

கோபிடா ஜக்நாத்

மொரிஷியஸ் பிரதமர் பிரவீந் குமார் மனைவி ஆன கோபிடா ஜக்நாத் அழகான ஒரு புடவையில் வந்திருந்தார். மிக எளிமையான ஒரு புடவையும் கைகளில் விர தங்க நிறத்திலான வளையலும் காதல் ஒரு கம்மலும் நெற்றியில் பொட்டும் வைத்து அளவே இந்தியப் பெண்ணைப் போல காட்சி அளித்தார்.

ஷேக் ஹசீனா

வங்கதேச பிரதமரான ஷேக் ஹசீனா வழக்கம் போல தனது புடவையை அணிந்திருந்தார். வெள்ளை நிற புடவை அவருக்கு மிக அழகாக இருந்தது. முத்துமணி மாலையும், கம்மலும், அழகிய பொன்நிற பேட்ஜும் அணிந்திருந்தது அவரது அழகை மேலும் மெருகேற்றியது.

அக்ஷதா மூர்த்தி

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியும் அந்நாட்டின் முதல் குடிமகளும், இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி-சுதா மூர்த்தியின் மகளும் ஆன அக்ஷதா மூர்த்தி இந்திய கலாச்சாரப்படி ஆடை அணிந்து வந்திருந்தார். அதில் பாரம்பரியமும் நவீனமும் கலந்து இருந்தது. வண்ணமயமான அந்த ஆடை அனார்கலி ஸ்டைலில் உள்ள ஒரு கவுன் போல இருந்தது. அதில் ப்ளூ, கிரீன், ரெட் ஆகிய நிறங்கள் இடம் பெற்று இருந்தன.

கீதா கோபிநாத்

சர்வதேச நாணய நிதியத்தின் துணை மேலாண் இயக்குனர் கீதா கோபிநாத் அழகாக புடவையில் வந்திருந்தார். ப்ளூ கலரில் எம்ப்ராய்டரி போட்ட பார்டர் உள்ள புடவையும் அதற்கு மேட்சிங் ஆக சிவப்பு நிற பிளவுஸும் அணிந்திருந்தார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE