கண்ணா, கிருஷ்ணா, கோவிந்தா, கோபாலா, மாதவா, கேசவா, முரளீதரா, முரளி மனோகரா என பல பெயரானாலும் மகாவிஷ்ணுவின் 8வது அவதாரம் ஒன்றுதான். அதுதான் கிருஷ்ணா.

பல அசுரர்களை அழிக்கவும், மகாபாரத யுத்தத்தின் மூலம் நீதியை நிலை நாட்டி, தர்மம் தான் எப்போதும் வெல்லும் என்பதை உணர்த்தவுமே கிருஷ்ணராக அவதாரம் எடுத்தார்.

கிருஷ்ண ஜெயந்தி விரதம்

வழக்கமான விரதத்தைப் போன்றே கிருஷ்ண ஜெயந்திக்கும் அதிகாலை எழுந்து நீராட வேண்டும்.

சாதாரண பொட்டாக அல்லாமல், திலகம் போன்ற வடிவில் பொட்டு வைப்பது கிருஷ்ணனுக்குப் பிடிக்குமாம்.

நாள் முழுக்க விரதம் இருப்பது அவசியமில்லை. ஆனால், ஒன்றரை மணி நேரமாவது விரதம் இருந்தால் முந்தைய 3 பிறவிகளின் பாவம் நீங்கி நல்லருள் நேரும் என நம்பப்படுகிறது.

எதுவும் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள், உப்பு, அரிசி தவிர பழங்கள், பழச்சாறுகளை சாப்பிடலாம்.

கிருஷ்ணர் பாதம் :

கிருஷ்ண ஜெயந்தி என்றாலே வீட்டில் இருக்கும் குழந்தைகளை குட்டி ராதையாகவும், குட்டி கிருஷ்ணராகவும் வேடமிட்டு அழகு பார்ப்பதோடு அவர்களின் பாத அச்சுக்களை அரிசி மாவில் தோய்த்து வீட்டின் வாசல் முதல் கிருஷ்ணர் படம் வைத்துள்ள பூஜையறை வரை வைக்கலாம்.

பூஜிப்பது எப்படி?

ஒரு பலகையில் சிவப்புத் துணி விரித்து பீடத்தில் கிருஷ்ணரின் சிலை அல்லது போட்டோவை வைக்கவும். முடிந்தால் நீங்களே களிமண்ணால் கிருஷ்ணர் சிலையை செய்து வழிபடுவது நல்லது.

பூஜை தொடங்குவதற்கு முன்னர் கிருஷ்ணருக்கு முன் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மீது சிறிது அரிசியைப் பரப்பவும். பின் வெண்கலக் குடம் நிறைய நீர் வைத்து, மாவிலை, தேங்காய் கொண்டு கலசமாக வைக்கவும்.

கலசத்தின் வலது புறம் மஞ்சள் பிள்ளையார் வைத்து திலகமிட்டு, பூ போடவும்.

குத்து விளக்கு வைத்து, நெய் விளக்கை ஏற்றவும். பின் ஊதுபத்தி ஏற்றி வைத்து பூஜைப் பொருட்களை வைத்து விநாயகரையும் கிருஷ்ணரையும் பூஜை தடையின்றி நிறைவேற்ற வேண்டிக் கொள்ளவும். பின் தீப, தூப ஆராதனை செய்து மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யலாம்.

“ஸர்வம் க்ருஷணார்ப்பனம்” என்ற உச்சரித்து, கிருஷ்ணா நீங்கு எழுந்தருளி தன்னுடைய அலங்காரம், பூஜை, வழிபாட்டை ஏற்றுக் கொள்வாயாக என கூறி பூஜையை தொடங்கவும்.

பஞ்சாமிர்தம், புண்ணிய நதி நீர் வைத்து சிலைக்கு அபிஷேகம் செய்யலாம். புகைப்படமாக இருந்தால் அவற்றை தெளிக்கலாம். கிருஷ்ணருக்கு மஞ்சள் ஆடை அல்லது ஏதேனும் சுத்தமான துணியை அணிவிக்கலாம். தீப, தூபம் காட்டிய பின் சூரியனை வணங்கவும்.

திலகம்

கிருஷ்ணருக்கு அஷ்டகந்தா, சந்தனம்,குங்குமத்தால் திலகம் இடவும். துளசி இலை இந்த பூஜைக்குக் கட்டாயம். அதனைக் கொண்டு அர்ச்சனை செய்யவும். வெண்ணெய், துளசி, சீடை, முருக்கு, இனிப்பு வகைகள், நாவல் பழங்கள், விளாம்பழம் வைத்து பூஜிக்கவும். எதுவும் செய்ய முடியாவிட்டால் வெண்ணெய், அவல், துளசி மட்டும் வைத்து பூஜைத்தால் போதும்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் கிருஷ்ணரின் விக்ரகத்தை மடியில் லைத்து தாலாட்டு பாடலாம். பின், கலசத்தை வலது புறம் நகர்த்தி வைத்துவிட்டு, நைவேத்திய பலகாரங்களை அங்கு வந்த குழந்தைகளுக்கும், பின் பூஜைக்கு வந்திருப்போருக்கும் வழங்கலாம்.

கிருஷ்ண பூஜை முடிந்த பின்னர் சந்திரனை பார்த்து வழிபாடு செய்யவும். ஏனெனில் வசுதேவருக்கு பின் கிருஷ்ணரை வழிபாடு செய்தது சந்திர பகவான் மட்டும் தான்.

தான தர்மம்

கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் ஏழை, சிறுவர், சிறுமிகளுக்கு உணவு, உடை, கல்விக்காக உங்களால் இயன்ற அளவு உதவி செய்யலாம். அப்படி செய்தால் மனக்குறைகள் நீங்கி மகிழ்ச்சி நிறையும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE