நாமக்கல்லுக்குப் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள பெண் கலெக்டர் உமா. இவர்தான் அரசு மருத்துவர்களையும், செவிலியர்களையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார்.

ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு திடீரென ஆய்வுக்கு வந்தார் ஆட்சியர். அப்போது பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவர்களைக் கண்டித்தார்.

என்னென்ன குறைகள்?

மொத்தம் 6 மருத்துவர்கள் அங்கு இருக்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருந்தார். பிற 5 மருத்துவர்களும் அங்கு பணியில் இல்லை.

மொத்தம் 8 செவிலியர்கள் அங்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் 2 பேர் மட்டுமே இருந்தனர். மீதம் 6 செவிலியர்களும் ஆப்சென்ட்.

நோயாளிகள் பற்றிய ஆவங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை

அடிப்படை மருத்துவ உபகரணங்கள் கூட அங்கு இல்லை

மருத்துவக் கட்டிடங்களுக்கான எந்தவித ஆவணமும் இல்லை.

முன்பகுதியிலேயே அமைந்திருக்க வேண்டிய புறநோயாளிகள் பிரிவு 500 மீட்டர் தள்ளி உள்ளது.

என்ன சொன்னார் ஆட்சியர்?

500 மீட்டர் தொலைவைக் கடந்து வருவதற்குள் வரும் நோயாளியிள் உயிரே போய்விடும். கட்டிங்களுக்கான ஆவணங்கள் எங்கே? எனக் கேட்டார். அது அங்கு இல்லை. இதையடுத்து நோயாளிகள் பற்றிய குறிப்பேடுகளும் ஏதும் இல்லாததால் கோபமடைந்தார்.

மருத்துவர்கள் 5 பேர் எங்கே? எனக் கேட்டபோது, அவர்களுக்கு வீக் ஆஃப் எனும் வார விடுமுறை என பதிலளித்தனர். அத்தனை பேருக்கும் எப்படி ஒரே நாளில் வீக் ஆஃப் தருவார்கள் எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக் கணைகளுக்கு பதிலளிக்க முடியாமல் மருத்துவர்களும், செவிலியர்களும் திணறிப் போயினர்.

செவிலியர்களில் கூட 6 பேர் இல்லாததைக் கண்டித்தார். மேலும், இருக்கும் செவிலியர்களுக்கும் போதிய அனுபவம் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். அவசரமாக பொதுமக்களில் யாரேனும் உயிரைக் காக்க இங்கு வந்தால், அவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பீர்கள்? என சரமாரியாகக் கேள்வி கேட்டு விளாசித் தள்ளினார்.

மேலும் நோயாளிகளுக்காகக் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் பூட்டப்பட்டிருப்பதையும், ஒரே கட்டிடத்தில் ஏன் அத்தனை நோயாளிகளும் வைக்கப்பட்டுள்ளனர்? என்றும் கேள்வி எழுப்பினார். மருத்துவமனைக் கட்டிடத்தை சுகாதாரமாகப் பராமரிக்காதது பற்றியும் அவர் கேள்வி எழுப்பினார்.

மருத்துவர், செவிலியரின் அலட்சியப்போக்கு, மருத்துவமனையின் நிலைமை ஆகியவற்றை தனது குறிப்பேடுகளில் பதிவு செய்த ஆட்சியர் உமா, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

யார் இந்த ஆட்சியர்?

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் உமா. கடந்த 1995 -ல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார். 2005-ல் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராகப் பெறுப்பேற்றார்.

2015-இல் தேசி ய நலவாரிய குழும இணை இயக்குநராக பொறுப்பு வகித்த அவருக்கு 2019-ல் ஐஏஎஸ் பதவிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு திருவள்ளூரில் பயிற்சி ஆட்சியர், பழனியி ல் சார் ஆட்சியர், ராணிப்பேட்டையில் துணை ஆட்சியராகவும் பணியாற்றினார்.

சுகாதாரத்துறை திட்ட இயக்குநராகவும், முதல்வர் காப்பீடு தி ட்டம், ஆம்புலன்ஸ் சேவை , உலக வங்கி , ஜப்பான் வங்கி யி ல் நி தி உதவி பெறுவதற்கான திட்ட இயக்குநராகவும் பணியாற்றினார்.

கடந்த மே மாதம் முதல் நாமக்கல் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்தி ற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என பதவியேற்றதும் கூறினார். அத்துடன், மலைவாழ் மக்களின் சுகாதாரம், பெண்களின் ஆரோக்யம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE