சிங்கம் தான் காட்டுக்கு ராஜா எனப்படும். அத்தகைய ராஜாவையே வீழ்த்தும் சில மிருகங்களும் வனத்தில் உண்டு.

என்னதான் சிங்கம் கம்பீரமாக காட்டில் நடமாடி வந்தாலும், அதனை ஒரு சில சூழல்களில் பிற விலங்குகள் வேட்டையாட துணிந்து நிற்கும். அவை என்னென்ன விலங்குகள்? எந்தெந்த சூழலில் அவை வேட்டையாட காத்திருக்கும்? என்பதை ‘த காரிகை’-யின் சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்.

சிங்கங்களை வேட்டையாடும் மிருகங்களில் கழுதைப் புலியும் ஒன்று. இது சிங்கங்களை வேட்டையாடும் விலங்குகளின் பொதுவான விலங்குகளின் பட்டியலில் இருக்கும் ஒன்றாகும்.இவை மட்டுமே உலகில் சிரிக்கும் விலங்கு என பெயர் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சில நேரங்களில் எழுப்பும் ஒலி மனிதர்கள் சிரிப்பதை போன்று இருக்கும்.

சிறுத்தை

சிங்கங்களை ஓடிச் சென்று வேட்டையாடும் விலங்குகளில் முக்கியமான இடம் வகிப்பவை சிறுத்தை. ஆனால் சிறுத்தையினால் ஒரு இளம் சிங்கத்தை வேட்டையாட முடியாது. குட்டி சிங்கத்தையும் அல்லது நோய் வாய்ப்பட்ட சிங்கத்தையோ மட்டுமே சிறுத்தைகள் வேட்டையாடி உண்ண முடியும்.

ஆப்பிரிக்க காட்டு நாய்

ஆப்பிரிக்க காட்டு நாய்கள் பொதுவாக வேட்டையாடி சாப்பிடக்கூடியவை. இவை ஒரு சிங்கத்தை வேட்டையாட நினைத்து விட்டால் கூட்டாக சேர்ந்து திட்டமிட்டு சுற்றி வளைத்து சிங்கத்தை ஜெயித்து பின் அதை வேட்டையாடி உண்ணும்.

லெப்பர்ட்

சிறுத்தை புலி இனத்தைச் சேர்ந்த லெப்பர்ட்கள் எப்போதுமே வேட்டையாடி உண்ணக்கூடியவை. இது சிங்கத்தை இரையாக்கும் திறமையையும் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக வயதான சிங்கங்களையும் இது வேட்டையாடும்.

கேப் பஃவல்லோ

கேப் பஃவல்லோ என்ற காட்டு எருமை எருமை இனத்தைச சேர்ந்தது. இது, பொதுவாக சிங்கங்களை வேட்டையாடாது. ஆனால் சிங்கங்கள் தங்களை தாக்க வந்தால் இது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவற்றை தாக்கிக் கொல்லும்.

நீர்யானை

நீர்யானை கூட சிங்கத்தை வேட்டையாடும் விலங்குகளில் ஒன்றாகும். ஆனால், தான் மிரட்டப்படுவதாகவோ தனது உயிருக்கு அச்சுறுத்தல் வந்து விடுமோ என்று அஞ்சினால் மட்டுமே இது சிங்கங்களை வேட்டையாடத் துணியும்.

யானை

நிலத்தில் வாழும் உயிரினங்களிலேயே அதிக எடை கொண்டவை யானை. ஆனால் இது எப்போதும் சிங்கத்தால் பெரும்பாலும் இரையாக்கப்படாது. அப்படி சிங்கம் இரையாக்க நினைத்தால் யானை பழி தீர்க்கும் குணம் கொண்டது.

முதலை

நைல் நதியில் வாழக்கூடிய முதலைகள் சிங்கங்களை பதுங்கி இருந்து வேட்டையாடும். நீர் நிலைக்கு அருகே சிங்கங்கள் வந்தால் அருகில் வரும் வரை காத்திருந்து, எட்டிப் பிடித்து, தாவிக் கடித்து, கொன்று தின்னும் குணாதிசயங்களைக் கொண்டது முதலை.

பிளாக் மாம்பாஸ்

பிளாக் மாம்பாஸ் என்று விஷமுள்ள ஆப்பிரிக்க இன பாம்புகள் சிங்கத்தை தனது விஷத்தால் கொன்று ஒரு நிமிடங்களில் உயிரைப் பறிக்கும் வல்லமை கொண்டது.

ஆப்பிரிக்க தேனீ பேட்ஜர்

ஆப்பிரிக்க தேனீ பேட்ஜர் என்ற விலங்கு பொதுவாக அச்சம் கொள்ளாதது. அது எந்நேரமும் எந்த விலங்கையும் தாக்கும். அதில் சிங்கம் மட்டும் விதிவிலக்கல்ல.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE