ஓணம் சத்யா. ஒரு வேளை விருந்துல எதுக்கு 64 உணவு?
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாதான் இந்த ஓணம் பண்டிகை. சாதி, மத வேறுபாடின்றி இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம் என அனைத்து தரப்பு மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையைத்தான் கேரளாவின் அறுவடை திருநாள் அப்டின்னு சொல்றாங்க. நாம அறுவடைத் திருநாளா தைப்பொங்கல் கொண்டாட்றோம்-ல அது மாதிரி தான். பொங்கல் 4 நாள் கொண்டாடினா, ஓணம் 10 நாள் கொண்டாடுவாங்க.
கொல்லவர்ஷம் அப்டின்னு மலையாள ஆண்ட அழைக்குறாங்க. அந்த ஆண்டுடைய சிங்க மாதத்தில ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களும் இப்பண்டிகை கோலாகலமா கொண்டாடப்படுது.
அதிலும் குறிப்பா ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது திருவோணம் அப்டின்னு அழைக்கப்படுது. சரி, எப்போ இருந்து? எதுக்காக ஓணம் கொண்டாட ஆரம்பிச்சாங்கன்னு தெரியுமா?
சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும், வாமணன் அவதரித்த நாளும் அன்றுதான் அப்டின்னும் சில குறிப்புகள் கூறப்படுது.
மகாபலி அப்டிங்குற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆட்சி செஞ்சுட்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (அதாவது குள்ளமான உருவில்) உருவெடுத்து வந்து 3 அடி மண் வேண்டும்னு கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு 3-வது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் மகாபலி ராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.
ஒவ்வொரு ஆண்டும் சிங்க மாதத்துல மக்கள் 10 நாட்கள் புத்தாடை அணிஞ்சு உற்றார், உறவினரோட, 21 முதல் 64 வகையான உணவு சமைத்து ஓணம் சத்யா அப்டிங்குற பேர்ல விருந்து சமைச்சு சாப்பிடுவாங்க. அதில், அவில், நான்கு வகை பாயசம், புளிச்சேரி, சிப்ஸ், பச்சடி, சாம்பார், கூட்டுக்கறி, பப்படம், ஓலன், ஊறுகாய் என அடிக்கிக் கொண்டே போகலாம். தேங்காய், தேங்காய் பால், நெய், சிவப்பு அரிசி, பலவகையான காய்கறிகள் உள்ளிட்ட 60 க்கும் அதிகமான ஆரோக்கியம் தரும் பொருட்களை பயன்படுத்தி இந்த விருந்து தயார் செய்யப்படுவது வழக்கம். உலகில் வேறு எங்கும் இது போன்ற வழக்கம் இருப்பதாக தெரியவில்லை. இது ராஜபோக விருந்து ஆகும். மக்களைக் காண வரும் மகாபலி மகாராஜாவுக்காக சமைக்கப்படுகிறது. அதுவும் ஒரே வேளையில் வகைவகையான உணவுகள்.
ராஜா வந்து மக்கள பாக்கும்போது, மக்கள் எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க அப்டிங்குற காட்டிக்குறதுக்காகத்தான், 10 நாட்களும் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாடப்படுது. அப்போ முக்தி பெற்ற மாபலி மகாராஜாவும், மக்களுக்கு இந்த செல்வமும், மகிழ்ச்சியும், சந்தோஷமும் ஆண்டு முழுதும் நீடிக்கனும் ஆசி வழங்கிட்டு சந்தோஷமா பாதாளத்துக்கு போறதா நம்பப்படுது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.