ஹேப்பி பர்த்டே சென்னை! மெட்ராஸ சுத்திப் பாக்கப் போறேன்னு கிளம்பி வந்தவங்கள்ல பலரு இந்த இடத்தை விட்டு போக மனசில்லாம இங்கேயே தங்கீட்டாங்க. அப்டி மெட்ராஸ் தன்பக்கம் வெளிமாவட்ட, வெளி மாநில மக்கள ஈர்த்தது எது அப்டிங்குற காரணங்கள ஒரு தோராயமா பட்டியலிடுது “த காரிகை.“

சினிமா

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள்லயும் சினிமா கொட்டாய் இருக்கும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, சிவகுமார்-ன்னு அந்த காலம் தொட்டு, ரஜினி, விஜய், அஜித்ன்னு இந்தக் காலம் வரைக்கும் தங்களோட ஆஸ்தான நாயகன திரையில பாத்துட்டு பூரிச்சுப் போய் கொண்டாடுவாங்க ரசிகர்கள். அத்தகையை ஹீரோக்கள நேர்ல பாக்கனும்ங்குற ஆசையிலும், அமே மாதிரி தானும் சினிமால நடிகராகனும், இயக்குநராகனும்னு கிளம்பி வந்தவங்கதான் சென்னைல அதிகமா இருக்குற வெளிமாவட்டத்துக்காரங்க.

உறவினர்கள்

நம்ம ஊர்ல நம்ம கூடவே ஒன்னா படிச்சு ஒரே மாதிரி வறுமைய பகிர்ந்துக்கிட்டு இருந்தவங்க, யாராச்சும் அவங்களோட உறவினர், நண்பர் மூலமா சென்னைக்கு போயிருப்பாங்க. அப்படிப் போனவங்க லீவுக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் அவங்களோட வாழ்க்கை முறையே தலைகீழா மாறியிருக்கும். டிப்டாப்பான டிரஸ், ஆளே ஸ்டைலா மாறினது மட்டும் இல்லாம, அவங்களோட வருமானமும் பெருகியிருக்கும். ஊர்ல கடன் லாம் அடைச்சு சொத்து சேத்த ஆரம்பிச்சுருப்பாங்க. எனவே அதப் பாத்து இன்ஸ்பையர் ஆகி வந்தவங்க ஏராளம்.

வேலைவாய்ப்பு

கொட்டாங்குச்சியில மியூசிக் இன்ஸ்ட்ருமேன்ட் செய்யுறதுல இருந்து, பஞ்சுமிட்டாய், பாணி பூரி, தெருக்கடை-ன்னு எந்த தொழில் பண்ணாலும் இங்க இருக்குற மக்களுக்கு வாங்குற சக்தி அதிகமா இருக்கும். அதனால, எந்த ஒரு கடையப் போட்டாலும், குறைஞ்ச காலத்துல கல்லா கட்ட ஆரம்பிச்சுக்கலாம்-னு ஒரு நம்பிக்கை வந்துடும். அதுமட்டும் இல்லாம ஐடி ஆகட்டும், ஊடகம் ஆகட்டும், பெரும்பாலானவங்க சென்னையில இருக்குற இடங்கள்ல வேலை செய்யத்தான் சென்னை வர்றவங்க அதிகம்.

தொழிற்சாலைகளும், துறைமுகங்களும்

சென்னையின் மையமா இருக்குற துறைமுகத்துல அதிக ஏற்றுமதி நடக்கும். எனவே ஏற்றுமதித் தொழிலும், கன்டெய்னர் சார்ந்த தொழிலும் இங்கு அதிகளவு வேலைவாய்ப்பை உருவாக்கும். அதுமட்டுமின்றி கார் முதல் போன் வரை பல்வேறு உற்பத்தி ஆலைகள் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அள்ளி வழங்குகிறது.

படிப்பு

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், ஐஐடி என மெத்தப் படிக்க நினைக்கும் மேதாவிகளுக்கான பல கல்வி நிறுவனங்கள் இங்க தான் அதிகம் இருக்குன்னு சொல்லாம். இத்தகைய நிறுவனங்கள்-ல படிச்சா, அதிக அறிவுச் செல்வம் கிடைக்கும் அப்டிங்கறது உண்மை, அதேபோல அதிக சம்பளம் கிடைக்கும் அப்டிங்குறதும் மறுக்க முடியாத உண்மைன்னு பலரும் சொல்ற தகவலா இருக்கு.

அன்பான மக்கள்

சென்னையில் பக்கத்துவீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாது என பலரும் சொல்லிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், இது பெரும்பாலும் மேட்டுக்குடி சமூக வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவோருக்குத்தான். சிறு சிறு சமூகங்களாக வாழும் மக்கள் உறவுகளை விட்டுவிட்டு வெகுதூரத்தில் இருந்தாலும் தங்களுக்குள் உறவுகளைப் போல் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

திடீரென ஒரு விபத்தோ, திருட்டோ ஓடிவந்து உதவ கோடி பேருண்டு என மார்தட்டும் சென்னை. இது ஒரு மாற்றாந்தாயாக இருந்தாலும் வருவோரை தாயுள்ளத்தோடு அரவணைத்து வாழ்வு தரும். இந்த சென்னை தினத்தில் த காரிகையும் உங்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE