நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் தயவால் கடந்த 3 மாதங்களாக காற்று வாங்கிய தியேட்டர்களில் எல்லாம் இன்று கல்லா கட்டும் அளவுக்கு முன்னேறியுள்ளது.

நடிகர் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், விநாயகம், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது ஜெயிலர் படம். வன்முறை அதிகம் இருந்தாலும், அது நம்மை பாதிக்காத அளவுக்கு காமெடியைக் கலந்து கொடுத்துள்ளனர். உதாரணத்துக்கு கொடூர வன்முறை என்ற பாகற்காயில் டார்க் ஹ்யூமர் என்ற சாக்லெட்டைக் கலந்து கொடுத்ததால்தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மனம் கவர்ந்த திரைப்படமாக மாறிவிட்டது.

வசூல் சாதனை

இதேபோல் வசூலிலும் சாதனை படைத்துள்ளது ஜெயிலர் படம். முதல்வார கலெக்சன் 500 கோடியைத் தொட்டுவிடும் என இன்ஃபுளூயன்சர்கள் சிலர் கூறியிருந்தனர். ஆனால், கலெக்சன் டிரேக்கர்களின் பொய்யைத் தவிடுபொடியாக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனமே ஒரு வசூல் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 375 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக பெருமிதத்துடன் கூறியுள்ளது. இது முந்தைய தமிழ் சினிமா செய்யாத சாதனை என்றும் சினிமா தயாரிப்புத்துறையில் முக்கியப்பங்காற்றிவரும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் குறிப்பிட்டுள்ளது.

கல்லா கட்டிய படம்

இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் படு குஷியில் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளிலும் படம் வசூல் வேட்டையாடி வருகிறது. ராட்சசத்தனமாக படத்தின் வெற்றியும் எங்கோ செல்கிறது. கடந்த 3 மாதமாக எந்தப் படமும் சரிவர வசூலிக்காததால் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சிலர் அதிக கடன் தொல்லையில் இருந்தனர். ஏற்கெனவே, கொரோனா கட்டுப்பாடுகள், ஓடிடி, பெரிய ஹிட் படங்கள் வராதது என பல்வேறு பிரச்னைகளால் திரையரங்குகள் பல மூடப்பட்டன. இதேபோல், கடன் தொல்லையும் அதிகரித்து அவதிப்பட்டனர்.

காக்க வந்த ஜெயிலர்

ஜெயிலர் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டதால், படத்திற்கு குடும்பம் குடும்பமாக மக்கள் படையெடுத்து வருகின்றனர். பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சியாகவே உள்ளன. எனவே, படத்தை வாங்கிய டிஸ்ட்ரிப்யூட்டர்களும், திரையரங்க உரிமையாளர்களும் வசூலில் அள்ளி வருகின்றனர். எனவே கடந்த 3 மாதங்களாக ஒரு சிலர் பட்டிருந்த கடனும் அடைவதாக திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு தலைவர் படம்தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE