உலர் திராட்சை ஊறிய நீரோட பலன் தெரிஞ்சா கண்டிப்பா குடிப்பீங்க

உலர்ந்த திராட்சை என்பது உடலுக்கு மிகவும் சத்தானது தான். அதை நீரில் இரவு முழுக்க ஊறவைத்து அந்த தண்ணீரை பருகும் போது உடலுக்கு பல்வேறு நன்மைகள் விளைகின்றன. அவை என்னென்ன என்பதை “த காரிகை”யின் கட்டுரையில் பார்க்கலாம்.

ஈரலை சுத்தப்படுத்தும்

உலர் திராட்சை ஊற வைத்த நீரை பருகுவதன் மூலம் உடலில் உள்ள விஷத்தன்மைகள் மிக்க டாக்சின்ஸ் உடலை விட்டு வெளியேறும். இது ஈரலின் பயோ கெமிக்கல் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.

எடை குறைக்க உதவும்

உலர் திராட்சை நீரை தினமும் காலை வெறும் வயிற்றில் பருகுவதன் மூலம் உடல் எடை குறையும். ஏனெனில் அந்த நீரில் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் என்ற இரண்டும் அதிகமாக உள்ளது. இதன் மூலம் அதிக அளவு எனர்ஜி கிடைக்கும். அது மட்டும் இன்றி ஒரு நாளைக்கு தேவையான ஃபைபர் சத்து, நாள் முழுவதும் நீட்டித்து வைக்க இந்த தண்ணீர் உதவும்.

புற்றுநோய் வாய்ப்பை குறைக்கும்

உலர் திராட்சையில் எப்போதும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் நிறைந்திருக்கும். இது நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவி புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவும்.

இரும்புச்சத்து குறைபாட்டை போக்கும்

குறைந்த அளவு இரும்பு சத்து உள்ளவர்கள், ஹீமோகுளோபின் குறைபாட்டுக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் போன்றோர், உலர் திராட்சை ஊற வைத்த நீரை பருகலாம். இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. ரத்த ஓட்டமும் மிக எளிதாக செயல்பட இந்த உலர் திராட்சை நீர் பயன்படும் அத்துடன் அனிமியா-வை தவிர்க்கவும் உலர் திராட்சை நீர் பருகுவது நல்லது.

இதயத்தை ஆரோக்கியமாக்கும்

உலர் திராட்சை நீரை பருகுவதன் மூலம் இதயம் ஆரோக்கியமடையும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். கேடு தரும் கொழுப்புகளை நீக்கி இதயத்தை சீராக இயக்க இந்த நீர் உதவும்.

வயிற்றில் ஆசிட்டை கட்டுப்படுத்தும்

அசிடிட்டியால் பாதிக்கப்படுவோர், இரவு ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதும் அதன் நீரை பருகுவதும் நல்லது. அசிடிட்டி கண்ட்ரோலுக்கு உதவும் இது வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்தும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வளமான நோய் எதிர்ப்பு மண்டலம் வேண்டும் என்போர் அதிக அளவு ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்த உலர் திராட்சை நீரை பருகலாம். தினமும் உங்கள் டயட்டில் உலர் திராட்சை நீரை சேர்த்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற நோய் தொற்று உள்ளிட்டவற்றிலிருந்து தவிர்க்கலாம்.

குடல் இயக்கம் சீராகும்

உலர் திராட்சை நீரை தினமும் பருகுவதன் மூலம் குடலின் இயக்கம் சீராக இருக்க உதவும். இது மட்டும் இன்றி குடல் சார்ந்த நோய்கள் பிரச்சனைகள் செரிமான கோளாறு மலச்சிக்கல் போன்றவற்றையும் இந்த நீர் தீர்க்கும்.

எலும்புக்கு வலு

உலர் திராட்சைகள் உள்ள போரன் என்ற சத்து எலும்பின் வலுவுக்கு உதவும். அதுமட்டுமின்றி உலர் திராட்சைகள் கால்சியமும் இருப்பதால் இது எலும்பை பலப்படுத்தும்.

ரத்த அழுத்தத்தை அளவை கட்டுப்படுத்தும்

உலர் திராட்சையில் உள்ள பொட்டாசியம் சத்து உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE