பொம்மன் – பெல்லி குற்றச்சாட்டுக்கு இப்படி ஒரு பதில எதிர்பார்க்கல. . .
பொம்மன் – பெல்லியை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. தமிழ் திரையுலகமே ஏங்கித் தவித்து கேயேந்திக் காத்திருந்த ஆஸ்கர் விருதை தமிழகத்துக்குப் பெற்றுத் தந்தது. ”The Elephant Whisperers” ஆவணப்படம். மிக எளிமையாகவும், இயல்பாகவும் அதில் தோன்றி அசத்தியவர்கள்.
குவிந்த வாழ்த்து மழை
இப்படி ஒரு விருதை இப்படத்துக்கு திரையுலகில் கூட யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இன்ப அதிர்ச்சியாக வந்திருந்த விருது கண்டு தமிழகமே கொண்டாடித் தீர்த்தது. ஆம், கொண்டாடிய கொண்டாட்டம் தீர்ந்து அனைவருமே அவர்களை மறந்துவிட்டனர். அவர்களை தங்களது ஆவணப்பட ஆதாயத்துக்குப் பயன்படுத்தி கார்த்திகியும், தயாரிப்பு நிறுவனமான சிக்யாவும் கூட மறந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்கள், புகழ் வெளிச்சத்துக்குப் பின் அவர்களுக்கு என்ன ஆனது என்றெல்லாம் யாருமே கண்டுகொள்ளவில்லை.
வீடு – கார்- நிலம் – கான்வென்ட் படிப்பு
படப்பிடிப்பு சமயத்தில் தங்களுக்கு வீடு வாங்கித் தருவதாகவும், கார் வாங்கித் தருவதாகவும், நிலம் எழுதித் தருவதாகவும் கூறியதோடு, தனது பேத்தியை கான்வென்ட் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுவதாகவும் கார்த்திகி வாக்குறுதி கொடுத்ததாக தனியார் ஊடகத்துக்கு பொம்மனும்-பெல்லியும் பேட்டி கொடுத்தனர். படப்பிடிப்பின் போது திருமணம் போன்ற செட் அமைக்க தங்களிடம் ரூ.40,000 முதல் ரூ.1 லம்சம் ரூபாய் வரை கார்த்திகி பணம் வாங்கியதாகவும் சொல்லப்பட்டது. அதையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
பறிபோன வேலை
படம் விருது பெற்றதும் பிரதமர் முதல் அனைவருமே வந்து பாராட்டினர். பணம் கொடுத்தார். முதல்வரும் பணம் கொடுத்திருந்தார். ஆனால், அது தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று இருவரும் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் கொடுத்த வீட்டில் தற்போது வசிப்பதாகவும் கூறியிருந்தார். தங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுக்காத சிலரால் யானைப் பராமரிப்பு பணியாளர் வேலை போய்விட்டதாகக் கூறியுள்ளார் பெல்லி. தங்களது பேத்தி கூட தான் தற்போதைய பள்ளியிலேயே படிப்பைத் தொடருகிறேன் என மிகுந்த மனவேதனையுடன் கூறுவதாக தெரிவித்திருந்தார். இந்தப் படம் ஏன் தான் எடுக்கப்பட்டதோ? என நினைக்கும் அளவு தாங்கள் தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தால் ஒதுக்கப்படுவது போல் உணர்ந்ததாகவும் சுட்டிக்காட்டினார்
ரூ.2 கோடி கேட்டு நோட்டீஸ்
பொம்மன் மற்றும் பெல்லி இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸுக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால், இவர்கள் பெரிய நடிகர்கள் இல்லை என்பதால் படம் நடிப்பதற்கான ஒப்பந்தம் ஏதும் போடாமல் வெறும் வாய்மொழி ஒப்பந்தமாகவே நடித்திருந்தனர். எனவே, இதில் சட்டப்படியும் அவர்கள் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம் என கூறப்படுகிறது.
பேருந்துக்குக் கூட பணமில்லை
மும்பை சென்று தங்களை விருதுக்கு அழைத்துச் சென்றவர்கள் விருது விழா முடிந்ததும், தாங்கள் விமான நிலையத்துக்கு எப்படி செல்வோம் ? என்ற அக்கறையின்றி கையில் காசும் இன்றி தவிக்க விட்டுச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால், விமான டிக்கெட் எடுத்துத் தந்திருந்ததையும் சுட்டிக்காட்டினர்.
என்ன பதில்?
இது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை பொம்மனும்-பெல்லியும் முன்வைக்க இதில் உண்மையில்லை என்று மட்டும் ஆவணப்பட இயக்குநர் கார்த்திகியும், சிக்யா பட நிறுவனமும் தனியார் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளனர். இப்படத்தின் மூலம் தமிழகத்துக்கு ஆஸ்கர் வந்த பெருமையையும், அதன் பின் 91 பாகன்களுக்கு அரசு உதவிகள் கிடைக்க வழி வகுத்ததுமாகவே அதில் கூறியுள்ளனர். ஆனால், பொம்மன்-பெல்லிக்கு பணமோ, பொருளோ, நிலமோ, வீடோ கொடுத்ததாகவோ, அல்லது அந்தக் குற்றச்சாட்டு பற்றிய கருத்தோ ஏதும் அதில் இடம்பெறாதது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது.