மீண்டும் வைரலாகும் சூர்யாவின் வாரணம் ஆயிரம்

2008-ல் வாரணம் ஆயிரம் படம் வந்த போது எல்லா இளைஞர்களும் அந்தப் படத்தின் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். படமும் மெகா ஹிட்டடித்தது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் “சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன்” படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் சூர்யா டுயல் ஆக்டிங்கில் ஃப்ரண்ட்லியான அப்பாவாகவும், இளைஞர் கேரக்டரில் ரொமான்டிக் ஆன ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருப்பார். அப்பா சூர்யாவுக்கு சிம்ரனும் – மகன் சூர்யாவுக்கு சமீரா ரெட்டியும் ஜோடியாக நடித்திருப்பார்கள். பின், சூர்யாவுடைய மனைவி கதாப்பாத்திரத்தில் திவ்யா நடித்திருப்பார்.

ஹிட்டடித்த பாடல்கள்

அடியே கொல்லுதே

பாடல் கேட்ட இளசுகள் கையில் கிட்டாரே இல்லாமல் வாசித்து வலம் வந்தனர். அதில் நாயகன்-நாயகி அணிந்திருந்த ஆடைகள் கூட பிரபலமாகி ரசிகர்களும் தங்களது ஆடைகளை அணியும் முறையை மாற்றினர்.

அனல்மேலே பனித்துளி

பாடல் மிகவும் ரொமான்டிக்காக எடுக்கப்பட்டிருந்தது. இன்று வரை பசுமையாக இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

அஞ்சல

அவ என்னை என்னைத் தேடி வந்த அஞ்சல என்ற பாடல்தான் அனைத்து காதல் தோல்வியாளர்களின் தேசியகீதமாக ஒருகாலத்தில் விளங்கியது. அவ என் அஞ்சல மச்சான் என்ற டயலாக் ஹேஸ்டேக்காக மீண்டும் டிரெண்டாகியுள்ளது.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

இந்தப் பாட்டுக்கு மறுஅறிமுகமே தேவையில்லை. மென்மையான இசை, மயக்கும் குரல், விழி மூட அனுமதிக்காத காட்சியமைப்பு, ஹீரோயினின் அழகு என அனைத்து ஒன்றாக சேர்த்து இந்தப் பாடலைத் தூக்கி ரசிகர்களின் எவர்கிரீன் பாடல்கள் லிஸ்டில் சிம்மாசனம் போட்டு அமரவைத்துவிட்டது.

அதுமட்டுமின்றி ஓம் சாந்தி சாந்தி ஓம் சாந்தி பாடலும், ஏத்தி ஏத்தி ஏத்தி பாடலும் ஈக்வலாக ஹிட்டடித்து ரசிக்க வைத்து.

பாடல்கள் மட்டுமின்றி எமோஷனலான கதையும் ஆடியன்சுடன் ஒன்றிப் போனது. இந்த நிலையில் சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் என்ற திரைப்படம் தெலுங்கில் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. அரங்கம் நிறைந்த வரவேற்பும் ஆரவாரமும் சற்றும் குறையாமல் பொங்கி வழிய இந்த ஆனந்தத்தில் டிவீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார் நடிகர் சூர்யா.

500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான முதல் காட்சியிலேயே முண்டியடித்துக் கொண்டுடு ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடித் தள்ளுகின்றனர். இது இத்தனை ஆண்டுகளுக்குப் பின் தனக்குக் கிடைத்துள்ள மாபெரும் இன்ப அதிர்ச்சி என சூர்யா மனம் திறந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதை தமிழிலும் ரீ ரிலீஸ் செய்யலாமே என ஒரு சில ரசிகர்கள் கமென்ட்களில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE