பனங்கிழங்கு வேக வைத்து அப்படியே தோலை உரித்து கூட சாப்பிடலாம். அதுமட்டுமின்றி புட்டு, அவியல், வடை, பாயசம், தோசை, உப்புமா என பல்வேறு உணவு வகைகளையும் செய்து அசத்தலாம்.

தோசை – பாயாசம் எப்படி செய்வது ?

பனங்கிழங்கை சுவைக்கேற்றபடி இன்னும் எத்தனையோ வகைகளில் தோசை மற்றும் பாயசம் போல செய்து சாப்பிடலாம். ஆனால் மருத்துவ பலன்களுக்கு சில வழிமுறைகளில் மட்டுமே பயன்படுத்தி உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வேகவைத்த பனங்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, காயவைத்து, இடித்து, மாவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது துண்டுகளாக நறுக்கி வெயிலில் 3 நாட்களுக்கு காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

பனங்கிழங்கு லட்டு-வடை

வேகவைத்த பனங்கிழங்கை வைத்து லட்டு செய்வது மிக எளிது. அதை அரைத்து நெய், சர்க்கரைப் பாகு, வறுத்த முந்திரி-ஏலக்காய் போட்டு உருட்டி எடுத்தால் லட்டு தயார். அதேபோல் தான் வடையும். வாழைப்பூவில் எப்படி வடை செய்கிறோமோ? அப்படித்தான் பனங்கிழங்கு வடையும். வேகவைத்து தண்ணீரை நன்கு வடித்து வடைப்பருப்புடன் மிளகாய், வெங்காயம் உப்பு, சோம்பு உள்ளிட்டவற்றைப் போட்டு அரைத்து, தட்டி, எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் பனங்கிழங்கு வடை தயார்.

பனங்கிழங்கு மாவு

இந்த மாவு மட்டுமே பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதாக நம்பப்படுகிறது. இந்த மாவை கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான பலன் கிடைக்கும் என்றும் இந்த பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும் என்றும் சொல்லப்படுகிறது. பனங்கிழங்கு மாவுடன் பூண்டு, மிளகு, உப்பு, சேர்த்து சாப்பிடலாம். இந்த மாவில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிடவும். இதனால், அதிக தெம்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் எப்போதுமே பனங்கிழங்கு சமைத்தால் அதில் 4 அல்லது 5 மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். ஏனென்றால் இதில் சற்று பித்தம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

பித்தம் வாயு

பனங்கிழங்கு சாப்பிடும் சிலருக்கு வாயுத்தொல்லை வரலாம். எனவே, பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். பனங்கிழங்கில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகையை நீக்கி இரத்த விருத்தியை அதிகரிக்கிறது.

இதேபோல் பனங்கிழங்கின் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE