பார்பி எனும் கதாபாத்திரத்தில் பல அனிமேஷன் படங்களை பார்த்திருப்போம். ஆனால் மனிதர்கள் நடிக்கும் படம் தற்போது வெளியாகி உள்ளது. இது பார்பியின் உலகுக்கும் உண்மையான உலகுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக் கூறும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

யாருக்கான படம்?

பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொம்மையாகவும் சில ஆண் குழந்தைகள் வெறுக்கும் பொம்மையாகவும் இருப்பது பார்பி. ஆனால் இந்த இரண்டு விருப்பு வெறுப்புகளை கொண்டவர்களுக்கும் ஏற்ற படம் இது என டிரைலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்?

இயக்குநர் கிரெட்டா கெர்விக், ஆழமான பெண்ணிய கருத்துக்களை இந்த பார்பி படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், அமெரிக்கா ஃபெரெரா, இஸா ரே, கேட் மெக்கின்னன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கதைக்களம்

படத்தின் முதல் பாகத்தில் எங்கு பார்த்தாலும் பிங்க் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது பார்பி படப்பிடிப்புக்கான செட். அதில் மிதப்பது, நடனம் ஆடுவது என பெண்களால் பார்பிக்களின் ராஜ்யத்தில் தினந்தோறும் கொண்டாட்டமே. மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்துக்கும் பஞ்சம் இல்லா உலகில் சில ஆண்களும் பார்பிக்களுக்கு அன்புமிக்க துணையாக வாழ்ந்து வருகின்றனர்.

கதை இப்படி நகர்ந்து கொண்டிருக்க திடீரென பார்பிக்கு மனிதர்கள் போன்ற சில உணர்வுகள் வெளிப்படத் தொடங்குகிறது. இதை அடுத்து அவர் உண்மையான உலகத்துக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறி வழி அனுப்பப்படுகிறார்.தனியே பயணிக்கும் பார்பி உடன் கெடன எனும் ஆணும் இணைகிறார்.

உண்மையான உலகம்

உண்மையான உலகத்துக்கு பார்பி வந்ததும் அங்கு பெண்களை போகப் பொருளாக பார்ப்பதும், வியாபாரமான சமுதாயம் செயல்படுவதையும் கண்டு அதிர்கிறார். உண்மையான உலகம் ஆண்களால் ஆட்சி செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்கிறார். எனவே மீண்டும் பார்பி லேண்டுக்கு இரு மனிதர்களுடன் பார்பி திரும்புகிறார். அங்கு கென்னால் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை பார்பி உணர்கிறார். இதை அடுத்து பார்பியும் கென்னும் என்ன செய்யப் போகின்றனர் என்ற சுவாரசியமே படம் முழுவதும் நிரம்பி இருக்கிறது.

நடிப்பு

படத்தில் நடித்த அத்தனை நபர்களும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர் இயல்பான நகைச்சுவை படம் முழுதும் நிறைந்திருக்கிறது.

வசனம்

பார்பி படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகளில் முதலிடம் பிடிப்பது வசனம் என்றே சொல்லலாம். முழுமையாக பெண்ணிய கருத்துகளை திணிக்க முடியாமல் பொம்மைகளை வைத்து காமெடியை நிரப்பி பார்பி படத்தை காட்சிப்படுத்தியிருக்கின்றனர். கண் குளிரும் செட் அமைப்புக்கே படத்தை ஒரு முறை பார்க்கலாம் போல என்று பிரம்மாண்டத்தை புகுத்துகிறது.

கிளைமேக்ஸ்

ஆனால் பார்பி படத்தின் கிளைமாக்ஸ் மட்டும் சற்று ஏமாற்றத்தை தருவதாக ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதையும் சற்று கதைக்கு பொருந்தும் படி வைத்திருந்தால் பார்பி பிளாஸ்டிக் ஆக மட்டுமின்றி ஃபென்டாஸ்டிக் மாறி இருக்கும் என்றும் கருத்துக்கள் உலவி வருகின்றன.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE