தமிழகம் மட்டுமல்ல. ஆசியாவிலேயே அதிக அளவு வசிக்கும் மக்கள் பெரும்பாலான உணவாக எடுத்துக் கொள்வது அரிசி வகையான சாதங்கள் தான். ஆனால், அதை ஒரு மாதம் ஒருவர் சாப்பிடாமல் விட்டால் என்ன ஆகும்? என்பதை த காரிகையின் கட்டுரையில் தற்போது பார்க்கலாம்.

உண்மையிலேயே அதிக அளவு அரிசி உணவை உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானது தானா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். இதனால் தான் சர்க்கரை வியாதி வருகிறது என்று எல்லாம் கூட ஒரு விவாதம் சமூக வலைதளங்களிலும் இன்றும் காணக்கூடிய ஒன்றாக தான் உள்ளது.

அரிசியில் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேடுகள் நிறைந்திருக்கின்றன. ஸ்டார்ச் மற்றும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துகளும் உண்டு. ஆனால் அதே அரிசி உணவை அதிகமாக உட்கொள்ளும் போது அவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து உடல் எடையையும் கூட்டும். அதற்காக அரிசி உணவை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட முடியுமா? என்று கேட்டால் அது சிரமம் தான். விளைவுகளும் இருக்கும். ஆனால் ஒரு மாதத்திற்கு அரிசி உணவை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி ஒரு சிலர் ஆய்வு நடத்தி உள்ளனர். அதனை தற்போது காணலாம்

தொடர்ந்து ஒரு மாதம் வரை அரிசி உணவை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உடலில் கலோரிகள் குறையும் அதன் காரணமாக எடையும் குறைய வாய்ப்புண்டு.

அரிசி உணவை தவிர்ப்பது என்பது கண்டிப்பாக ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவையும் குறைத்து விடும். இதனால் ரத்த சர்க்கரை அளவு குறைந்து சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு உடல்சமநிலையில் குளுக்கோசை பராமரிக்க உதவும்.

அரிசிக்கு பதிலாக வேறு ஏதேனும் தானியங்கள் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஒருவர் மீண்டும் அரிசி உணவை சாப்பிட ஆரம்பித்தால் குளுக்கோஸ் அளவு மீண்டும் ஏற்ற இறக்கமாகவே ஒரு பிளக்ட்சுவேஷனில் காணப்படும். அரிசி உணவை கைவிடுவதன் மூலம் கிடைக்கும் கார்போஹைட்ரேட் வைட்டமின் பி சில தாதுக்கள் ஆகியவை உடலில் சத்து குறைபாட்டை ஏற்படுத்தலாம். ஆனால், இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்.

அரிசி உணவை மொத்தமாகவே உங்களது உணவு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்றே சில டயட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த செயல்முறை தசைகள் வலுவிழப்பதற்கு வழிவகுக்கும். உடலில் அதிக அளவிலான ஊட்டச்சத்து தாதுக்கள் குறைபாடு ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர்.

ஒரு மாதத்திற்கு அரிசியை தவிர்ப்பதால் நார்ச்சத்து குறையும். இது செரிமானத்தை சீர்குலைக்கலாம். குடல் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்களை அது ஏற்படுத்தக் கூடும். உடலில் அதிக அளவில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைப்பது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் தசைகளை சிரமத்துக்கு ஆளாக்குவது நோக்கமாக இருக்கக் கூடாது என்றும் டயட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு மாதத்திற்கு அரிசி உணவை கைவிட வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும், மருத்துவ ஆலோசனைக்கு பிறகு இது போன்ற நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டி உள்ளனர்.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களையும் பின் தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE