இந்த அறிகுறி இருந்தா பக்கவாதம்! ஜாக்கிரதை!
ஸ்ட்ரோக் எனப்படுவது வந்துவிட்டால் பாதிக்கப்பட்டவரை விட சுற்றி உள்ளவர்களுக்கே பொறுப்பு அதிகம். அவர்கள் என்ன நடக்கிறது? என்பதை துரிதமாக உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும்.
பக்கவாதம் என்பது உடல் பாகங்களை செயலிழக்க செய்யும் ஒரு நோயாகும். குறிப்பாக கை, கால், வலது அல்லது இடது அல்லது இரண்டு பக்கமுமே என பல்வேறு வகைகளில் இது செயல்பாட்டை முடக்கி போட்டு விடும்.
கடந்த 30 ஆண்டுகளில் ஸ்ட்ரோக் மூலம் உடல் செயலிழப்பு பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக சர்வதேச தரவுகள் கூறுகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை ஒரு லட்சம் பேரில் 172 பேர் வரை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
இது குறிப்பாக பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
அதிகம் அறியப்படாத சில அறிகுறிகள் உள்ளன. அதை உணர்ந்து கொண்டு உடனடியாக செயல்பட வேண்டியது அவசியம்.
அறிகுறிகள்
பார்வையில் மாற்றம்
எண்ணங்களில் தடுமாற்றம்
மிகுந்த சோர்வு
பார்வைகள் தடுமாற்றம்
நடையில் தடுமாற்றம்
கடுமையான தலைவலி
திடீர் குழப்பம்
குளறுகின்ற பேச்சு
போன்றவற்றை அலட்சியம் செய்யாது அவை குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
துரிதமாக உணர்வது அவசியம்
ஒருவருக்கு ஸ்ட்ரோக் ஏற்படுகிறது என்றால் அவரைச் சுற்றியுள்ள நபர்கள் அவருக்கு என்ன நடக்கிறது? என்பதை துரிதமாக உணர்ந்து கொண்டால் மட்டுமே, அவரது உயிரை காப்பாற்ற முடியும். முகம் ஒரு பக்கமாக இழுப்பது, தோள்பட்டை பலவீனம் மற்றும் உணர்வின்மை, பேசுவதில் சிரமம், குழப்பம், பிறர் பேசுவதை புரிந்து கொள்ள இயலாமை, ஒரு கண் அல்லது 2 கண்பார்வையில் சிரமம் ஆகியவை குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தலையில் அடிபட்டால் ஸ்ட்ரோக் வருமா?
தலையில் பலமான காயம் ஏற்படும் போது ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று பல்வேறு ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. தலையில் பலமாக அடிபடுவதன் மூலம் மூளையிலும் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் மூளை பாதிக்கப்பட்டு மிகுந்த பின்விளைவு ஏற்படும். அதன் எதிரொலியாக ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தம் கட்டிக் கொள்ளும். இதுவே ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு ஏற்படுத்துகிறது.
முன்னெச்சரிக்கை தேவை
ஒரு நபருக்கு லேசான காயம் ஏற்படும் என்றால் அதற்கு சிகிச்சை தேவையில்லை. ரத்தக்கசிவு இருந்தால் சுத்தமான துணி வைத்து கட்டி அதை தடுக்க முயற்சி செய்ய வேண்டும். நோயாளிக்கு வாந்தி வந்தால் முன்பக்கமாக படுக்க வைத்து தலையை தூக்கி பிடிக்க வேண்டும். ஒரு பக்கமாக படுக்க வைக்க வேண்டும். தலையும் கழுத்தும் அதிகம் அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவசர சிகிச்சை அளிக்க வேண்டும்.
கோல்டன் ஹவர்
ஸ்ட்ரோக் வந்தால் 3:30 மணி முதல் 4 மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் சேர்த்து என்ன பிரச்சனை என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஸ்கேன் எடுக்கவும் சில நேரம் தாமதம் ஆகிவிடலாம். எனவே நொடியும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து ஸ்கேன் செய்து திராம்பலைஸ் அல்லது தேவையான ஊசியை போட்டு உடனடியாக குணப்படுத்தி விடலாம். அந்த பொன்னான நேரத்தை கடந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் பக்கவாத நோயாளியாகவே அவதிப்பட நேரிடும். சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களையும் பின் தொடருங்கள்.