ஒவ்வொருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்யும்போது அங்கு வரும் விருந்தினர்களை அதிக அளவில் பிரமிக்க வைக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். தங்களின் கவனிப்பும் அவர்களது மனதை தொட வேண்டும் என்று அதிக செலவுகளை செய்து வருகின்றனர்.

ஆனால் அவற்றில் எந்தெந்த செலவுகள் தேவையானவை? எது தேவையற்றவை என்பது திருமணம் முடிந்து ஓரிரு நாட்கள் கழித்து செலவு பட்டியலை எடுத்து பார்க்கும் போதுதான் எந்தெந்த இடங்களில் தேவையற்ற பணம் எங்கெல்லாம் அதிகம் செலவாகி இருக்கிறது என்பது தெரியும். அப்படி கிட்டத்தட்ட 125 திருமணங்களில் பட்ஜெட்களின் நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து பிரைட்ஸ் மெய்ட் கூறிய சில டிப்ஸ்கள் இதோ. திருமணத்தில் செய்யும் செலவுகளுக்கான டிப்ஸ் இதோ,

வெட்டிங் கோ-ஆர்டினேட்டர்

ஈவன்ட் மேனேஜ்மென்ட் வைத்து திருமணம் செய்ய முடியாமல் பலரும் சிரமப்படுவார்கள் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டாலும் திருமணத்தன்று அந்த ஏற்பாடுகள் சரிவர நடக்காமல் பிரச்சனைகளை சந்திப்பது அதிகம். எனவே ஒரு நாளைக்கு மட்டும் அங்கு பிரச்சனைகள் ஏதும் எழாமல் பார்த்துக் கொள்ள ஒரு வெட்டிங் பிளானரை அப்பாயிண்ட் செய்யலாம். இது எந்தவித சிரமமும் இன்றி திருமணத்தை ஸ்ட்ரெஸ் ஃப்ரீயாக நடத்த உதவும்.

திருமணம் நடக்கும் இடம்

வழக்கமான திருமண மண்டபம், பேங்க்வட் ஹால் தவிர்த்து சில புதுமையான இடங்களில் திருமணத்தை நடத்தினாலும் பட்ஜெட் குறையும் அதேசமயம் வரும் விருந்தினர்களையும் மனம் கவர்லாம். அந்த வகையில் ஒரு பூந்தோட்டம், கடற்கரை, லைப்ரரி, திரையரங்கு போன்ற இடங்களில் திருமணத்தை வித்தியாசமாக நடத்தலாம்.

வெளி அரங்கில் அல்லது திறந்தவெளி அரங்கில் நீங்கள் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தால் கூடுதலாக உள்ளரங்கிற்கு தேவையான பணத்தை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். காரணம் திடீரென பருவ நிலை மாறி மழை பெய்தால் வந்திருக்கும் விருந்தினர்களை மழையில் நனைய வைக்க முடியாது. எனவே இறுதி நேரத்தில் இந்த சங்கடங்களை தீர்க்க எப்போதும் கையில் ஒரு டெபாசிட் பணம் திருமணத்தின் போது இருந்து கொண்டே இருக்க வேண்டும்.


திறமையான புகைப்பட கலைஞர்

திறமையான புகைப்படக் கலைஞருக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் தகும் என்று சிலர் கூற கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அதிலும் மிக அழகாக போஸ்களை நட்மிடம் இருந்து வாங்கும் புகைப்படக் கலைஞர் திறமைசாலி. திருமண ஜோடியை வெறுமனே அவர்களின் உருவத்தை படம் படிப்பதை விட, அவர்களின் எமோஷனை படம் பிடிக்கும் வகையில் அழகிய புகைப்பட தொகுப்புகளை வழங்கும் போட்டோகிராபரை தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது அங்கு நடந்தவை பசுமையாக நினைவுக்கு வர வேண்டும். உங்கள் பட்ஜெட்டுக்குள் உங்களுக்கு ஏற்ற வெரைட்டியான ஸ்டைலில் ரசிப்பு தன்மையோடு புகைப்படங்களை எடுக்கிறார்களா என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும்.

போக்குவரத்து

திருமணம் செய்யும் இடம் வெகு தொலைவில் இருந்தால் பலரும் சங்கடப்பட்டு கொண்டே திருமணத்துக்கு வருவார்கள். அந்த சங்கடங்களை தீர்க்க முக்கியமான பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் தயாராக வாகனங்களை ஹையர் செய்து நிறுத்தி வைக்கலாம். இது விருந்தினர்களிடையே அதிக பாராட்டை பெற்று தரும் ஒரு விஷயமாகும்.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதளப்பக்கங்களைப் பின் தொடருங்கள்.

இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தைக் காண இங்கு கிளிக் செய்யவும். . .

Facebook
Instagram
YOUTUBE