தமிழ் மாதங்களில் 4-வது மாதம் ஆடி. இது சூரியனானது கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். இம்மாதம் முழுவதுமே அம்மன் வழிபாடு, முன்னோர் வழிபாடு என ஆன்மிக மாதமாகவே கடைப்பிடிப்பது வழக்கம்.

ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை என பல விழாக்கள் கொண்டாடப்படும். அம்மனுக்கு கூழ் வார்த்து வழிபடுவதும் இந்த மாதத்தில்தான். ஆனால், ஆன்மிகத்தில் சிறந்த மாதமாக இருந்தாலும், சுபகாரியங்கள் செய்வதில்லை.

ஜூலை 22-ல் ஆடிப்பூரம் என்பது ஆடியில் ஆண்டாள் அவதரித்த நாளாகப் பார்க்கப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்று என அன்னை எடுத்துச் சொன்ன ஆகஸ்ட் 1-ம் தேதி ஆடித்தபசாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி, உணவுக்கும், உழவுக்கும் ஆதாரமான காவிரிக்கு மரியாதை செய்யும் ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 9-ம் தேதி ஆடிக்கிருத்திகையாக வழிபடுகின்றனர்.

இறைவழிபாட்டுக்கான ஆடி

ஆடி மாதம் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என சாஸ்திரங்கள் கூறுவதாக ஒரு தகவல் உண்டு. ஆனால், இதை எதிர்மறையாகக் கருதாது இறைவழிபாட்டிற்கு என ஒதுக்கிய நாளாகக் கருத வேண்டும் என சில ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் வந்தாலும் ஆடி, புரட்டாசி, தை, மாசி, ஆகிய மாதங்களில் வரும் அமாவாசைகள் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தர்ப்பணம்

அமாவாசை தோறும் தர்ப்பணம் செய்து வழிபட இயலாதவர்கள் கூட குறைந்த பட்சம் மேற்சொன்ன 4 மாத அமாவாசைகளிலாவது முன்னோர் வழிபாடு செய்வதைப் பலரும் வழக்கமாகக் கடைப்பிடிக்கின்றனர். அதிலும், ஆடி அமாவாசைக்கு முன்னோர் தர்ப்பணம் பெரும்பாலான இந்துக்கள் வீடுகளில் நடைபெறும்.

ஆடி மாத பித்ரு வழிபாடுகளும், ஏழைகளுக்கு வழங்கும் அன்னதானம் உள்ளிட்ட தான தர்மங்களும் வருங்கால சந்ததியினருக்கும் புண்ணியத்தை சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.

2 முறை ஆடி அமாவாசை

பொதுவாக ஒரு சில மாதங்களில் ஆடி அமாவாசை வரும். அந்த மாதத்தை அதிக மாதம் என அழைப்பார்கள். அத்தகைய 2 அமாவாசை இந்த ஆண்டு ஆடி மாதமும் வருகிறது. அப்படியானால் எந்த தினத்தில் பித்ருக்கள் வழிபாடு செய்வது என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. ஆடி 1.,ம் தேதி அதாவது ஜூலை 17-ம் தேதி முதல் அமாவாசை வருகிறது. ஆடி 31-ம் தேதி அதாவது ஆகஸ்ட் 16-ம் தேதியும் அமாவாசை வருகிறது.

எது உண்மையான ஆடி அமாவாசை?

2 அமாவாசை தினங்கள் ஒரே மாதத்தில் வருவதால் எப்போது முன்னோர்களுக்கு சாமி கும்பிடுவது என்ற குழப்பத்தை த காரிகையின் தரவுகள் தீர்க்கின்றன. அதன்படி, இரண்டுமே முன்னோர் வழிபாட்டுக்கு உரிய அமாவாசை தினம்தான். ஆனால், 2.வதாக வரும் ஆடி அமாவாசையே பித்ருக்கள் வழிபாட்டுக்கு உகந்ததாகக் கூறப்படுகிறது.

எப்படி கணக்கிடுவது?

ஒரு மாதத்தில் 2 நாட்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் போது அதில் 2-வது முறை வருவதையே பலரும் கணக்கில் கொள்கிறார்கள். இதுபோன்றே பித்ரு வழிபாட்டுக்கு 2.வது அமாவாசை உகந்ததாக கணிக்கின்றனர்.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களையும் பின் தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE