எயிட்ஸால் எலும்பும் தோலுமாக தவித்து இறந்த கிளாமர் நடிகை?
சினிமாவின் புகழ் வெளிச்சம் பட்டு விட்டால் அவர்கள் சுகபோக வாழ்வு வாழ்வதாக பலரும் நினைத்திருக்கலாம். எங்கு சென்றாலும் ஸ்பாட்லைட் மிளிரும் என்றும் மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்க முற்படுவார்கள் என்றும் சினிமா இண்டஸ்ட்ரி ஒரு விதமான காட்சி அமைப்பை நமக்குள் புகுத்தி இருக்கிறது.
ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள் வெற்றி படிக்கட்டில் ஏறிக்கொண்டே இருப்பார்கள் என்றும் பார்ப்போர் கண் எல்லாம் பட்டுவிடும் அளவுக்கு அவர்களது வாழ்க்கை இருக்கும் என்ற ஒரு எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு சில நடிகர் நடிகைகள் மிக மோசமான முறையில் அதுவும் குறிப்பாக கிளாமர் இண்டஸ்ட்ரியில் தோல்வியுற்று மடிந்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் என பல முன்னணி நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்வது போன்ற கிளாமர் காட்சிகளில் நடித்தவர் நிஷா நூர். இவர் பாலச்சந்திரன், விசு, சந்திரசேகர் உள்ளிட்ட பல்வேறு இயக்குனர்களின் பல வெற்றி படங்களில் நடித்தவர்.
நாகப்பட்டினத்தில் பிறந்த இவர் தனது 18 வயதில் மங்களநாயகி என்ற தமிழ் திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். இதை அடுத்து முயலுக்கு மூணு கால், இளமைக் கோலம், எனக்காக காத்திரு, டிக் டிக் டிக், மானாமதுரை மல்லி, இனிமை இதோ இதோ, அவள் சுமங்கலி தான், ஸ்ரீ ராகவேந்தர், கல்யாண அகதிகள், அவள் ஒரு வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நிஷா நடித்தார். கிட்டத்தட்ட 1980 முதல் 1995 வரை ஏராளமான படங்களை கிளாமர் ரோலிலும் தைரியமான பெண் கதாபாத்திரத்திலும் நிஷா நூர் நடித்தார்.
ஆனால், அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கான பட வாய்ப்புகள் குறைந்து போனது. ஒரு காலகட்டத்தில் முற்றிலும் பட வாய்ப்புகள் நின்று போயின. கையில் சேர்த்து வைத்திருந்த பொருளும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விட, நண்பர்களும் உறவினர்களும் விலகினர்.
வருமானத்துக்கு வழியின்றி தவித்த அவரை தயாரிப்பாளர் ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட வைத்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக எச்ஐவி எய்ட்ஸ் நோயால் அவர் பாதிக்கப்பட்டதாகவும், எலும்பும் தோலுமாக மாறி பசியிலும் வறுமையிலும் தவித்ததாகவும் கூறப்படுகிறது.
கவனிப்பார் இன்றி தர்கா வாசலின் வெளிப்புறத்தில் நிஷா நூர் அடையாளம் தெரியாத வகையில் படுத்து கிடந்திருக்கிறார். இதனை கண்ட தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நிஷா நூரை அழைத்துச் சென்று தாம்பரத்தில் ஒரு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் நிஷா நூரை யாரும் வந்து கவனிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பல கிளாமர் நடிகைகளை போன்று நிஷாவும் தனது இறுதி காலத்தில் தனிமையிலும் வறுமையிலும் உயிரை விட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.