பள்ளிக்கூடங்கள் மீண்டும் தொடங்கிவிட்டன. என்னதான் பள்ளி தொடங்கும் முன்பே சில புதிய ரெசிபிக்களை தெரிந்து கொண்டு சமைத்துக் கொடுத்து அசத்தியிருப்பீர்கள். ஆனால், குழந்தைகளுக்கு ரிப்பீட்டட் ஆகக் கொடுக்கும் உணவால் அவர்களுக்கும் போரடித்துப் போயிருக்கும். எனவே, இங்கு அதிக புரோட்டீன் நிறைந்த உணவு மெனுக்களை இங்கு உங்களுக்கு வழங்குகிறது த காரிகை.

பன்னீர் புர்ஜி

சூடான வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், 1 டீஸ்பூன் வெண்ணெய், சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சிம்மில் வைத்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் கடலை மாவு சேர்த்து கிளறி தக்காளியையும் போட்டு வதக்க வேண்டும். குடைமிளகாயை போட்டு வதக்கி, அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, உதிர்த்த பன்னீரை சேர்க்கவும். கிளறியபின் மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 2 நிமிடம் வேக வைக்கவும். பன்னீரை அதிகம் வேகவைத்தால் ரப்பர் போலாகிவிடும். பின் அதில், கரம் மசாலா, கசூரி மெத்தி,கொத்தமல்லி தூவி கிளறிவிடவும். இந்த பன்னீர் புர்ஜி சப்பாத்திக்கு மிக சுவையாக இருக்கும்.

சிக்கன் மயோனைஸ் சேன்ட்விச்

மிஞ்சிப் போன சிக்கன் அல்லது கிரில் சிக்கனைத் துருவிப் போட்டு, 10 நிமிடங்களில் செய்துவிடலாம் சிக்கன் மயோனைஸ் சேன்ட்விச். போன்லஸ் சிக்கன் பிரெஸ்ட் அல்லது தைஸ்-ஐ துருவிக் கொள்ளவும். மயோனைசைச் சேர்த்து பூண்டு துருவிப் போட்டு சிக்கனுடன் கலக்கிக் கொள்ளவும். குருமிளகு, உப்பு, சிவப்பு சில்லி ஃபிளேக்ஸ் போட்டு மிக்ஸ் செய்து கொள்ளவும். புதினா சட்னி தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். பின் பட்டரைத் தடவிய பிரெட்டுக்குள்ளோ, பன்னுக்குள்ளோ ஸ்டஃப் செய்து கிரில் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ஓட்ஸ் பேன் கேக்

பாலை காய்ச்சி ஆற வைக்கவும். ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸுடன் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து காய்ச்சி ஆறிய பாலை ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும். தோசை கல்லில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை சிறிய தோசை போல வார்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு, மறுபக்கத்தையும் வேகவிட்டு எடுக்கவும். மேப்பிள் சிரப் அல்லது தேனை பான் கேக் மேலே ஊற்றி பரிமாறவும். குழந்தைகளுக்கேற்ற அருமையான சிற்றுண்டி இது.

இதுபோன்ற டிப்ஸ்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE