விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது சூப்பர் ஹிட் சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் 4 சகோதரர்களில் ஒரு தம்பியான ஜீவாவின் மனைவியாக அதாவது மீனா என்ற கதாபாத்திரத்தில் ஹேமா ராஜ்குமார் என்பவர் நடிக்கிறார்.

“ ஹேமா ஒரு முறை தனது தாய் வீட்டில் எடுத்த வீடியோவைப் பகிர்ந்த போது ஏழ்மை நிலை கண்டு பலரும் அவருக்கு உத்வேகம் அளித்தனர். இன்று அவரது சொந்த வீடு கிரகப்பிரவேசத்துக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். “

யூடியூப் சேனல்

கோவிட் காலத்தில் பல பிரபலங்கள் YouTube சேனல் தொடங்கியது போலவே ஹேமாவும் ஹேமாஸ் டைரி என்ற பெயரில் ஒரு யூ ட்யூப் சேனல் நடத்தி வருகிறார். இதில் தனது லைஃப் ஸ்டைல் விலாக்குகளையும் தான் புதிதாக கட்டிவந்த வீடுகளையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.

கிரகப்பிரவேசம்

வீட்டின் பல்வேறு அப்டேட்டுகளை பகிர்ந்து வந்த ஹேமா திடீரென கிரகப்பிரவேச வீடியோவை களம் இறக்கி உள்ளார். அதிக அளவு எதிர்பார்க்கப்பட்ட இந்த கிரகப்பிரவேசத்தை மிகவும் சிம்பிளாக முடிந்து விட்டதாகவும் ஹேமா கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், அதனை பிரம்மாண்டமான வீடியோவாக எதிர்பார்த்து காத்திருந்தனர். அவரது கமெண்ட் செக்ஷன்லும் அடிக்கடி வீடு பற்றிய அப்டேட்டுகளை கேட்டு வந்தனர். ஆனால், பொசுக்கென கிரகப்பிரவேசம் முடிந்து விட்டதாக அவர் போட்ட வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் இருந்தாலும் ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.

“கிரகப்பிரவேசத்தை பெருசா யார்கிட்டயும் சொல்லல” என்று அவர் அதில் விளக்கமும் கொடுத்துள்ளார். மேலும் அந்த வீட்டுக்கு இதுவரை மாற்றலாகி செல்லவில்லை என்றும் இன்னும் ஒரு சில வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் அனைத்தும் முடிந்த பின்பே குடிபோக திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் தாங்கள் தேடி தேடி கடை கடையாக ஏறி இறங்கி வாங்கிய லைட்களின் தொகுப்புகளை அவர் பகிர்ந்து உள்ளார் ஏற்கனவே வீடு கட்டுவது, ஃபால்ஸ் சீலிங் போன்ற பல்வேறு வீடியோக்களை அவர் பகிர்ந்து இருந்த நிலையில் இந்த லைட்டிங் தொடர்பான வீடியோக்களுக்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது

சிறுவயதில் இருந்து வீட்டை சுற்றி காம்பவுண்ட் கட்ட வேண்டும், அதில் அழகாக லைட் வைக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருந்ததாகவும் நைட் லைட் போடும்போது வீடே அழகாக தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்

பால் சீலிங் லைட் கலக்சன்

ஸ்டெப்ஸ் லைட் குட்டி லைட் சான்டலியர் லைட் என ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி பார்த்து பார்த்து லைட்டுகளை தேர்ந்தெடுத்து வாங்கியதாக அவர் கூறியுள்ளார். இதற்காகவே ஃபால்ஸ் சீலிங் அதிக முக்கியத்துவம் கொடுத்து லைட்டுக்களை வாங்கி போட்டதாகவும் கூறியுள்ளார்

கிச்சனில் பவர் லைட் ட்யூப் லைட் மட்டுமின்றி சிம்னிக்கு அடியிலும் ஒரு லைட் இருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்

வீட்டின் வரவேற்பு அறையில் ஒரு சாண்டலியர் லைட்டும், கிரவுண்ட் ஃப்ளோரில் இருந்து பார்த்தால் சீலிங்கில் தெரிவது போன்ற மற்றொரு அழகிய இலை போன்ற சாண்டலியரும் அவர் பொருத்தியுள்ளார்.

இது போன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE