இந்த அறிகுறி இருக்கா? உடனே ப்ரோட்டீன் செக் பண்ணுங்க

உடலின் ரத்த ஓட்டத்துக்கு புரதச்சத்தானது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். குறிப்பாக உடலில் சீரான செயல்பாட்டுக்கு தினமும் குறைந்தது 50 கிராம் புரதமாவது உடலில் எடுத்துக் கொள்ள வேண்டும் அப்படி உடலில் புரதச்சத்து குறைந்து இருப்பதை சில அறிகுறிகள் உணர்த்தும். அவை என்னென்ன அறிகுறிகள் என்பதை தற்போது பார்க்கலாம்.

இனிப்பு மோகம்

உடலில் புரதச்சத்து குறைவது இனிப்பு உணவுகள் மீதான மோகத்தை அதிகரிக்கும். இது நீரிழிவு நோய்க்கு கூட வழி வகுக்கலாம். இனிப்பு உணவுகளை மட்டுமே சாப்பிடுவதும் இதன் வெளிப்பாடாகும்.

தசை வலிமை

தசை வலிமைக்கு புரோட்டின் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே உடலில் புரோட்டின் அளவு குறையும்பொழுது தசைகள் பலவீனமாக கூடும். உடலில் தசை இழப்பை காணும் பட்சத்தில் உணவு முறையில் அதிக அளவு ப்ரோட்டினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எலும்பு பிரச்சனை

எலும்பு செல்களின் சீரான அமைப்புக்கு புரதச்சத்து அவசியம். கீழே விழுந்தால் விரைவில் எலும்பு முறிவு ஏற்படக்கூடும் என்ற அபாயத்தை இது அதிகரிக்கும். எனவே எலும்புகளுக்குள் அடிக்கடி வலி ஏற்பட்டால் உணவு முறையில் தேவையான அளவு ப்ரோட்டீனை அதிகரிக்க செய்யுங்கள்

எதிர்ப்பு சக்தி குறைவு

உடலில் எதிர்ப்பு சக்தி குறைவது புரதச்சத்து குறைவதற்கான முக்கியமான அறிகுறியாகும். அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற பாய் பாதிப்புகளும் இதற்கு அறிகுறியாக இது காண்பிக்கும்

பசி

உடலில் போதுமான அளவு புரதச்சத்து கிடைக்காதது பசியை அதிகரிக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் எப்போதும் பசியோடே அலைந்து கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வை தூண்டும் எனவே தேவையற்ற உணவுகளை உட்கொள்ள செய்துவிடும். அதனால், உடல் எடை அதிகரிக்கும் தவிர வலு குறைந்து விடும்.

முடி கொட்டுதல்

வழக்கத்துக்கு மாறாக முடி கொட்டுதல் அதிகமாக இருந்தால் அல்லது சருமம் மற்றும் நகத்தின் ஆரோக்கியம் குறைந்து இருந்தால் அங்கே புரோட்டின் தேவைப்படுகிறது என்று உடல் கூறும் ஒரு அறிகுறி மொழியாகும். எனவே உடலில் புரதச்சத்து குறைவதை தவிர்த்து தேவையான அளவு புரோட்டினை எடுத்துக் கொள்ளவும்.

சோர்வு

உடல் பலவீனமாக உணர்வது புரத சத்து இழப்பின் ஆரம்ப கட்ட அறிகுறி ஆகும். எனவே உடல் அடிக்கடி சோர்ந்து போனால் ஆற்றல் குறைந்து இருந்தால் தேவையான அளவு புரோட்டினை சாப்பிடுங்கள்

உடலில் ஆரோக்கியத்தை வலுப்படுத்த ப்ரோட்டீன் அவசியம் எனவே பருப்பு அல்லது சிக்கன் போன்ற உணவுகளின் மீதான நாட்டத்தை அதிகரிக்கும் அவ்வாறான உணர்வு உடலுக்கு புரோட்டின் தேவைப்படுகிறது என்பதை சொல்லும் மறுமொழியாகும்.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் சமூக வலைதளப்பக்கங்களைப் பின் தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE