லன்ச் பாக்ஸில் கொடுக்கக்கூடாத உணவுகள்
குழந்தைகளுக்கு என்ன விதமான லஞ்ச் கொடுத்து அனுப்புவது என்பதுதான் பெரும்பாலான தாய்மார்களுக்கு அன்றைய தினம் பெரும் யோசனையாக இருக்கும். சில சமயத்தில் நேரம் இன்மை காரணமாக சில ஆரோக்கியமற்ற உணவுகளையும் கூட லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்புவதும் நடக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒரு சில உணவுப் பொருட்களை கொடுக்கவே கூடாது என்ற பட்டியலும் உள்ளது. ஆனால் அது பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரிவதில்லை அதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறது த காரிகை .
என்னென்ன உணவுகளை லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்
நூடுல்ஸ் என்பது பெரும்பாலான குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும் ஆனால் அதில் empty calories தான் அதிகம் உள்ளது. எனவே, மதிய உணவாக லஞ்ச் பாக்ஸ்-ல் இதனை கொடுத்து அனுப்புவதன் மூலம் ஊட்டச்சத்து குறைவது மட்டுமின்றி கடுமையான பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
முந்தைய நாள் உணவு
ஒரு சில பெற்றோர்கள் சமைப்பதற்கு நேரமின்மையால் முந்தைய நாள் செய்த உணவுப் பொருட்களை லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்புவர். உதாரணமாக முந்தைய தினம் செய்த கறி, காய்கறி உள்ளிட்டவற்றை லஞ்ச் பாக்ஸில் அடைத்து கொடுப்பார்கள். என்னதான் காலையில் அதை சூடு செய்தாலும், அதில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் முற்றிலும் அழிந்து விடாது. எனவே பிரெஷ் ஆன உணவை மட்டுமே குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்புவது நல்லது. ஃபுட் பாய்சன் ஆகி வாந்தி வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளை இழுத்து விடாமல் இருக்க ஃபிரஷ் ஆன உணவுகளே எப்போதும் கைகொடுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.
வறுத்த உணவுகள்
குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த உணவுகளில் ஒன்று பிரெஞ்ச் ப்ரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், வறுத்த சிக்கன் உள்ளிட்டவை. ஆனால் அவை உடலுக்கு தீங்கு விளைவுக்கும் பல்வேறு கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவாகும். இது ஆரோக்கியத்தை குறைத்து உடல் எடையை அதிகரிக்க உதவும். மேலும் குடல் செரிமானத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பிரஷ் இல்லாத பாக்கெட்டுகளில் அடைத்து ஃப்ரீசரில் வைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியமும் செயற்கை ரசாயன சேர்க்கைகளும் அதிகம் இருக்கும். இதனை நீண்ட நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் நலத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.
.
நொறுக்கு தீனி
பிஸ்கட் சிப்ஸ் கேக் உள்ளிட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகளில் குழந்தைகளை கவர அதிக அளவு உப்பு சர்க்கரையோ சேர்க்கப்பட்டிருக்கும். சர்க்கரை என்பது புற்றுநோய் செல்களுக்கு மிகவும் பிடித்ததாகும் எனவே அந்த சர்க்கரையை அதிகம் உட்கொண்டு புற்றுநோயும் மிக விரைவாக உடலில் பரவக்கூடும். எனவே குழந்தைகள் இதனை சாப்பிடுவது ஒருபோதும் நன்மை தராது.
எனர்ஜி ட்ரிங்குகள்
பாட்டில்களில் அடைக்கப்பட்ட எனர்ஜி பானங்களை தினமும் குடிப்பது நல்லதல்ல எப்போதாவது ஒருமுறை குழந்தைகளுக்குக் கொடுத்தாலும் அதனை மீண்டும் மீண்டும் கேட்கும் போது பெற்றோர்கள் வேறு வழியின்றி வாங்கி கொடுக்கின்றனர் ஆனால் இதில் நன்மைகள் அதிகம் உள்ளதை விட தீமைகளை அதிக அளவு உள்ளது மேலும் இதில் தேவைக்கும் அதிகமாக சர்க்கரை அளவும் காஃபின் அதிகமாக இருக்கும்.
ஜெல்லிகள்
குழந்தைகளுக்கு பிடிக்கிறது என்பதற்காக மிட்டாய், ஜெல்லி உள்ளிட்ட உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதில் லஞ்ச் பாக்ஸ்க்கு மட்டுமல்ல தினம் தோறும் அன்றாட வாழ்விலும் கூட இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இதில் அதிகப்படியான சர்க்கரை தேவையற்ற ரசாயனங்கள் உள்ளிட்டவை இருக்கும். உடலில் பல்வேறு மோசமான விளைவுகளையும் இது ஏற்படுத்தும்.
என்னதான் கொடுக்கலாம்
குழந்தைகளுக்கு அதிகம் புரோட்டின் கார்போஹைட்ரேட் வைட்டமின்கள் அடங்கிய உணவுப் பொருட்களை கொடுக்கலாம். பழங்களும் காய்கறிகளும் தானிய வகைகளும் தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்வதை மறக்க வேண்டாம்.
இதுபோன்ற டிப்ஸ்களை அதிகம் தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்.