மருத்துவரிடம் செல்லும் போது அவர்கள் நாக்கை நீட்டுமாறும், கழுத்தை அழுத்திப் பார்த்தும் என்ன பிரச்னை என்பதை விசாரிப்பார்கள். அதற்குக் காரணம் கழுத்தின் வடிவம், நெறி கட்டி இருப்பது உள்ளிட்டவற்றை வைத்தே பிரச்னைகளைக் கண்டறிய முடியுமாம். என்னென்ன அறிகுறிகள் இருந்தால், என்னென்ன நோய்கள் என்பதைத் தற்போது த காரிகையின் சிறப்புத் தொகுப்பில் காணலாம்.

கழுத்தின் தோற்றத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைக் கண்காணித்தால், பிரச்னைகளையும் முன்கூட்டியே அறிந்து தீர்வு காண உதவும். எனவே, இந்த பயனுள்ள கட்டுரையை கீழே கொடுத்துள்ள சமூக வலைதளங்களில் நீங்களே பகிரலாம்.

தொண்டையில் கட்டி

கழுத்தின் கீழ் பகுதியில், அதாவது தொண்டைப் பகுதியில் கட்டி போன்று தோன்றுவது தைராய்டு பாதிப்பைக் குறிக்கலாம். எச்சிலை விழுங்கும்போது அந்த கட்டியானது மேலும், கீழும் நகர்வதைப் பார்க்க முடியும். அந்தக் கட்டியே அளவில் சற்று பெரியதாக இருக்குமானால், மூச்சுவிடக் கூட சிரமம் ஏற்படக் கூடும். கவனம்.

வீங்கிய நிணநீர்

கழுத்துப் பகுதியில் வீங்கிய நிணநீர் முனைகள் தோன்றக் கூடும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதைக் குறைக்கும்.

நிணநீர் முனைகளின் அளவு பெரிதாக இருந்தால் கவனம். அது கழுத்துப் புற்றுநோய் பாதிப்பாகக் கூட இருக்கலாம்.

பல் சிகிச்சைக்குப் பின் வீக்கம்

பொதுவாக பல்லை சுத்தம் செய்யும் சிகிச்சைக்குப் பின் கழுத்தில் வீக்கம் ஏற்படும். அதற்குக் காரணம் சுத்தம் செய்த பின் பாக்டீரியா கிருமிகள் தொண்டை வழியே செல்லும். ரத்தத்திலும் கலக்கும். பின், அது கழுத்தில் வீக்கத்தை ஏற்படுத்திடக் கூடும்.

கயிறு போன்ற வீக்கம்

கழுத்தில் ஒரு கயிறு போன்ற வடிவில் பக்கவாட்டில் வீக்கம் இருக்கலாம். இதற்குக் காரணம், இதயப் பிரச்னையாக இருக்கலாம். இதயம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பம்ப் செய்யும் பணியை செய்யும். அந்தப் பணியில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், கழுத்தில் நரம்புகள் கயிறு போன்று வீங்கியிருக்கும்.

கழுத்து பெரிதாகுதல்

கழுத்தின் சராசரி அளவு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடும். அதாவது ஆண்களுக்கு கழுத்தின் அளவு 17 இன்ச்சும், பெண்களுக்கு 16 இன்ச்சும் இருக்கும். அந்த அளவு பெரிதாக இருந்தால் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.

வலுவான நரம்புத் துடிப்பு

கழுத்தில் சில சமயம் வலுவான நரம்புத் துடிப்பு இருக்கலாம். அவ்வாறு இருந்தால், பெருநாடி அல்லது பெருந்தமனியானது இரத்தக் கசிவால் வழக்கத்தை விட அதிகமாகத் துடிக்கும். கரோடிம் தமனியில் கட்டியையும் இது குறிக்குமாம்.

கழுத்தைச் சுற்றி கருமை

கழுத்தைச் சுற்றி கருமை ஏற்படுவதற்கு அகன்தோசிஸ் நைக்ரிகன்ஸ் என்ற பாதிப்பு காரணமாக இருக்கலாமாம். இதை கவனிக்கத் தவறினால் நாளடைவில் பிரச்னையாக மாறலாமாம். சர்க்கரை நோய் அபாயத்தையும் இது குறிக்கலாம்.

எனவே இதுபோன்ற பிரச்னைகளை உதாசீனப்படுத்தாமல் மருத்துவரிடம் அடுத்த விசிட்டின் போது உங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்யமான வாழ்க்கை வாழ த காரிகை உங்களை வாழ்த்துகிறது!.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE