நடிகர் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவித்தார். அவர்களை நேரில் அழைத்து பாராட்டி பொன்னாடை போர்த்தி பரிசுத்தொகை கொடுத்து, புகைப்படங்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் போஸ் கூட கொடுத்து மகிழ செய்தார்.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.

வைர நெக்லஸ் பரிசு

பொதுத்தேர்வில் தமிழகத்திலேயே முதன்முறையாக 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸ் பரிசளித்தார். அங்கு அழைக்கப்பட்டு வந்திருந்த 1339 மாணவ மாணவிகளுக்கும் தலா ரூ.5,000 பரிசு தொகையாக வழங்கினார். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்.

விழாவில் அட்வைஸ் சொன்ன விஜய்

மாணவர்களுடனான சந்திப்பில் தனது அறிவுரைகளை நடுவர் விஜய் பகிர்ந்து கொண்டார். “எனது அட்வைஸ் பிடிக்காவிட்டால், முதலிலேயே சொல்லிவிடுங்கள். படிப்பு என்பது யாராலும் பறிக்க முடியாது. ஒரு படத்துல என்ன கவர்ந்த டயலாக் ஒன்னு இருக்கு. நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துப்பாங்க. ரூவா இருந்தா புடுங்கிப்பானுங்க. படிப்ப மட்டும் எவனாலும் எடுக்க முடியாது. அதனால படிப்ப மட்டும் ஒரு போதும் கை விடாதிங்க. சொத்து, செல்வம் போனா பிரச்சனை இல்ல. உடல்நலம் போனா கொஞ்சம் பிரச்சனைதான். ஆனால், குணம் பறிபோச்சுனா எல்லாமே பறிபோயிடும்” என்றார்.

அம்பேத்கர் பெரியாரைப் படி

“பள்ளிப் பாடங்களான பயாலஜி, கெமிஸ்ட்ரி மட்டுமின்றி அம்பேத்கர் பெரியார் போன்ற தலைவர்களையும் படிங்க” என விஜய் மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

வருங்கால வாக்காளர்கள்

“ஓட்டுக்கு பணம் வாங்குவது என்பது நமது விரலைக் கொண்டு நம் கண்ணையே குத்திக் கொள்வது போன்ற செயல். எனவே இனிமேல் உங்க அம்மா அப்பா கிட்ட யார்கிட்டயும் பணம் வாங்காமல் ஓட்டு போட சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டார் விஜய்.

மாணவர்களுக்கான ஏற்பாடு

வெளியூர்களில் இருந்து வரும் மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் தங்க மண்டபத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களுக்கு அறுசுவை சைவ உணவும் வழங்கப்பட்டது.

என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டன?

  1. ஜம் ஜம் ஸ்வீட்
  2. மாங்காய் ஊறுகாய்
  3. இஞ்சி புளி புதினா துவையல்
  4. தயிர் பச்சடி
  5. கதம்ப பருப்பு பொறியல்
  6. உருளை பட்டாணி வறுவல்
  7. சவ் சவ் கூட்டு
  8. காளிஃபிளவர் பக்கோடா
  9. வெஜ் புலாவ்
  10. கத்தரிக்காய் காரக்குழம்பு
  11. மாங்காய் முருங்கை சாம்பார்
  12. தக்காளி ரசம்
  13. ஆனியன் வடை
  14. அப்பளம்
  15. பாயாசம்
  16. மோர்

ஏன் வெஜ்?

சந்திப்பு நடந்த தினம் அமாவாசை என்பதாலும், நிகழ்ச்சி நடந்த ஆர்.கே.கன்வென்சன் சென்டரில் அசைவம் சமைக்க அனுமதி கிடையாது என்பதாலும் சைவ உணவு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

எவ்வளவு செலவாச்சு?

  • மண்டபம் – 56 லட்சம்
  • 6 ஆயிரம் பேருக்கு உணவு – 10 லட்சம்
  • உணவு தயார் செய்தவர்களுக்கு சம்பளம் – 5 லட்சம்
  • 1339 மாணவர்களுக்கு தலா ரூ.5,000 வீதம் – 67 லட்சம்

அதுபோக திண்டுக்கல் நந்தினிக்கு வைர நெக்லஸ் வாங்கிய செலவும், மாணவர்களை அழைத்து வந்த செலவுகளும் சேர்த்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விழாவுக்கான அனைத்து செலவுகளும் மேற்கொள்ளப்பட்டது.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற பக்கங்களைப் பின் தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE