பிரபலங்கள் பெரும்பாலும் தங்களது தோற்றத்தில் அதிக முக்கியத்துவம் காட்டுவார்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதற்கு ஏற்ப, பலரும் தங்களது உடல் நலனில் அதிக அக்கறைக் காட்டி வருவார்கள். அப்படி பேணிப் பாதுகாத்து வரும் தங்களது உடல் மீது அதிக அக்கறை கொண்டிருப்பர். ஆனால், அதையே விட்டுக் கொடுக்கும் வகையில் பல பிரபலங்களும் தங்களது உடல் உறுப்புக்களைத் தானம் செய்துள்ளனர்.

பொதுவாக நடிகர், நடிகையர்கள் விளம்பரப் படங்களில் நடிக்க பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுப்பதும் ஒரு காரணம். அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல இன்ஃபுளூயன்ஸ் செய்யும் சக்தி உள்ளதால்தான். நடிகர்கள் செய்வதையே அவர்களது ரசிகர்களும் பின்பற்றும் அளவு அவர்களது மீது அதீத அன்பு கொண்டுள்ளனர். எனவேதான், பிரபலங்கள் தங்கள் வாழ்வில் எப்போதும் ஒரு சிறந்த முன்னோடியாக இருக்க ஆசைப்படுகின்றனர்.

இந்தியத் திரையுலகில், தங்களைப் பார்த்தாவது தங்கள் ரசிகர்கள் பலரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருவார்கள் என்ற நம்பிக்கையில் பலரும் தங்களது இறப்புக்குப் பின் உடலில் உள்ள உறுப்புக்களை தானம் செய்ய எழுதிக் கொடுத்துள்ளனர். அவர்கள் யார்? யார்? என்பதை த காரிகையின் சிறப்புக் கட்டுரையில் பார்க்கலாம்.

அமிதாப் பச்சன்

இந்தித் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட பிரபலம் நடிகர் அமிதாப் பச்சன். இவர் தனது மறைவுக்குப் பின் தன் உடல் உறுப்புக்களைத் தேவைப்படுவோருக்கு தானமாக வழங்குவதாக உறுதியேற்றுள்ளார்.

பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ராவின் குடும்பத்தில் பெரும்பாலானோர் மருத்துவர்கள். எனவே, அவருக்கும் உடல் உறுப்பு தானம் பற்றிய போதிய விழிப்புணர்வு இருந்ததால் அவர் தனது உடல் உறுப்புக்களை தானமாகக் கொடுத்துள்ளார். தன் இறப்பால் சமூகத்தில் ஒரு மாற்றம் வரும் எனவும் உடல் உறுப்பு தானம் பற்றி அவர் உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளார்.

சல்மான் கான்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் போன் மேரோ என்ற எலும்பு மஜ்ஜைமாற்று தேவைப்படும். இந்த நிலையில், நடிகர் சல்மான் கான் தனது எலும்பு மஜ்ஜையை தானம் செய்வதாகக் கூறியுள்ளார். இது முற்றிலும் செலவற்றது என்றும் தனது ரசிகர்களுக்கு அவர் ஊக்கம் அளித்துள்ளார். அனைவரும் தங்களது எலும்பு மஜ்ஜையை தானம் செய்ய வேண்டும் என்றும் சல்மான் கோரியுள்ளார்.

அமிர்கான்

சல்மான்கானைத் தொடர்ந்து அமிர்கானும் தனது உடல் உறுப்புக்களை தானமாக வழங்குவதாக உறுதியேற்றுள்ளார். 2014-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த உடல் உறுப்பு தான தினத்தில் அவர் இந்த உறுதிமொழியை ஏற்றுள்ளார்.

மாதவன்

நடிகர் மாதவனும் தனது உடல் உறுப்புக்களான கண்கள், இதயம், நுரையீரல், கிட்னி, ஈரல், கணையம், எலும்பு, குறுத்தெலும்பு உள்ளிட்டவற்றை தானமாக வழங்குவதாக விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சுனில் செட்டி

நடிகர் சுனில் செட்டி தனது கண்களை தானமாக வழங்குவதாக உறுதியேற்றுள்ளார்.

ராணி முகர்ஜி

நமது இரு கண்களை தானமாகக் கொடுத்தால் 4 பேருக்கு பார்வை கிடைக்கும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் நடிகை ராணி முகர்ஜி. எனவே, தானும் தனது கண்களை தானமாக வழங்குவதாக உறுதியேற்றுள்ளார்.

விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டாவும், அவரது தாயாரும் தங்களது இறப்புக்குப் பின் உடல் உறுப்புக்களை தானமாக வழங்குவதாக நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக அறிவுத்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அழகான நீல நிறக் கண்கள் உண்டு. அதனை இந்தியன் ஐ ஃபவுண்டேசனுக்கு தானமாக வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

புனீத் ராஜ்குமார்

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரும் தனது இறப்புக்குப் பின் கண்களை தானமாக வழங்கினார்.

ஆல்யா பட்

உலக கிட்னி தினத்தன்று தனது உடல் உறுப்புக்களை தானமாக வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார் நடிகை ஆல்யா பட்.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் சமூக வலைதளப்பக்கங்களையும் பின் தொடருங்கள்!

You may have missed

Facebook
Instagram
YOUTUBE